Close Menu
    What's Hot

    திருச்சியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் – துரைவைகோ எம்.பி ஆய்வு

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

    ராஜீவ்காந்தி உருவப்படத்துடன் வாகனப் பேரணி – காங்கிரசாருக்கு கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»“வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!
    தமிழ்நாடு

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    Editor web3By Editor web3May 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps meeting
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுகவில் அதிகார மோதல் போக்கு உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    சென்னையில் உள்ள 9 மாவட்டச் செயலாளர்களில் 8 பேர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஆனால், கட்சியின் முக்கிய முகமும் முன்னாள் அமைச்சருமான மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார் மட்டும் இக்கூட்டத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது

    கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தங்களது மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானக் கடிதங்களை அவரிடம் நேரில் வழங்கினர். மேலும், அந்தந்த மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் இபிஎஸ்-க்கு முழு ஆதரவு அளித்துக் கையெழுத்திட்ட படிவங்களையும் மாவட்டச் செயலாளர்கள் முறைப்படி தலைமை அலுவலகத்தில் சமர்ப்பித்தனர்.

    ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு அறிவுரைகளையும், கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். சுயநலத்திற்காகவும், பதவிக்காகவும் சிலர் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டுச் சென்றுள்ளார்கள். அரசியல் என்று வந்துவிட்டால் கட்சிக்குத் தேர்தலில் வெற்றி, தோல்வி ஏற்படுவது சாதாரணமான ஒன்றுதான்.

    கட்சி எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த இக்கட்டான சூழலில் நாம் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து, ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் தொய்வில்லாமல், மிகச் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.

    கட்சியில் உள்ள குறைகளைக் களைந்து, அடிமட்ட அளவில் அதிமுகவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மிக விரைவில் ஒவ்வொரு மாவட்டம் வாரியாகத் தனித்தனியாக ஆலோசனை கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅரசு அதிகாரிகளுக்கு ‘பயோமெட்ரிக்’ வருகைப்பதிவு கட்டாயம்!. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
    Next Article எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?
    Editor web3
    • Website

    Related Posts

    திருச்சியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் – துரைவைகோ எம்.பி ஆய்வு

    May 19, 2026

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

    May 19, 2026

    ராஜீவ்காந்தி உருவப்படத்துடன் வாகனப் பேரணி – காங்கிரசாருக்கு கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருச்சியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் – துரைவைகோ எம்.பி ஆய்வு

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

    ராஜீவ்காந்தி உருவப்படத்துடன் வாகனப் பேரணி – காங்கிரசாருக்கு கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    Trending Posts

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!

    May 19, 2026

    5 நாட்களுக்கு பின் மீண்டும் எகிறிய தங்கம் விலை!. ஒரே நாளில் ரூ.960 உயர்வு!.

    May 19, 2026

    அரக்கோணம் – செங்கல்பட்டு இரட்டை வழித்தட திட்டத்திற்கு ஒப்புதல்!. இந்திய ரயில்வே அதிரடி!

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.