ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு அதனை பராமரிக்க மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக, அதன்படி, எனக்கு ரூ. 48,000 கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி மன்னார்புரத்தில் பாஜக சார்பில் நடந்த நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நிகழ்ச்சி பேசிய அவர், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு அதனை பராமரிக்க மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இது அரசியல் மேடை இல்லை. இருந்தும் நான் சொல்கிறேன். ஒரு காளை வளர்ப்பவர்களுக்கு தான், அந்த காளையை வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும். திமுக தமது தேர்தல் வாக்குறுதியில் 2021ல் சொல்லி இருந்தார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று சொல்லி இருந்தார்கள்.
நியாயப்படி, திமுக இன்றைக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்றால், மாதம் ரூ. ஆயிரம் என கணக்கு போட்டால், எனக்கே 48 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். யார் எல்லாம் காளை வளர்க்கிறார்களோ அவர்கள் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும். அப்படி சொல்லிவிட்டு 4 ஆண்டு காலம் முடிந்து விட்டது. அவர்களின் ஆட்சியே இதோ முடியப்போகிறது என்று விமர்சித்துள்ளார்.
