ஜம்மு-காஷ்மீரில் செய்தியாளர் சந்திப்பின் போது உருது மொழியில் பேசக் கூறிய பத்திரிகையாளரிடம் மெஹபூபா முஃப்தி கோபமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவி மெஹபூபா முஃப்தி, ஸ்ரீநகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் உருது மொழியில் பேசுமாறு கோரிக்கை விடுத்தார். இதனால் கோபமடைந்த மெஹபூபா,  ”உங்களுக்கு மொழிபெயர்ப்பு வேண்டுமெனில் நீங்கள் மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஆங்கிலத்திலோ அல்லது உருதுவிலோ பேசச் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா..?  என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், தாய்மொழிக்கு மரியாதை அளிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறிய அவர், காஷ்மீரி மொழிக்கும் உரிய மரியாதையை கொடுங்கள்” என்று வலியுறுத்தினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version