தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராகச் சொத்துக்குவிப்பு புகார் மற்றும் பல்வேறு முறைகேடு புகார்கள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படாதது ஏன் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அ.தி.மு.க. சார்பில் கண்டனக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்றம் இது தொடர்பாக ஏற்கனவே சில வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தும், லஞ்ச ஒழிப்புத்துறை மெத்தனமாகச் செயல்படுவதாக அ.தி.மு.க.வின் சட்டப்பிரிவு நிர்வாகிகள் இந்தக் கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளனர்.

அமைச்சர் கே.என்.நேரு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாகக் கூறி, அது குறித்து விசாரணை நடத்தக் கோரி அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புகார்கள் மீது முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், தற்போது வரை லஞ்ச ஒழிப்புத்துறை அமைச்சர் மீது எந்தவிதமான முதல் தகவல் அறிக்கையும் (FIR) பதிவு செய்யவில்லை என்பது அ.தி.மு.க.வின் பிரதான புகாராக உள்ளது. அதிகாரத்தில் இருப்பவர்களைக் காப்பாற்ற லஞ்ச ஒழிப்புத்துறை ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாக அ.தி.மு.க.வினர் சாடியுள்ளனர்.

இந்நிலையில் ரூ.1,020 கோடி நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் தொடர்பாக CBI-ஐ நாட உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அ.தி.மு.க. சார்பில் எம்.பி. இன்பதுரை கடிதம் எழுதி உள்ளார். அதில், ஐகோர்ட் உத்தரவிட்டும் நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் தொடர்பாக வழக்குப்பதியாதது ஏன்? வழக்குப்பதியாமல் தாமதம் செய்வது குற்றவாளிகளுக்கு துணைபோகும் செயல். ஐகோர்ட் உத்தரவிட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை தன் கடமையை செய்யாததால் அ.தி.மு.க. CBI-ஐ நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version