Close Menu
    What's Hot

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அறிவிக்கப்படாத மின் வெட்டு!. அவதியடையும் மக்கள்!. இபிஎஸ் கண்டனம்!
    தமிழ்நாடு

    அறிவிக்கப்படாத மின் வெட்டு!. அவதியடையும் மக்கள்!. இபிஎஸ் கண்டனம்!

    Editor web3By Editor web3May 24, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    EPS 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அறிவிக்கப்படாத மின் வெட்டால் தமிழ் நாட்டு மக்கள் அவதியுறுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

    அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது; கோடை காலம் வந்தாலே தமிழகத்தின் மின் தேவை அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்தது. பகல் நேரங்களில் வீட்டு மின் உபயோகம் அதிகரிக்கும். அதே நேரம், தொழிற்சாலைகளின் மின் உபயோகமும் கூடுதலாகும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், ஆண்டுதோறும் கோடைகால மின் தேவையை சமாளிக்க முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.

    2011-ல் மாண்புமிகு அம்மா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்கும்போது, தமிழகம் முழுவதும் தினமும் 10 மணி நேரத்திற்குமேல் மின்வெட்டு என்ற கடுமையான நிலைமையை இரண்டு, மூன்று ஆண்டுகளிலேயே மாண்புமிகு அம்மா அவர்கள் மாற்றி, கழக ஆட்சியில் தமிழ் நாடு மின் மிகை மாநிலமாக விளங்கியது.

    மேலும், கோடை காலத்தில் கூடுதல் மின் தேவை ஏற்படுவதை கணக்கிட்டு காற்றாலை, சோலார் மற்றும் அனல் மின் நிலையங்களில் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுப்பதுடன், மத்திய அரசு மற்றும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு, மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது.

    புதிதாக ஆட்சிக்கு வந்துள்ளவர்களின் மேம்போக்கான மற்றும் உறுதியற்ற நடவடிக்கைகளால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் மின் தட்டுப்பாடு ஏற்படுள்ளது. இரவு நேரங்கள் மக்களுக்கு தூங்கா இரவுகளாக மாறியுள்ளது கொடுமையான ஒன்றாகும்! பகல் நேர மின் வெட்டால் சமையல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு பொதுமக்களின் தினசரி இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    அறிவிக்கப்படாத மின்வெட்டை எதிர்த்து, பாதிக்கப்பட்ட மக்கள் மின்சார அலுவலகத்தை முற்றுக்கையிடுவதையும், சாலைகளில் போராடுவதையும் ஊடகங்கள் செய்திகளாக வெளியிடுகின்றன. சென்னை புறநகர் பகுதிகளில் இரவில் பலமுறை மின் வெட்டு ஏற்படுவதாகவும், குறிப்பாக சென்னை தண்டையார்பேட்டையில் இரண்டாவது நாளாக இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாத நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் புறநகர் பகுதிகளில் சாலையில் இறங்கி போராடுவதாக செய்திகள் வருகின்றன.

    இந்த அரசின் அறிவிக்கப்படாத மின் வெட்டால் மக்களின் அன்றாட வாழ்க்கை மட்டுமல்ல, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சிறு வணிகர் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பொருளாதார பாதிப்பிற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
    எனவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, ‘இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்’ என்று சாக்கு போக்கு சொல்லாமல் மின்வெட்டைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகளைகட்டிய கன்னியாகுமரி: கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
    Next Article கொரோனாவின் தாக்கம்!. 120 கோடிப் பேரை வாட்டும் மனநலப் பாதிப்பு! ஆய்வில் அதிர்ச்சி!
    Editor web3
    • Website

    Related Posts

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    July 17, 2026

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    July 17, 2026

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    பிக் பாஸ் சீசன் 10!. முன்கூட்டியே களமிறங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.