Close Menu
    What's Hot

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»எந்த காலத்திலும் தனிக்கட்சி தொடங்கும் திட்டம் இல்லை!. ஓபிஎஸ் திட்டவட்டம்!.
    தமிழ்நாடு

    எந்த காலத்திலும் தனிக்கட்சி தொடங்கும் திட்டம் இல்லை!. ஓபிஎஸ் திட்டவட்டம்!.

    Editor web3By Editor web3January 17, 2026Updated:January 17, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    opsss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நான் எந்த ஒரு தனிக்கட்சியையும் தொடங்க போவது இல்லை என்று ஓபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 109ஆவது பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏழை எளிய மக்களுக்காகவும் அடிதட்டில் இருக்கின்ற தொண்டர்களுக்காகவும் அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை எம்ஜிஆர் உருவாக்கினார்.

    தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் எம்ஜிஆர், ஜெயலலிதாவால் தொண்டர்களுக்கான இயக்கமாக யாராலும் வெல்ல முடியாது இயக்கமாக உருவாக்கினர். தமிழகத்தில் மூன்று முறை யாராலும் அசைக்க முடியாத முதலமைச்சராக நல்ல பல திட்டங்களை நாட்டு மக்களுக்கு எம்ஜிஆர் அளித்தார்.

    ஜெயலலிதா அதிமுக நிரந்தர பொதுச் செயலாளராக பொறுப்பேற்று 30 ஆண்டுகாலம் சோதனைகளையும் வேதனைகளையும் தாங்கி இந்த இயக்கத்தை மாபெரும் இயக்கமாக உருவாக்கி வளர்த்தெடுத்தார் என்பதுதான் அதிமுகவின் வரலாறு.

    கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், யாருடன் கூட்டணி என்பது இன்னும் சில தினங்களில் அறிவிப்பேன். பிரதமர் கூட்டத்திற்கான அழைப்பு வரவில்லை.. நான் எந்த ஒரு கட்சியையும் தொடங்க போவது இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளா.

    மேலும், எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிகளின்படி தான் அதிமுக 50 ஆண்டு காலமாக வெற்றி நடை போட்டது. தற்போது கழக சட்டவிதிக்கு ஊடு ஏற்பட்டிருக்கிறது அவர் உருவாக்கிய சட்ட விதிகளை சில திருத்தங்கள் செய்துள்ளார்கள். ஒரே ஒரு விதியை மட்டும் ரத்து செய்யவும் திருத்தம் செய்யவும் கூடாது என சட்டவிதியில் குறிப்பிட்டிருக்கிறார் அதிமுகவின் பொது செயலாளர் தலைமை பதவி தொண்டர்கள் அடிமட்ட தொண்டர்கள் விசுவாசம் மிக்க தொண்டர்களால் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதுதான் சட்ட விதி

    அந்த சட்டவிதியை மட்டும் யாராலும் மாற்றம் செய்ய முடியாது இன்றைக்கு நிலைமை கழக சட்டவிதியை திருத்தம் செய்திருக்கிறார்கள் சாதாரண தொண்டன் கூட கழகப் பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட முடியும் ஆனால் இன்றைக்கு பொதுச்செயலாளர் தேர்ந்தெடுப்பதற்கு பத்து மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும் 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என திருத்தம் செய்துள்ளனர்.

    இது தொடர்பாக நாங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றோம் அங்கு உரிமையியல் நீதிமன்றத்தை நாடுமாறு அவர்கள் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது அதன் அடிப்படையில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எங்களுடைய நியாயத்தை இந்த இயக்கம் யாருக்கு எதற்காக தொடங்கப்பட்டது எம்ஜிஆர் என்ன சொல்லி இருக்கிறார்கள் அதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சட்ட போராட்டத்தில் உறுதியாக வெற்றி கிடைக்கும் என்றார்.

    மேலும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக நிச்சயமாக திமுகவை வெற்றி பெற முடியாது அவர் பொறுப்பேற்ற பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற முடியவில்லை. அதிமுகவில் பிரிந்திருக்கும் சக்திகள் அனைத்தும் இணைய வேண்டும். சர்வாதிகாரப் போக்கில் இணைக்க மாட்டேன் என சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, உங்கள் யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்றார்.

    மேலும், அதிமுகவில் அனைவரும் இணைய வேண்டும் என பாஜக ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் அதே நிலைப்பாட்டில் பாஜக இருக்கிறதா என்ற கேள்விக்கு, புத்திமதி சொன்னால் கேட்க வேண்டியவர்கள் கேட்க வேண்டும் இல்லையென்றால் நான் என்ன செய்வது என தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுடியரசு தினத்தில் “ஜன நாயகன்” ரிலீஸ்?. வெளியான தகவல்!
    Next Article தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு எம்.ஜி.ஆரின் பங்களிப்பு மகத்தானது!. பிரதமர் மோடி புகழாரம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    June 19, 2026

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    June 19, 2026

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.