Close Menu
    What's Hot

    உதகையில் தொடங்கிய 128 ஆவது மலர் கண்காட்சி!

    நிஜமான ‘GOAT’ படக் கணிப்பு!. முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுத்த ‘நம்பர் பிளேட்’ பரிசு!

    அம்மா உணவகங்களில் சுவையான உணவு வழங்க முதல்வர் விஜய் உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுக கூட்டணியில் இருந்து விலகலா?. ஸ்டாலினின் நிகழ்ச்சியில் ஆப்சென்ட்டான வேல்முருகன்!. 
    தமிழ்நாடு

    திமுக கூட்டணியில் இருந்து விலகலா?. ஸ்டாலினின் நிகழ்ச்சியில் ஆப்சென்ட்டான வேல்முருகன்!. 

    Editor web3By Editor web3February 6, 2026Updated:February 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vel
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி விலகவுள்ளதாக கூறப்படும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் வேல்முருகன் கலந்துகொள்ளாதது பேசுப்பொருளாகியுள்ளது,

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ-வுமான வேல்முருகன், திமுகவுடன் 2021 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்து வெற்றி பெற்றார். கூட்டணியில் இருந்தபோதும் சாதிவாரி கணக்கெடுப்பு, வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு, தொகுதி மேம்பாட்டு நிதி, தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் போன்ற விவகாரங்களில் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் வேல்முருகனின் பேச்சுகளை கண்டித்துள்ளனர்.

    பாமகவில் இருந்து விலகி தவாகவை தொடங்கிய வேல்முருகன் தமிழ் தேசியவாதம், வன்னியர் உரிமைகள், ஈழத் தமிழர் ஆதரவு போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். திமுக கூட்டணியில் இருந்தாலும், தனது கோரிக்கைகளுக்கு அழுத்தம் தருவதன் மூலம் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்துச் செல்கிறார். வேல்முருகனை “ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ-வாக இருந்தும் திமுக அரசைத் தாக்குவது தவறு” எனக் கூறுகிறது அறிவாலயம்.

    ஏற்கனவே, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில்,  மூன்று முறை பண்ருட்டி தொகுதியில் இருந்து எம்.எல்,ஏ-வான தவாக தலைவர் வேல்முருகன், திமுக கூட்டணியில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அதனை உறுதிப்படுத்தும் வகையில், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் வேல்முருகன் கலந்துகொள்ளாதது பேசுப்பொருளாகியுள்ளது. அண்மை காலமாக கூட்டணி நிலைப்பாட்டில் தனது கருத்தை மாற்றிய வேல்முருகன், கடந்த 3 நாட்களாக மாவட்ட செயலாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் பெரும்பாலானோர் திமுக கூட்டணியை விரும்பவில்லையாம். இதனிடையே தவாகவை கூட்டணியில் சேர்க்க அதிமுக அணுகிறதாம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉடலின் எந்தப் பாகங்களில் முதலில் புற்றுநோய் உருவாகிறது?. அதிர்ச்சி தகவல்!
    Next Article போதைப் பொருள் வழக்கு… சிக்கிய 2 நடிகைகள்… சினிமா பிரபலங்கள் பட்டியலை தோண்டும் போலீஸ்..!
    Editor web3
    • Website

    Related Posts

    உதகையில் தொடங்கிய 128 ஆவது மலர் கண்காட்சி!

    May 18, 2026

    நிஜமான ‘GOAT’ படக் கணிப்பு!. முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுத்த ‘நம்பர் பிளேட்’ பரிசு!

    May 18, 2026

    அம்மா உணவகங்களில் சுவையான உணவு வழங்க முதல்வர் விஜய் உத்தரவு!

    May 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உதகையில் தொடங்கிய 128 ஆவது மலர் கண்காட்சி!

    நிஜமான ‘GOAT’ படக் கணிப்பு!. முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுத்த ‘நம்பர் பிளேட்’ பரிசு!

    அம்மா உணவகங்களில் சுவையான உணவு வழங்க முதல்வர் விஜய் உத்தரவு!

    யானைகள் சண்டையில் சென்னை பெண் உயிரிழப்பு!. சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்!

    அதிமுக என்ற ஆலமரத்தை சாய்க்க பார்க்கிறார்கள்; பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொள்வோம்!. இபிஎஸ்!.

    Trending Posts

    ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்!. தமிழக அரசு அதிரடி!

    May 18, 2026

    கேரளத்தில் மகளிருக்கு இலவச பஸ் பயணம்!. பதவியேற்ற முதல் நாளிலேயே 3 முக்கிய அறிவிப்புகள்!

    May 18, 2026

    நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்!. சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு!

    May 18, 2026

    புதிய பாடத்திட்டம்; ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு!. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

    May 18, 2026

    பள்ளிகள் திறப்பு!. அமைச்சருடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை!

    May 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.