Close Menu
    What's Hot

    மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்புவதாக  செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    காங்கிரஸ் துரோகம் – இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுக பங்கேற்காது என அறிவிப்பு

    100% தோல்வி; துணைக் கேப்டன் பதவி பறிப்பு!. ரிஷப் பண்ட்டிடம் கம்பீர் பேசிய ரகசியம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அனல் பறக்கும் அரசியல் களம்!. ஜன. 28ல் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!. 
    தமிழ்நாடு

    அனல் பறக்கும் அரசியல் களம்!. ஜன. 28ல் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!. 

    Editor web3By Editor web3January 7, 2026Updated:January 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    768 512 24671397 thumbnail 16x9 modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கிடையே வரும் ஜன. 28 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததில் இருந்தே, தமிழ்நாடு தேர்தலில் பாஜக தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், பாமக உள்ளிட்ட மற்ற கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வர முனைப்பு காட்டி தீவிர பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. அதன்படி, டெல்லி பாஜக தலைவர்கள் தமிழகம் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

    இந்தநிலையில், ஜன. 28 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜன. 28 ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்களை மேடையேற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக , பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள நிலையில் மேலும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், கூட்டணியை இறுதி செய்து கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்க பிரதமர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டி.டி.வி . தினகரன் , ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோரை கூட்டணியில் சேர்க்க பாஜக தேசிய தலைவர்கள் முயற்சித்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் வருகை, கூட்டணி வலிமையை அதிகரிப்பதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது.

    தென் மாவட்டங்களில் கூட்டணியை பலப்படுத்த புதிய தமிழகம் கிருஷ்ணசாமி , பார்வர்ட் ப்ளாக் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தேமுதிகவையும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

    ஜன. 28 ல் கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்பர் என தகவல் வெளியாகியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉஷார்!. Nestle குழந்தைகளுக்கான உணவில் ஆபத்தான நச்சு!.  25 நாடுகளில் தயாரிப்புகளை திரும்பப் பெற்றது!.
    Next Article பொதுக்கூட்டங்கள், பிரச்சார, பேரணிகளுக்கு புதிய விதிகள்!. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!
    Editor web3
    • Website

    Related Posts

    மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்புவதாக  செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    June 4, 2026

    காங்கிரஸ் துரோகம் – இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுக பங்கேற்காது என அறிவிப்பு

    June 4, 2026

    “ஹார்டு டிஸ்க்குகள் மாயம்… ஊழல்வாதிகளைக் காக்கிறதா பேரசக்தி?” –இபிஎஸ் கேள்வி

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்புவதாக  செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    காங்கிரஸ் துரோகம் – இந்தியா கூட்டணி கூட்டத்தில்  திமுக பங்கேற்காது என அறிவிப்பு

    100% தோல்வி; துணைக் கேப்டன் பதவி பறிப்பு!. ரிஷப் பண்ட்டிடம் கம்பீர் பேசிய ரகசியம்!

    “ஹார்டு டிஸ்க்குகள் மாயம்… ஊழல்வாதிகளைக் காக்கிறதா பேரசக்தி?” –இபிஎஸ் கேள்வி

    முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து!. 12 பேர் உயிரிழப்பு; 9 பேர் கவலைக்கிடம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.