கொடைக்கானலில் வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் உலா வருவது வழக்கமாக உள்ள நிலையில், இன்று வழிதவறி வந்த காட்டு மாடு ஒன்று தேவாலயத்திற்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயப் பகுதியிலிருந்து வழிதவறி வந்த காட்டு மாடு, குடியிருப்புப் பகுதிக்கு அருகில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்திற்குள் எதிர்பாராதவிதமாக நுழைந்தது. ஆலயத்திற்குள் காட்டு மாடு நடமாடுவதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இருப்பினும், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், அந்த காட்டு மாடு சிறிது நேரத்தில் அமைதியாக தேவாலயத்திற்கு வெளியே வந்து மீண்டும் வனப்பகுதியை நோக்கித் தனது பயணத்தைத் தொடர்ந்தது. வனவிலங்குகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version