Close Menu
    What's Hot

    மும்பையை புரட்டி எடுக்கும் கனமழை..!! 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!

    ICC T20 உலகக் கோப்பை 2026: சரித்திரம் படைத்த ஆஸ்தி., மகளிரணி..!! இங்கிலாந்தை வீழ்த்தி 7வது பட்டம்..!!

    இதுதான் என் கடைசி உலகக் கோப்பை தொடர்..!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரொனால்டோ..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுகவை கூட்டணி கட்சிகளே தோற்கடிக்கும்!. அன்புமணி விமர்சனம்!
    தமிழ்நாடு

    திமுகவை கூட்டணி கட்சிகளே தோற்கடிக்கும்!. அன்புமணி விமர்சனம்!

    Editor web3By Editor web3February 11, 2026Updated:February 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாமகவில் நடக்கும் குழப்பங்களுக்கு காரணமான திமுக ஆட்சியை விட்டு விரட்டி அடிக்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார்.

    பாமகவின் தலைவராக 2026ம் ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணி ராமதாஸ் தொடர்வார் என்ற பொதுக்குழுவின் தீர்மானத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை எதிர்த்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஆவணங்கள் அடிப்படையில் பாமக தலைவர் அன்புமணிதான் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வாதத்தை டெல்லி உயர்நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இது ராமதாஸ் தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று அன்புமணி தரப்பில் பாமகவின் மாநில இளைஞர் அணி பொதுக் குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டுள்ளனர்.

    பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது ; இளைஞர்கள் உங்களை நம்பி தான் நம் கட்சி இருக்கிறது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நீங்கள் அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும். நம் கட்சிக்குள் உள்ள குழப்பங்கள் எல்லாம் உங்களுக்கும் தெரியும். யாரால் நடக்கிறது என்றும் உங்களுக்கு தெரியும்.

    திமுகவை ஆட்சியை விட்டு விரட்டி அடிக்க வேண்டும். இனி தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நடைபெறக்கூடாது. அதனால் தான் நான்கு மாதத்திற்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் நடத்தினேன். அப்போது நான் திமுக செய்த ஊழல்களைப் பற்றி மக்களுக்கு எடுத்து சொன்னேன். திமுக பணத்தை மட்டுமே நம்பி உள்ளது, ஆனால் பாமகவிற்கு இளைஞர்களுடைய நம்பிக்கை உள்ளது. தேசிய கூட்டணி குறைந்தது 200 தொகுதிகளில் வெல்லும் என்றார்.

    மேலும் 5 ஆண்டுகளாக தூங்கிக்கொண்டிருந்த ஸ்டாலின் 45 நாள்களில் 26 புதிய ஏமாற்று அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக  சாடினார். மேலும், திமுகவில் உள்ள கூட்டணிக் கட்சிகளே ஸ்டாலினை தோற்கடிக்கும் சூழல்தான் தற்போது உள்ளதாகவும் அன்புமணி விமர்சித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்கம் விலை சவரனுக்கு ரூ160 உயர்வு!. வெள்ளி ரேட் என்ன தெரியுமா?
    Next Article உணவு பரிமாறியவர்களிடம் சாதியை கேட்ட ராஜா?
    Editor web3
    • Website

    Related Posts

    மும்பையை புரட்டி எடுக்கும் கனமழை..!! 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!

    July 6, 2026

    ICC T20 உலகக் கோப்பை 2026: சரித்திரம் படைத்த ஆஸ்தி., மகளிரணி..!! இங்கிலாந்தை வீழ்த்தி 7வது பட்டம்..!!

    July 6, 2026

    இதுதான் என் கடைசி உலகக் கோப்பை தொடர்..!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரொனால்டோ..!!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மும்பையை புரட்டி எடுக்கும் கனமழை..!! 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!

    ICC T20 உலகக் கோப்பை 2026: சரித்திரம் படைத்த ஆஸ்தி., மகளிரணி..!! இங்கிலாந்தை வீழ்த்தி 7வது பட்டம்..!!

    இதுதான் என் கடைசி உலகக் கோப்பை தொடர்..!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரொனால்டோ..!!

    FIFA World cup 2026: வரலாற்று வெற்றி: பிரேசில் உலகக் கோப்பை கனவை தகர்த்தது நார்வே அணி..!!

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.