Author: Editor TN Talks
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், 62 வயதில் தனது காதலி ஜோடி ஹேடனை திருமணம் செய்து கொண்டார். ஆஸ்திரேலிய தொழிலாளர் கட்சியின் தலைவர் அந்தோனி அல்பானீஸ், கடந்த 2022ம் ஆண்டு முதல் நாட்டின் பிரதமராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் 2000ம் ஆண்டு கார்மல் மெரி டெம்பட் என்பவரை அன்பானீஸ் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இந்தநிலையில், கடந்த 2019ம் ஆண்டு அல்பானீஸ்- டெம்பட் தம்பதி விவகாரத்து பெற்றனர். இதனிடையே கடந்த 2020ம் ஆண்டு முதல் ஜோடி ஹேடன் என்பவருடன் அல்பானீசுக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இந்தநிலையில், அந்தோனி அல்பானீஸ் தனது 62 வயதில், 47 வயது காதலியான ஜோடி ஹேடனை இன்று (நவ. 29) திருமணம் செய்து கொண்டார். தி லாட்ஜில் அமைந்துள்ள பிரதமர் குடியிருப்பில் இந்த திருமணம் நடைபெற்றது. இரு தரப்பினரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமண நிகழ்ச்சியில் கலந்து…
புயலை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: “டிட்வா” புயலின் காரணமாக சென்னை, கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளுக்கு ஏற்றவாறு உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். புயலின் தீவிரம் உணர்ந்து, அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதை உறுதி செய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன். பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள களத்தில் தயாராக இருக்குமாறு அதிமுக நிர்வாகிகளையும், கழக உடன்பிறப்புகளையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
புயல் காரணமாக, சென்னையில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யக்கூடும் என 2 நாள்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இன்று (29-11-2025) நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (30-11-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நேற்று (28-11-2025) இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (29-11-2025) காலை 0830 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு இலங்கை பகுதிகளில், இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கே சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவிலும், வேதாரண்யத்திலிருந்து தென்கிழக்கே 140 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 170 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 280 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கே 380 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (30-ஆம் தேதி) அதிகாலை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம்…
டிட்வா புயல் தாக்கம் காரணமாக ராமேசுவரத்தில் தொடர் கனமழையால் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளதுடன், வீடுகளுக்குள் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். டிட்வா புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று மதியம் தொடங்கிய மழை இன்று மாலை வரையும் தொடர்ந்து பெய்து வருகிறது. ராமேசுவரம் சுற்றுவட்டார கடலோரப் பகுதிகளில் கனமழையும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. பாம்பன் துறைமுகத்தில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிடம் பகுதிகளில் 7 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளது. தொடர் கனமழையால் ராமேசுவரம் அண்ணாநகர், காந்திநகர், திருவள்ளுவர் நகர், நடராஜபுரம், பாம்பன் சின்னப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து தேங்கியுள்ளது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் வைத்திருந்த வீட்டு உபயோக பொருட்கள், கட்டில் பாத்திரம்…
அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள நிலையில், வெள்ளம் வரக்கூடும் என்ற பீதியில் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராம மக்கள் உள்ளனர். வேப்பம்பட்டு கிராமத்தில் உள்ள ராமகிருஷ்ணாநகர், டன்லப் நகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் ஆண்டுதோறும் மழைகாலத்தில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. ராமகிருஷ்ணா நகரில் சுமார் 3 அடி உயரம் வெள்ளம் தேங்கும் நிலை உள்ளது. இதற்கு, மழைநீர் செல்லும் வழியில் சிலர் அடைப்புகளை ஏற்படுத்தி இருப்பதே காரணமாக கூறப்படுகிறது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களாக இருந்த ஆல்பி ஜான் வர்கீஸ், பிரபுசங்கர் ஆகியோர் வேப்பம்பட்டு கிராமத்திற்கு நேரிடையாக வந்து வெள்ள பாதிப்பை சரி செய்து வந்தனர். குறிப்பாக, ஆல்பி ஜான் பலமுறை நேரில் வந்து ராமகிருஷ்ணா நகரை பார்வையிட்டு சரி செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால், வேப்பம்பட்டு கிராம மக்கள், மீண்டும் வெள்ளம் வரக்கூடுமோ என்ற…
வயிறு எரிந்து சொல்கிறேன் உன் அரசியல் வாழ்வு முடிந்து விட்டது என்று அன்புமணிக்கு சாபம் விடும் வகையில் ராமதாஸ் பேசினார். கடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் அக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமதாஸ் நிறைவுரையாற்றினார். அப்போது அவர், “வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வேண்டும் என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை போராடி வருகிறார்கள். நமது போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெறும். எனக்கு ஒரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான் என்பது பாடல் வரி. ஆனால் எனக்கு நடந்த கொடுமை உங்களுக்கெல்லாம் தெரியும். என்னுடைய உயிரைத் தான் அவன் பறிக்கவில்லை. மீதி எல்லாவற்றையும் பறித்து விட்டான். உரிமையை பறித்து விட்டார். நான் சிந்திய வியர்வை வீணாகப் போய் விட்டது. பாட்டாளி மக்கள் கட்சியில் எனது உரிமையை யாராலும் பறிக்க முடியாது. எந்த சுப்ரீம் கோர்ட்டுக்கு போனாலும் பறிக்க…
டிட்வா புயல் காரணமாக கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவுகளை சமாளிக்க இலங்கையில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவதாக அந்நாட்டின் அதிபர் அநுர குமார திசாநாயக்க அறிவித்தார். வெள்ளிக்கிழமை தேதியிட்டு இன்று அதிபர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இலங்கையில் நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவசர நிலையை அறிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். அதிபர் திசாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில் மருத்துவர்களின் தொழிற்சங்கம் அவசரகால நிலையை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. நிவாரண உதவிகள் ஒருங்கிணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் செயல்முறையை அவசர நிலை பிரகடனம் விரைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிட்வா புயல் இன்று (நவம்பர் 29) இலங்கையை விட்டு வெளியேறியது. இதுகுறித்து பேசிய இலங்கை வானிலை ஆய்வுத் துறையின் இயக்குநர் ஜெனரல் அதுல கருணாநாயக்க, “டிட்வா புயல் இலங்கையிலிருந்து வெளியேறி இந்திய…
கோவையில் அரசு ஊழியர்கள் குடியிருப்பில் நடந்த துணிகரக் கொள்ளையில் தொடர்புடைய உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீஸார் சுட்டுப் பிடித்தனர். கோவை மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் பகுதியில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு 2000-க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் அரசுத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள், குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (நவ.28) மாலை பணிக்குச் சென்றிருந்த அரசு ஊழியர் ஒருவர் வீடு திரும்பியபோது, அவரது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அவரது வீடு போலவே அடுத்தடுத்து 13 வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதில் ஒருவர் வீட்டில் 30 பவுன் நகை திருடு போயிருந்தது. ஒட்டுமொத்தமாக 13 வீடுகளின் சேர்த்து 56 பவுன் நகை, 3 லட்சம் பணம், 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவை திருடு போயிருந்தன. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவர்கள் வீட்டு பூட்டை உடைத்து…
வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதிகளிடம் ஒன்றிய பாஜக அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும். மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே, தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பது சரியா என தமிழக முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (29-11-2025) காலை 10.00 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தின் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே, தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பாஜக அரசு புறக்கணிப்பது சரியா? தமிழ்நாட்டின் கோரிக்கைகளை – தேவைகளைக் கடிதங்களாக, நேரில் மனுக்களாக, சட்டமன்றத் தீர்மானங்களாக எடுத்துச் சொல்லியும் காதில் வாங்காமல் இருப்பது நியாயமல்ல. அதிகமான வரி வருவாயைத் தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மனச்சாட்சியுள்ள யாரும்…