திருப்பூரில் அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்த ரோட்டரியின் பாசறை நிகழ்வின் வெற்றி விழாவில், அழகிகள் அரைகுறை ஆடையுடன் ஆட்டம்போட்ட ஃபேஸ்புக் லைவால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் ரோட்டரி சங்கம் சார்பில் தன்னார்வ தொண்டு செய்யும் சமூக ஆர்வலர்களை ஊக்குவிக்கும் வகையில் பாசறை நிகழ்வு 2 நாட்களாக, தனியார் கல்லூரியில் நடைபெற்றது. அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்த நிகழ்வில், கவிப்பேரரசு வைரமுத்துவும் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

திருப்பூரின் முக்கிய தொழில் அதிபர்கள், ஏற்றுமதியாளர்கள் என ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இரண்டு நாள் நிகழ்வுகள் நிறைவுபெற்றதை அடுத்து, அந்த பகுதியில் உள்ள சொர்க்கம் மனமகிழ் மன்றத்தில் ரோட்டரி சார்பில் வெற்றி விழா கொண்டாடியுள்ளன.ர் இதில் மது விருந்து மற்றும் கலை  நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகளில் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இளம் பெண்களின் ஆபாச நடனங்களும் அரங்கேறியுள்ளது.

இதனை சிலர் பேஸ்புக் மூலம் நேரடி லைவ் ஸ்ட்ரீமிங் செய்துள்ளனர். இது திருப்பூர் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்த காவல் ஆணையர் ராஜேஸ்வரி உத்தரவின் பேரில் போலீசார் நிகழ்ச்சியை தடுத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version