Close Menu
    What's Hot

    சாலையில் சாய்ந்த மாங்காய் ஏற்றிவந்த பிக்கப் வாகனம் ; அடியில் சிக்கிய இருவரின் நிலை என்ன?  

    நாளை நீட் மறுதேர்வு..!! இருக்குற ஊர் நாக்பூர்.. ஆனா எக்ஸாம் சென்டர் அபுதாபி-ல..!! மாணவன் ஷாக்..!!

    பள்ளி வகுப்பறைக்குள் ரீல்ஸ்..!! இதை முதல்வர் விஜய்யே ஏத்துக்க மாட்டார்..!! அண்ணாமலை கண்டனம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுக அரசை கண்டித்து வரும் 27ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. எடப்பாடி பழனிசாமி!
    தமிழ்நாடு

    திமுக அரசை கண்டித்து வரும் 27ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. எடப்பாடி பழனிசாமி!

    Editor web3By Editor web3January 24, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mk stain eps 143937751
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வேலூர் குடியாத்தம் நகராட்சியில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய அரசு தலைமை மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படாததை கண்டித்து  27-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய அரசு தலைமை மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படவில்லை. தற்போதுள்ள பழைய மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள்; மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஊழியர்கள் இல்லாத காரணத்தாலும்; போதிய கட்டட வசதி இல்லாத காரணத்தாலும், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமலும், கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க முடியாமலும், அப்பகுதிவாழ் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    அதேபோல், குடியாத்தம் நகராட்சி வாழ் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக்கூட செய்து தராமலும், சுகாதார சீர்கேடுகளை சரிசெய்யாமலும், நகராட்சி நிர்வாகம் முற்றிலுமாக செயலிழந்துள்ளது. திமுக ஸ்டாலின் மாடல் அரசின், இத்தகைய மக்கள் விரோதப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்நிலையில், குடியாத்தம் நகரில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு தலைமை மருத்துவமனையை திறந்து வைக்காமல் காலம் தாழ்த்தியும், நகராட்சி வாழ் மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றாமலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் திமுக ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் குடியாத்தம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்கள் நலன் கருதி புதிய அரசு தலைமை மருத்துவமனையை உடனடியாகத் திறந்திட வலியுறுத்தியும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேலூர் புறநகர் மாவட்டத்தின் சார்பில் 27.1.2026 செவ்வாய்க் கிழமை காலை 10 மணியளவில், குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான K.C. வீரமணி தலைமையிலும், வேலூர் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் த.வேலழகன், குடியாத்தம் நகரக் கழகச் செயலாளர் J.K.N.பழனி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வேலூர் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத, திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article4 லட்சம் ஆசிரியர்களுக்கு துரோகம் செய்த திமுக!. அன்புமணி குற்றச்சாட்டு!
    Next Article அந்தர் பல்டி அடிக்கும் ஓபிஎஸ்!. அமைச்சர் சேகர் பாபுவுடன் திடீர் சந்திப்பு!. திமுகவில் இணைய திட்டமா?. 
    Editor web3
    • Website

    Related Posts

    சாலையில் சாய்ந்த மாங்காய் ஏற்றிவந்த பிக்கப் வாகனம் ; அடியில் சிக்கிய இருவரின் நிலை என்ன?  

    June 20, 2026

    பள்ளி வகுப்பறைக்குள் ரீல்ஸ்..!! இதை முதல்வர் விஜய்யே ஏத்துக்க மாட்டார்..!! அண்ணாமலை கண்டனம்..!!

    June 20, 2026

    சட்டமன்ற நிகழ்வுகளை  முழுமையாக நேரலை  செய்யவேண்டும் –  மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சாலையில் சாய்ந்த மாங்காய் ஏற்றிவந்த பிக்கப் வாகனம் ; அடியில் சிக்கிய இருவரின் நிலை என்ன?  

    நாளை நீட் மறுதேர்வு..!! இருக்குற ஊர் நாக்பூர்.. ஆனா எக்ஸாம் சென்டர் அபுதாபி-ல..!! மாணவன் ஷாக்..!!

    பள்ளி வகுப்பறைக்குள் ரீல்ஸ்..!! இதை முதல்வர் விஜய்யே ஏத்துக்க மாட்டார்..!! அண்ணாமலை கண்டனம்..!!

    சட்டமன்ற நிகழ்வுகளை  முழுமையாக நேரலை  செய்யவேண்டும் –  மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

    மீண்டும் தலைதூக்கும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு..!! செந்தில் பாலாஜி இல்லத்தில் குவிந்த போலீஸ்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.