Close Menu
    What's Hot

    ரன்வேயில் தீப்பிடித்த விமானம்!. 200 பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!. டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு!

     ”ஒன்றும் தெரியாது”!. விஜய்யின் அரசியல் குறித்து மம்மூட்டி ரியாக்‌ஷன்!

    இமாலய இலக்கை சேஸ் செய்தது எப்படி?. வெற்றி ரகசியத்தை பகிர்ந்த ஸ்ரேயஸ் ஐயர்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»வார்னிங்!. 29ம் தேதி வரை இயல்பை விட 3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்!.
    தமிழ்நாடு

    வார்னிங்!. 29ம் தேதி வரை இயல்பை விட 3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும்!.

    Editor web3By Editor web3April 26, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    heat
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் இன்று முதல் 29ம் தேதி வரை ஒரு சில இடங்களில் இயல்பை விட 3 டிகிரி வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், பொதுமக்களுக்கு அசவுகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

    இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: சுமார் 0.9 கிமீ உயரத்தில், வடக்கு உள் கர்நாடகா முதல் குமரிக்கடல் வரை தெற்கு உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதனால் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 28 மற்றும் 29ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழையும், தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    30ம் தேதி கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) மிதமான முதல் கன மழையும், இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 1ம் தேதி நாமக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) மிதமான முதல் கன மழையும், இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    இன்று முதல் 29ம் தேதி வரை உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். இன்று முதல் 29ம் தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசவுகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், அசவுகரியம் ஏற்படலாம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டில் மறுவாக்குப்பதிவா? தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!
    Next Article பற்றி எரியும் மணிப்பூர்!. போராட்டத்தில் குதித்த தாய்மார்கள்!. மீண்டும் பதற்றம்!.
    Editor web3
    • Website

    Related Posts

     ”ஒன்றும் தெரியாது”!. விஜய்யின் அரசியல் குறித்து மம்மூட்டி ரியாக்‌ஷன்!

    April 26, 2026

    தமிழ்நாட்டில் மறுவாக்குப்பதிவா? தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு!

    April 26, 2026

    வேகமாக பரவும் தட்டம்மை!. குழந்தைகளுக்கு தடுப்பூசி போட சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

    April 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரன்வேயில் தீப்பிடித்த விமானம்!. 200 பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!. டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு!

     ”ஒன்றும் தெரியாது”!. விஜய்யின் அரசியல் குறித்து மம்மூட்டி ரியாக்‌ஷன்!

    இமாலய இலக்கை சேஸ் செய்தது எப்படி?. வெற்றி ரகசியத்தை பகிர்ந்த ஸ்ரேயஸ் ஐயர்!.

    டாக்டரிடம் போகவேண்டாம்!. பாத்ரூமிலேயே பாடி செக்கப்!. சீனாவின் மிரட்டல் டெக்னாலஜி!

    புதுச்சேரி அரசியலில் அதிரடி!. பாஜகவை கழற்றிவிட ரங்கசாமி திட்டம்? தவெக-வுடன் ரகசிய கூட்டணி!

    Trending Posts

    திடீர் திருப்பம்!. நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு நாளைக்கு ஒத்திவைப்பு!

    April 26, 2026

    ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை!. வாஷிங்டன் துப்பாக்கிச்சூட்டிற்கு பிரதமர் மோடி கண்டனம்!

    April 26, 2026

    ரன்வேயில் தீப்பிடித்த விமானம்!. 200 பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!. டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு!

    April 26, 2026

     ”ஒன்றும் தெரியாது”!. விஜய்யின் அரசியல் குறித்து மம்மூட்டி ரியாக்‌ஷன்!

    April 26, 2026

    இமாலய இலக்கை சேஸ் செய்தது எப்படி?. வெற்றி ரகசியத்தை பகிர்ந்த ஸ்ரேயஸ் ஐயர்!.

    April 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.