Close Menu
    What's Hot

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»15 சட்டமன்ற, ஒரு ராஜ்ய சபா தொகுதிகளை கேட்கும் டிடிவி!. EPS பதில் என்ன?
    தமிழ்நாடு

    15 சட்டமன்ற, ஒரு ராஜ்ய சபா தொகுதிகளை கேட்கும் டிடிவி!. EPS பதில் என்ன?

    Editor web3By Editor web3January 21, 2026Updated:January 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    constituency ttv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியை விரிவாக்கம் செய்ய எடப்பாடி பழனிசாமி முயற்சித்து வருகிறார். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாமகவின் அன்புமணி தரப்பில் கூட்டணியை பேசி முடித்து, தொகுதி பங்கீட்டையும் நிறைவு செய்துள்ளது. அதேபோல், இன்று டிடிவி தினகரனின் அமமுகவும் தனது கூட்டணியை என்.டி.ஏ.வுடன் இணைத்துக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    ஒருபுறம், தேமுதிகவும் கூட்டணிக்கு வந்தால், வடமாவட்டங்களில் அதிமுக கூடுதல் வலிமைபெறும். இதனை கணக்கில் கொண்டே என்.டி.ஏ. கூட்டணி தலைவர்கள் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், என்.டி.ஏ.கூட்டணியில் இருந்து இதுவரை யாரும் எங்களை அணுகவில்லை என்றும் பிரேமலதா கூறியுள்ளார்.

    இந்தநிலையில், அதிமுக கூட்டணி சார்பாக அமமுகவுக்கு 15 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா தொகுதியை ஒதுக்கவேண்டும் என்று டிடிவி தினகரன் கேட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது, பாபநாசம்(தஞ்சை), சோளிங்கர், சைதாப்பேட்டை, திருவாடானை, சாத்தூர், முதுகுளத்தூர், திருப்பூர், முசிறி, நாங்குநேரி, ஆண்டிபட்டி, மேலூர், காரைக்குடி, ஒட்டபிடாரம், பூந்தமல்லி உள்ளிட்ட தொகுதிகள் மீது தினகரன் விருப்பம் தெரிவித்துள்ளாராம். இவற்றில் 9 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    கடந்த லோக்சபா தேர்தலில் 2 தொகுதிகளில் அமமுக போட்டியிட்டது. அதனால் இம்முறை குறைந்தது ஒரு தொகுதி ஆவது ஒதுக்க வேண்டும் என்று கோரி இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாதத்தின் கடைசி வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழக மீனவர்கள் கைது!. ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!.
    Next Article 5 மாநில தேர்தல் எதிரொலி!. ஐபிஎல் தொடங்குவதில் தாமதம்?. 18 இடங்களில் போட்டிகளை நடத்த திட்டம்!
    Editor web3
    • Website

    Related Posts

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    June 19, 2026

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    June 19, 2026

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.