கோவை அருகே தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி கணினி அறிவியல் படித்து வருபவர் 19 வயது மாணவி. இவர் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக அப்பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது அவரது பின்னால் இளைஞர் ஒருவர் தொடர்ந்து வந்தார். திடீரென அந்த கல்லூரி மாணவியை கட்டிப் பிடித்து அருகில் உள்ள தனிமையான பகுதிக்கு இழுத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டதால், அருகில் இருந்த பொதுமக்கள் திரண்டு குற்றவாளியை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை சூலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுகேந்திர் பாஷா என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

பட்டப் பகலில் கல்லூரி மாணவியை கட்டிப்பிடித்து அத்துமீற முயன்ற வடமாநில வாலிபரால் அப்பகுதி மாணவிகள் மற்றும் பெற்றோர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version