Close Menu
    What's Hot

    பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

    இந்தியா- நெதர்லாந்து இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கூட்டணி விவகாரத்தில் கோட்டை விட்ட தவெக!. விஜய் தீவிர ஆலோசனை?.
    தமிழ்நாடு

    கூட்டணி விவகாரத்தில் கோட்டை விட்ட தவெக!. விஜய் தீவிர ஆலோசனை?.

    Editor web3By Editor web3March 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay meeting
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகம், கூட்டணி விவகாரங்களில் எதிர்பார்த்த முன்னேற்றத்தைக் காணாதது அக்கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பவர் ஷேரிங்’ (ஆட்சியில் பங்கு) என்ற கவர்ச்சிகரமான வாய்ப்பை முன்னிறுத்தியும், பெரிய கட்சிகள் எதுவும் இதுவரை தவெக பக்கம் வராதது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய்,  மூத்த நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி குறித்த தெளிவான முடிவு எட்டப்படாதது அக்கட்சியினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    முன்னதாக, தவெக மாநாட்டிற்குப் பிறகு விஜய்க்கு ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்து வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் “நம்ம வீட்டுப் பிள்ளை” எனப் பாராட்டிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தற்போது மாற்று அணிகளில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளனர். குறிப்பாக, தேமுதிக தரப்பு திமுக தலைமையிலான அணியுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வருவது தவெகவிற்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே தவெகவுடன் பேசப்பட்டு வந்த சிறிய கட்சிகளும், தற்போதைய அரசியல் சூழலில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள பழைய கூட்டணிகளையே தேர்வு செய்து வருகின்றன.

    மறுபுறம், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்ததால், காங்கிரஸ் கட்சி தவெகவுடன் இணையக்கூடும் எனப் பலமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த மார்ச் 4-ஆம் தேதி திமுக – காங்கிரஸ் இடையே 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் என ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதனால் கடைசி நேர வாய்ப்பும் கைநழுவிப் போனது குறித்து விஜய் தனது நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. நாம் கோட்டை விட்டது எங்கே? திட்டமிடலில் ஏதேனும் தவறு நடந்ததா? அல்லது ‘பவர் ஷேரிங்’ கொள்கையில் மாற்றம் தேவையா? என்பது குறித்து தவெக தலைமை தீவிரமாகப் பரிசீலித்து வருவதால், வரும் நாட்களில் தவெகவின் அரசியல் நகர்வுகளில் அதிரடி மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி!. இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள்?.  
    Next Article உலகப் போரையே நிறுத்திய பெண்கள்… வரலாறு தெரியுமா? 
    Editor web3
    • Website

    Related Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    May 17, 2026

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    May 17, 2026

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

    இந்தியா- நெதர்லாந்து இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    Trending Posts

    பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு!

    May 18, 2026

    இந்தியா- நெதர்லாந்து இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    May 18, 2026

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    May 17, 2026

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    May 17, 2026

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.