இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களிலும் பருவமழை பெய்து வருகிறது. ஒருசில மாநிலங்களில் மழையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இமாச்சலப் பிரதேசத்தின் கங்ரா மற்றும் குல்லு மாவட்டங்களில் கடந்த 25-ம் தேதி முதல் மழை பெய்தது. மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்த்டால், ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளத்தில் சிக்கி ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் அடித்துசெல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். அதனடிப்படையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களில் 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனால் கனமழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட எஞ்சிய 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.