தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி நிலவுவதால், விஜய் – சீமானை குறைத்து மதிப்பிடக்கூடாது என்று அண்ணாமலை பேசியுள்ளது பேசுப்பொருளாகியுள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் தற்போதைய தேர்தல் களம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், நாங்கள் எந்த கட்சியையும் இழிவு படுத்த வில்லை, திமுக வேண்டாம் என மக்கள் நினைக்கிறார்கள் அவர்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறோம் எனப்பேசினார்.

தொடர்ந்து அவரிடம் விஜய் NDA கூட்டணிக்குள் வருவாரா என்ற கேள்வியை செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, அண்ணன் சீமான் திராவிட கட்சிகளே வேண்டாம் என நினைக்கிறார் எனவே அவர் எந்த கூட்டணிக்குள்ளும் வரப்போவது இல்லை. திமுகவை காத்திரமாக எதிர்க்கும் விஜய் எங்கு சென்று சேரவேண்டும் என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும் என பேசினார்.

அடிப்படையில் எங்களுக்கும் அதிமுகவுக்கும் சித்தாந்த முரண்கள் இருந்தாலும் திமுகவை வீழ்த்தவேண்டும் என்ற ஒற்றை புள்ளியில் இயங்குகிறோம் என கூறினார். மேலும் அவர் பேசுகையில் லோக் சுபா தேர்தலில் அண்ணன் சீமான் 8 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளார், விஜய்க்கு முதல் தேர்தல் என்றாலும் யாரையும் உதாசீனப்படுத்த கூடாது, விஜய், சீமானை குறைத்து மதிப்பிட கூடாது. மக்கள் தீர்ப்பு தான் இறுதியானது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அவர் பேசியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version