Close Menu
    What's Hot

    காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்…. ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 இலட்சம் வழங்கிய முதலமைச்சர்

    நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது; மக்களை விட்டு அல்ல…! கண்ணீர் மல்க பேசிய ஷேக் ஹசீனா

    அசாம் வெள்ளப் பாதிப்பு: சேதங்களை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகத்தில் ரூ.200 வரை உயர்ந்த சுங்கக் கட்டணம்!. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
    தமிழ்நாடு

    தமிழகத்தில் ரூ.200 வரை உயர்ந்த சுங்கக் கட்டணம்!. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

    Editor web3By Editor web3April 1, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1941295 tollgate
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவித்துள்ள புதிய சுங்கக் கட்டண உயர்வு, ஏப்ரல் 1-ம் தேதியான இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. சுங்க கட்டண உயர்வு என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் அமல்படுத்தப்படும். அதன்படி, தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள 60-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் வருடாந்திர கட்டண உயர்வு இன்று (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது.

    இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) இந்த அறிவிப்பின்படி, சுங்கக் கட்டணங்கள் 3% முதல் 7% வரை உயர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, கார், ஜீப் போன்ற இலகுரக வாகனங்களுக்கு ஒருமுறை கடந்து செல்ல ரூ. 5 முதல் ரூ. 10 வரையிலும், பேருந்துகள் மற்றும் லாரிகள் போன்ற கனரக வாகனங்களுக்கு அவற்றின் வகையைப் பொறுத்து ரூ. 40 முதல் ரூ. 200 வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக பெங்களூரு – சென்னை விரைவுச்சாலை (ஹோஸ்கோட்–KGF பகுதி), தபாஸ்பேட் – ஹோஸ்கோட் இடையிலான நகர சுற்றுச்சாலை, பெங்களூரு – மைசூரு விரைவுச்சாலை, கனகபுரா சாலை மற்றும் விமான நிலையச் சாலை உள்ளிட்ட முக்கிய தடங்களில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

    பரனூர், ஆத்தூர், வானகரம், சூரப்பட்டு, கிருஷ்ணகிரி மற்றும் கப்பலூர் உள்ளிட்ட முக்கிய சுங்கச்சாவடிகளில் இந்த உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. இது தவிர, விஐபி-க்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தனியார் கார்களுக்கான வருடாந்திர ஃபாஸ்டேக் (FASTag) பாஸ் கட்டணம் ரூ. 3,000-லிருந்து ரூ. 3,075-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் இந்த புதிய கட்டண முறை அமல்படுத்தப்பட்டதால், நெடுஞ்சாலைகளில் பயணம் செய்த வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    இந்த சுங்கக் கட்டண உயர்வு போக்குவரத்து செலவினங்களை நேரடியாக பாதிக்கும் என்பதால், லாரி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் போக்குவரத்து செலவு அதிகரிப்பதன் காரணமாக, சந்தையில் அவற்றின் விலை உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு, இந்த கூடுதல் சுங்கக் கட்டணம் பெரும் சுமையாக மாறும் எனக் கருதப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஏப்ரல் 1!. முட்டாள்கள் தினம் உருவானது எப்படி?.
    Next Article தவெக வேட்பாளர் பட்டியலில் அதிரடி மாற்றம்?. விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன?
    Editor web3
    • Website

    Related Posts

    காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்…. ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 இலட்சம் வழங்கிய முதலமைச்சர்

    August 5, 2026

    நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது; மக்களை விட்டு அல்ல…! கண்ணீர் மல்க பேசிய ஷேக் ஹசீனா

    August 5, 2026

    அசாம் வெள்ளப் பாதிப்பு: சேதங்களை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்…. ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 இலட்சம் வழங்கிய முதலமைச்சர்

    நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது; மக்களை விட்டு அல்ல…! கண்ணீர் மல்க பேசிய ஷேக் ஹசீனா

    அசாம் வெள்ளப் பாதிப்பு: சேதங்களை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா

    தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை தான்..! சீமான் விமர்சனம்..!

    தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்… மீனவர்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் வரும் … அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.