Close Menu
    What's Hot

    தமிழ்நாட்டில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தொடக்கம்..! ஆர்வமுடன் குழந்தைகளுடன் பங்கேற்ற பெற்றோர்..!

    72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு இறுதி மரியாதை; அக்னியுடன் ஐக்கியமான கே.பாக்யராஜ் தேகம்!

    ஃபிஃபா அப்டேட்; நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது அல்ஜீரியா – ஆஸ்திரியா;  முடிவுக்கு வந்தது ஈரானின் கனவு !

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»உதயநிதி சொத்து விவரங்களில் முரண்பாடு?. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!
    தமிழ்நாடு

    உதயநிதி சொத்து விவரங்களில் முரண்பாடு?. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

    Editor web3By Editor web3April 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    udhayanithi high court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்து   விசாரணை நடத்தக் கோரிய வழக்கில், வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களுக்கும், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்து விவரங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக கூறி உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி  வாக்காளரான குமாரவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், கடந்த 2021 ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்பு மனுவில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் 7 கோடியே 36 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்ததாக குறிப்பிட்டிருந்த உதயநிதி ஸ்டாலின், நடப்பு தேர்தலில் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில், இந்த விவரங்கள் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

    அவரது மனைவி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் 2 கோடியே 63 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனை குறித்து முறையான விளக்கங்கள் எதுவும் வேட்பு மனுவில் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2021 ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்பு மனுவில் 11 கோடியே 6 லட்சம் ரூபாய் ஸ்னோ ஹவுசிங் நிறுவனத்திற்கு கடன் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டு இருந்த உதயநிதி ஸ்டாலின், 2026 ஆம் ஆண்டு  வேட்பு மனுவில் 10 கோடி என குறிப்பிட்டு இருக்கிறார். மீதமுள்ள ஒரு கோடியே 6 லட்சம் பணம் திருப்பி செலுத்தப்பட்டதா என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    2020 ஆம் ஆண்டுக்கு முன் 2 கோடி ரூபாய் வருமானம் இருந்ததாக குறிப்பிட்டிருந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது 10 கோடியே 98 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார். வருமானம் மற்றும் சொத்து அதிகரித்தது கூறும் குறித்து உரிய விளக்கங்கள்  தெரிவிக்கப்படவில்லை எனவும் சொத்து  சொத்து குறித்து தவறான முழுமையற்ற தகவல்களை வேட்பாளர்கள் தெரிவிப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு விரோதமானது என்பதால் இந்த முரண்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வருமானவரித்துறைக்கும், கார்ப்பரேட் விவகாரத் துறைக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ் ஏ தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வில்  விசாரணைக்கு வந்த போது, வேட்புமனுவில் தவறாக தகவல்கள் தெரிவித்தால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நடைமுறைகள் துவங்கி விட்டதால், இந்த விவகாரத்தில் தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய முடியும் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, மனுவுக்கு ஏப்ரல் 20 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாடு ராஜ்ய சபா எண்ணிக்கை 46-ஆக குறையும்!. ப.சிதம்பரம் எச்சரிக்கை!
    Next Article பீகார் வரலாற்றில் முதல்முறையாக பாஜக சிஎம்!. பதவியேற்றார் சாம்ராட் சவுத்ரி!.
    Editor web3
    • Website

    Related Posts

    தமிழ்நாட்டில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தொடக்கம்..! ஆர்வமுடன் குழந்தைகளுடன் பங்கேற்ற பெற்றோர்..!

    June 28, 2026

    72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு இறுதி மரியாதை; அக்னியுடன் ஐக்கியமான கே.பாக்யராஜ் தேகம்!

    June 28, 2026

    ஃபிஃபா அப்டேட்; நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது அல்ஜீரியா – ஆஸ்திரியா;  முடிவுக்கு வந்தது ஈரானின் கனவு !

    June 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ்நாட்டில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தொடக்கம்..! ஆர்வமுடன் குழந்தைகளுடன் பங்கேற்ற பெற்றோர்..!

    72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு இறுதி மரியாதை; அக்னியுடன் ஐக்கியமான கே.பாக்யராஜ் தேகம்!

    ஃபிஃபா அப்டேட்; நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது அல்ஜீரியா – ஆஸ்திரியா;  முடிவுக்கு வந்தது ஈரானின் கனவு !

    ஈரானின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்; பஹ்ரைன் கடும் கண்டனம்! –  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தைக் கூட்ட கோரிக்கை

    போலியோ சொட்டு மருந்து முகாம்; முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.