NDA கூட்டணியில் இணைந்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில்  தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் உள்ள தமிழக பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயலை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் கூட்டாக சந்தித்து என்.டி.ஏ.கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டின் மக்கள் விரும்பும் பலமான கூட்டணியாக அமைத்துள்ளது. திமுகவை வீழ்த்த வேண்டும் என்னும் ஒத்த கருத்துடைய அனைவரும் ஒன்றாக திரண்டு வரவேண்டும் எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடும் எனவும் தெரிவித்தார்.

புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பேசியதாவது மிகப்பெரிய சக்தியாக தேர்தலில் பணியாற்றும், தமிழ்நாடு மத்திய பாஜக அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் மேலும் வளர்ச்சி அடையும் எனவும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவதற்கு புதிய நீதி கட்சி பாடுபடும் எனவும் கூறினார்.

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதை பொருள்கள் கற்பழிப்பு கொலை கொள்கை நடந்து வருகிறது அதனை மாற்ற வேண்டும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி எடப்பாடியார் தலைமையில் மோடியும் இணைந்து தமிழ்நாட்டை முன்னேற்றுவார்கள் என தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version