செம்மொழி நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நாளை கொண்டாடப்படுகிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்று பல்வேறு விருதுகளையும் வழங்குவதோடு புத்தகத்தை வெளியிட்டு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் ஜூன் மூன்றாம் தேதி செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி நாளை காலை 10:15 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, கலைஞர் கருணாநிதி செம்மொழி நாள் விருதுகளை தமிழ்நாடு முதலமைச்சர் நாளை வழங்க உள்ளார். மேலும், செம்மொழி தமிழ் ஆராய்ச்சி மத்திய நிறுவனத்தில் புதிய நூல்களை வெளியிடுவதோடு, உயர்த்தப்பட்ட உதவித்தொகை ஒப்பளிப்பு ஆணையையும் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்க உள்ளார்.

அதேபோல், போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் பரிசுகளை வழங்கி சிறப்பிக்க உள்ளார். மேலும், தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை மலரையும் தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிடுகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version