Close Menu
    What's Hot

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்புமனு ஆவணங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் ஆர்டர்..!!

    இனி கேட்குமா இந்த “என் இனிய தமிழ் மக்களே”…?? இயக்குநர்கள் டி.ராஜேந்தர், சேரன் இரங்கல்..!!

    ”காலத்தால் அழியாத காவிய நாயகன்” – பாரதிராஜாவிற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் புகழஞ்சலி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»டாஸ்மாக் முறைகேடு வழக்கு… அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை…
    Featured

    டாஸ்மாக் முறைகேடு வழக்கு… அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை…

    Editor TN TalksBy Editor TN TalksJune 20, 2025Updated:June 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ரூ.1,000கோடி டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் , வி.லட்சுமி நாராயணன் அமர்வு, டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி, அமலாக்கத்துறை தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், தங்கள் அனுமதியின்றி வீட்டுக்குள் நுழைய வேண்டாம் என ஒட்டப்பட்ட நோட்டீசை திரும்பப் பெறுவதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களை திரும்ப ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீதான இடைக்கால உத்தரவை நீதிபதிகள், தள்ளிவைத்திருந்தனர். நீதிபதிகள் எம்.எச்ஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வு, இன்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

    நீதிபதிகள் இன்று (20.06.2025) பிறப்பித்த இடைக்கால உத்தரவில், டாஸ்மாக் முறைகேட்டில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு தொடர்பு உள்ளது என்பதற்கு அமலாக்கத் துறையிடம் எந்த ஆதாரங்களும் இல்லை. எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், இருவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தவும், பறிமுதல் செய்யவும் அமலாக்கத் துறைக்கு எந்த அதிகாரவரம்பும் இல்லை எனக் கூறி, அமலாக்கத் துறையின் மேல் நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும், சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், பிரதான வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
    அப்போது, இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக உத்தரவை நிறுத்தி வைக்கும்படி, அமலாக்கத் துறை முன் வைத்த கோரிக்கையை நீதிபதிகள், ஏற்க மறுத்து விட்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகருணை அடிப்படையில் வேலை… நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அரசு அதிகாரிகள் ஆஜராக உத்தரவு…
    Next Article மகனின் திருமண ஒத்திவைப்பு போருக்கான விலை… நெதன்யாகுவின் கருத்தால் சர்ச்சை…
    Editor TN Talks

    Related Posts

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்புமனு ஆவணங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் ஆர்டர்..!!

    June 10, 2026

    இனி கேட்குமா இந்த “என் இனிய தமிழ் மக்களே”…?? இயக்குநர்கள் டி.ராஜேந்தர், சேரன் இரங்கல்..!!

    June 10, 2026

    ”காலத்தால் அழியாத காவிய நாயகன்” – பாரதிராஜாவிற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் புகழஞ்சலி!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்புமனு ஆவணங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் ஆர்டர்..!!

    இனி கேட்குமா இந்த “என் இனிய தமிழ் மக்களே”…?? இயக்குநர்கள் டி.ராஜேந்தர், சேரன் இரங்கல்..!!

    ”காலத்தால் அழியாத காவிய நாயகன்” – பாரதிராஜாவிற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் புகழஞ்சலி!

    தவெக-வில் இணைந்த 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்!. நீதிமன்றத்தில் புதிய வழக்கு!

    காற்றில் கலந்தார் ‘இயக்குநர் இமயம்’..!! நடிகர் யோகிபாபு உருக்கமான இரங்கல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.