Author: Editor TN Talks

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டில் போலீஸ் விசாரணையின் போது தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இதில், அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் முழு விசாரணையும் முடிவடைந்த நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துகுமரன், கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், தண்டனை குறித்து மத்திய அரசின் சி.பி.ஐ. மற்றும் மாநில அரசின் நிலைப்பாட்டை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். கடந்த 30-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம்…

Read More

திருச்சி காவலர் மீது மோதிய ஆதவ் அர்ஜுனாவின் வாகனம் -கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் காவலர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று திருச்சி மாநகராட்சி மண்டலம் இரண்டு அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். திருச்சி மரக்கடை பகுதியில் பிரச்சாரத்தை துவங்கிய பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார் இதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் விஜய் பிரச்சாரை முடித்துவிட்டு சென்ற பிறகு தவெக பொதுச்செயலாளர் பாதுகாப்பு அங்கிருந்து புறப்பட்டபோது பாதுகாப்பு பணியில் இருந்த திருச்சி ஆயுதப்படை காவலர் சதீஷ் என்பவர் கால் முறிவு ஏற்பட்டது இதனை அடுத்து அங்கு நின்று நடந்த போலீசார் காவலரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Read More

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களம் காணவுள்ள தவெக தேர்தல் வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளது. குறிப்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஏற்கனவே பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்த அவர், அங்கு பிரசாரமும் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, இன்று திருச்சி வந்தடைந்த அவர், விமான நிலையத்தில் இருந்து திறந்தவெளி வேனில் ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது, அவரை காணும் ஆர்வத்தில் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த பெண் ஒருவர் கீழே விழுந்ததை பார்த்த அவர், வேனில் இருந்து இறங்கிச் சென்று அப்பெண்ணிடம் நலம் விசாரித்தார். தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டிடுவதற்கான வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கினார். அதன்பின் திருச்சி, தஞ்சாவூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார் விஜய்.

Read More

சட்டத்தில் எந்தத் தடையும் இல்லாதபோது, ​​ஐபில் போட்டிகளை நடத்துவதை நீதிமன்றம் எப்படித் தடுக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளர் பிரபாகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், தேர்தல் சமயத்தில் சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்த தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் முன்பு முறையிட்டார். ஆனால் இந்த முறையீட்டை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். வழக்குக்கு எண் வழங்கப்பட்டு, விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட பின்னரே, அது வழக்கமான நடைமுறையின்படி எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். சட்டத்தில் எந்தத் தடையும் இல்லாதபோது, ​​போட்டிகளை நடத்துவதை நீதிமன்றம் எப்படித் தடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி,நீங்கள் போட்டியைப் பார்க்க விரும்பவில்லை என்றால், வீட்டிலேயே இருங்கள்,போட்டிகள்…

Read More

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டசபை தொகு திகளுக்கு வாக்குப்பதிவு வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். களத்தில் உள்ள 294 வேட்பாளர்கள் தொகுதிவாரியாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரியில் தவெக மற்றும் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகம் வேட்பாளர்களை ஆதரித்து. அக்கட்சி தலைவர் விஜய் வருகிற 5-ந் தேதி பிரசாரம் செய்வதாக இருந்தது. ஆனால், போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு நாள் முன்னதாக, அதாவது 4-ந்தேதி (சனிக்கிழமை) பிரசாரம் செய்ய அனுமதித்துள்ளனர். கொக்குபார்க் சிக்னல், வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சதுக்கம், சோனாம்பாளையம் சந்திப்பு, கூடப்பாக்கம் ஆகிய 4 இடங்களில் மட்டும் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கி 4 மணி நேரத்திற்குள் பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்…

Read More

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன… அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வேட்பு மனு தாக்கல் மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழக பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்… கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த மேலிட பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், தமிழக பாஜக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் அந்த ஆலோசனையின் இறுதியில் ஒரு தொகுதிக்கு மூன்று பேர் வீதம் 81 நபர்கள் அடங்கிய பட்டியல் அகில இந்திய தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது… மத்திய தேர்தல் குழு இன்னும் கூடாத நிலையில் தொடர்ச்சியாக எரிவாயு போர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டதன்…

Read More

பிரதமர் நரேந்திர மோடி, நாளையும், நாளை மறுநாளும் என இரண்டு நாட்கள் பயணமாக சென்னை வருகிறார். நாளை பிற்பகல் 3.20 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வந்தடையும் அவர், சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்று அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். பின் மாலை 6 மணியளவில் சென்னை திரும்பும் பிரதமர், கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார். இரவில் ஹோட்டலில் வைத்து பாஜக தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் சென்னையிலிருந்து கேரளாவிற்கு செல்கிறார். பிரதமரின் வருகையை ஒட்டி, சென்னையில் சுமார் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பிரதமர் செல்லும் வழித்தடங்களில் 10 அடிக்கு ஒரு போலீஸ் வீதம் பாதுகாப்புக்காக நிறுத்தப்படவுள்ளனர். அத்தோடு கிண்டி, மற்றும் மீனம்பாக்கம் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு பகுதிகளிலும் ட்ரோன்கள் பறக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Read More

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து, தொகுதி பங்கீடு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தவெக சார்பில் முதல் முறையாக விஜய் களம்காணவுள்ள நிலையில், வேட்பாளார் பட்டியல் இன்னமும் வெளியிடவில்லை. மாறாக அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பிருக்கிறது என அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த நிலையில், இதற்கான விளக்கத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், தமிழ்நாட்டில் அதிமுகவுடனான உறவு சகோதரத்துவ அடிப்படையில் வலுவாக இருப்பதாக தெரிவித்த ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, தவெக தலைவர் விஜயுடன் கூட்டணி குறித்து பேசவில்லை எனவும் கூறினார். தமிழ்நாட்டில் பாஜகவின் பணி மிகக் குறைவானது எனவும் கூட்டணி கட்சிகளே பெருவாரியான பொறுப்புகளை மேற்கொண்டதாகவும் கூறினார். தேசிய ஜனநாயக் கூட்டணியை பொறுத்தவரை மூத்த சகோதரர் போன்று அதிமுக செயல்படுவதாக தெரிவித்த அமித்…

Read More

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு என பிசியாக வேலை பார்த்து வருகின்றன. குறிப்பாக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அதன்படி, ” சைதாப்பேட்டை – செந்தமிழன் திருச்சி மேற்கு – ராஜசேகரன் பெரியகுளம் – டாக்டர் கதிர்காமு மடத்துக்குளம் – சண்முகவேலு திருப்பத்தூர் – ஞானசேகரன் காரைக்குடி – தேர்போகி பாண்டி நாங்குநேரி – இசக்கி முத்து பெரியகுளம் ( தனி ) – கதிர்காமு மன்னார்குடி – எஸ்.காமராஜ் திருவையாறு – கார்த்திகேயன் பூந்தமல்லி ( தனி ) – ஏழுமலை”…

Read More

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பணிகளை அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக செய்து வருகின்றன. தொகுதி பங்கீடு, சின்னம் ஒதுக்குதல், கூட்டணி பேச்சுவார்த்தை என ஒவ்வொரு கட்சியின் தலைமை அலுவலகலம் சூடுபறக்க வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளையும், அதன் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதி கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் இயக்குநர் சுந்தர்.சி போட்டியிட இருப்பதாக அக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். இவர் இரைட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More