Close Menu
    What's Hot

    பைரசி ஒழிப்பில் மத்திய அரசு தீவிரம்..!! டெலிகிராமுக்கு பறந்த நோட்டீஸ்..!! 15 நாள் கெடு..!!

    குதிரைப் பேரத்தில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரணை ; மனுவுக்கு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

    “140 கோடி இந்தியா எங்கே? 5 லட்சம் கேப் வெர்டே எங்கே?. அர்ஜென்டினாவையே கதறவிட்ட குட்டி நாடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தீர்வு கிடைக்குமா?. அரசு ஊழியர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!
    தமிழ்நாடு

    தீர்வு கிடைக்குமா?. அரசு ஊழியர்களுடன் அமைச்சர்கள் குழு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!

    Editor web3By Editor web3January 2, 2026Updated:January 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    government employees
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வரும் ஜனவரி 6 முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், ஜாக்டோ-ஜியோ, போட்டோ-ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் குழு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

    பழைய ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஊரக வளர்ச்சித் துறையின்செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் தமிழக அரசு கடந்த பிப்ரவரியில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழு, ஜாக்டோ-ஜியோ, தலைமைச் செயலக சங்கம், ஆசிரியர்கள் சங்கம் உள்பட அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் கடந்த அக்டோபரில் இடைக்கால அறிக்கையையும் கடந்த 30ம் தேதி முழு அறிக்கையையும் அரசிடம் சமர்ப்பித்தது.

    இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜன. 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்தது. இதைத்தொடர்ந்து, ஜாக்டோ-ஜியோ, போட்டோ ஜியோ உள்பட அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளை டிசம்பர் 22-ம் தேதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் அழைத்துப் பேசினர். ஆனால் அந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் திட்டமிட்டபடி ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என சங்கங்கள் அறிவித்தன

    இந்நிலையில், அமைச்சர்கள் குழு, ஜாக்டோ-ஜியோ,போட்டோ-ஜியோ நிர்வாகிகளு டன் தலைமைச் செயலகத்தில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்காக அந்த சங்கங்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. பேச்சு வார்த்தைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபொங்கல் கரும்பை உழவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்- அன்புமணி
    Next Article விஜய்யுடன் கூட்டணியை விரும்பாத ப.சிதம்பரம்!. புதிய கட்சி தொடங்குகிறாரா?.
    Editor web3
    • Website

    Related Posts

    பைரசி ஒழிப்பில் மத்திய அரசு தீவிரம்..!! டெலிகிராமுக்கு பறந்த நோட்டீஸ்..!! 15 நாள் கெடு..!!

    July 4, 2026

    குதிரைப் பேரத்தில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரணை ; மனுவுக்கு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

    July 4, 2026

    “140 கோடி இந்தியா எங்கே? 5 லட்சம் கேப் வெர்டே எங்கே?. அர்ஜென்டினாவையே கதறவிட்ட குட்டி நாடு!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பைரசி ஒழிப்பில் மத்திய அரசு தீவிரம்..!! டெலிகிராமுக்கு பறந்த நோட்டீஸ்..!! 15 நாள் கெடு..!!

    குதிரைப் பேரத்தில் கைதானவர்களை காவலில் எடுத்து விசாரணை ; மனுவுக்கு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

    “140 கோடி இந்தியா எங்கே? 5 லட்சம் கேப் வெர்டே எங்கே?. அர்ஜென்டினாவையே கதறவிட்ட குட்டி நாடு!

    உலகக்கோப்பை விறுவிறுப்பு!. கானாவை வீழ்த்தி கொலம்பியா த்ரில் வெற்றி!

    மும்பையை புரட்டிப்போட்ட கனமழை: 5 பேர் உயிரிழப்பு..!! கடலோர மாவட்டங்கள் உஷார்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.