தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஜூலை 4-ம் தெதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், விஜய் தலைமையில், வருகிற 04.07.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, சென்னை, பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கழகத்தின் சார்பாக அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஆக்கபூர்வ நடவடிக்கைகள் குறித்தும், நம் வெற்றித் தலைவரின் நிகழ்வுகள் மற்றும் தொடர் மக்கள் சந்திப்புகள் குறித்த திட்டமிடல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது.

எனவே, கழக சட்ட விதிகளின்படி மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், கழக மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலப் பொறுப்புச் செயலாளர்கள், கழக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் பங்கேற்கும்படி, தலைவர் ஒப்புதலுடன் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version