விஜய்யின் மனைவி சங்கீதாவின் விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில், த்ரிஷா, விஜயுடன் இணைந்து சமீபத்தில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் செய்திகள் இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. சமூக வலைதளங்களில் இது குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை திரிஷா இதுவரை எந்தவொரு நேரடி விளக்கத்தையும் அளிக்கவில்லை. இந்தச் சூழலில், இன்று காலை அவர் மும்பை செல்வதற்காகச் சென்னை விமான நிலையம் வந்திருந்தது பேசுபொருளாகியுள்ளது.

சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை 11:40 மணியளவில் ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பை செல்ல வந்த திரிஷாவைச் செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். குறிப்பாக, விஜயுடன் திருமணத்திற்குச் சென்றது குறித்து அவரிடம் கேள்வி எழுப்ப முயன்றனர். ஆனால், எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்க விரும்பாத திரிஷா, மிகவும் அமைதியாகத் தனது முகத்தில் எந்த சலனமும் காட்டாமல் வேகவேகமாக விமான நிலையத்தின் பாதுகாப்புப் பகுதிக்குள் நுழைந்தார்.

செய்தியாளர்களின் கேள்விகளை ஒரு புன்னகையோடு கடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்ட திரிஷா, இன்று எவ்வித ரியாக்‌ஷனும் காட்டாமல் மௌனமாகச் சென்றது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ‘விடாமுயற்சி’ மற்றும் ‘தக் லைஃப்’ படப்பிடிப்புப் பணிகளுக்காக அவர் மும்பை சென்றிருக்கலாம் எனக் கூறப்பட்டாலும், தொடர்ந்து துரத்தும் சர்ச்சைக் கேள்விகளுக்கு அவர் எப்போது முற்றுப்புள்ளி வைப்பார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version