தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்திருந்தார். அதிமுக, பாஜக சார்பில் தலா ஒரு தொகுதி புதிய நீதிக்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும், இரட்டை இலை மற்றும் தாமரை சின்னங்களில் தலா ஒரு தொகுதியில் போட்டியிடுவோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதிமுக சார்பில் ஒதுக்கப்பட்ட இத்தொகுதியில் சுந்தர். சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நேற்று பாஜக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலில் ஏ.சி.சண்முகத்தின் கட்சிக்கு இடம் அளிக்கப்படவில்லை. கூட்டணியில் உள்ள தென்னிந்திய பார்வார்டு பிளாக் கட்சிக்கு மட்டும் திருப்பத்தூர் தொகுதியில் வேட்பாளர் திருமாறன் அறிவிக்கப்பட்டார்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், ‘பாஜக எங்களுக்கு மிகவும் சவாலான ஒரு தொகுதியை ஒதுக்கினார்கள். அதனால் நானே அந்த தொகுதியை பாஜகவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டேன். பாஜக போட்டியிடுவதற்காக நான் ஒரு தொகுதியை விட்டுக்கொடுத்திருக்கிறேன். பாஜகவில் நல்ல வேட்பாளரை நிறுத்தியுள்ளார்கள். நானே வேட்பாளரை பரிந்துரை செய்தேன். அந்த தொகுதியில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். புதிய நீதிக் கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறது” என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version