Close Menu
    What's Hot

    தொழில் முதலீடு சர்ச்சை: சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப தயாரா..? திமுகவுக்கு சவால் விட்ட அமைச்சர் கீர்த்தனா..!!

    சமூக ஊடகங்களுக்கு கயாடுலோஹர் இடைவெளி? இதுதான் காரணமா?

    புதிய அரசியல் அலை..!! தவெகவில் இணைந்த 2500 பேருக்கு உரிய அங்கீகாரம்..!! ஆதவ் அர்ஜுனா உறுதி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஊழல் புகார் கொண்ட உலக மகா அயோக்கியர்கள் அதிமுக EX அமைச்சர்கள்!. ஆர்.எஸ். பாரதி விளாசல்!
    தமிழ்நாடு

    ஊழல் புகார் கொண்ட உலக மகா அயோக்கியர்கள் அதிமுக EX அமைச்சர்கள்!. ஆர்.எஸ். பாரதி விளாசல்!

    Editor web3By Editor web3January 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    R.S.bharathi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 -ஐ நிறைவேற்றிவிட்டதாக அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

    திமுகவின் ஆட்சியில் துறை ரீதியிலான ஊழல் பட்டியலை தயாரித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதனை 2 நாட்களுக்கு முன்பு ஆளுநரிடம் வழங்கி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக திமுகவின் ஆர்.எஸ். பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற திராவிட பொங்கல் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  திமுக ஆட்சியில் மக்களுக்கு தொடர்ந்து நன்மைகள் கிடைக்கின்றன. தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    மீதமுள்ள வாக்குறுதிகளும் மீதமுள்ள நாட்களில் நிறைவேற்றப்படும். அரசு ஊழியர்களின் பிரச்சினை நிரந்தரமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றதாக ஆளுநர் ரவியிடம் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்துள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால், புகார் அளித்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அத்தனை அதிமுக முன்னாள் அமைச்சர்களும் ஊழல்வாதிகள்தான்.

    உலக மகா திருடர்கள் அனைவரும் சேர்ந்து பெரிய திருடரிடம் மனு கொடுத்த கதை தான், கவர்னரிடம் அதிமுக மனு அளித்த செய்தி” என ஆர்.எஸ். பாரதி கூறினார்.

    அதிமுக – பாமக கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “அதிமுக -பாமக கூட்டணி ஏற்கனவே இருந்த கூட்டணி தானே” என்றார். மேலும் பேசிய அவர், “இந்தியாவிலேயே அதிக ஊழல் செய்தது ஜெயலலிதா தான் என மோடியும் அமித் ஷாவும் சொன்னார்கள். ஆனால் இப்போது அவர்கள் கூட்டணியில்தான் அதிமுக இருக்கிறது” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleWC-ல் இருந்து திலக் வர்மா விலகல்?. கில்-க்கு வாய்ப்பா?. என்ன காரணம்?
    Next Article கொள்ளை அடித்த ரூ.4 லட்சம் கோடியை இறக்கினாலும் திமுக வெற்றிப் பெற முடியாது!. செல்லூர் ராஜு விமர்சனம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    தொழில் முதலீடு சர்ச்சை: சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப தயாரா..? திமுகவுக்கு சவால் விட்ட அமைச்சர் கீர்த்தனா..!!

    June 20, 2026

    புதிய அரசியல் அலை..!! தவெகவில் இணைந்த 2500 பேருக்கு உரிய அங்கீகாரம்..!! ஆதவ் அர்ஜுனா உறுதி..!!

    June 20, 2026

    நான் முதல்வனை டெலிட் செய்ய முடியாது; இளைஞர்களின் வளர்ச்சியை முடக்குவதா? – மு.க.ஸ்டாலின் ஆவேசம்

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொழில் முதலீடு சர்ச்சை: சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப தயாரா..? திமுகவுக்கு சவால் விட்ட அமைச்சர் கீர்த்தனா..!!

    சமூக ஊடகங்களுக்கு கயாடுலோஹர் இடைவெளி? இதுதான் காரணமா?

    புதிய அரசியல் அலை..!! தவெகவில் இணைந்த 2500 பேருக்கு உரிய அங்கீகாரம்..!! ஆதவ் அர்ஜுனா உறுதி..!!

    நான் முதல்வனை டெலிட் செய்ய முடியாது; இளைஞர்களின் வளர்ச்சியை முடக்குவதா? – மு.க.ஸ்டாலின் ஆவேசம்

    அரண்மனை முதல் ஆடுகளம் வரை!. கால்பந்தின் ராயல் பரிணாமம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.