Close Menu
    What's Hot

    15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளம் பயன்படுத்த தடை!. ஐரோப்பிய யூனியனில் முதல் நாடாக சட்டம் இயற்றியது பிரான்ஸ்!

    அமெரிக்காவில் ஜெனரிக் மருந்துகளுக்கு வரிவிலக்கு.. 2 ஆண்டுகள் சலுகை அறிவித்த டிரம்ப்!

    91 டாலராக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை.. அமெரிக்க தாக்குதலால் உலக சந்தையில் பரபரப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»மாவட்டம்»ராமேசுவரத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் – பொதுமக்கள் கடும் அவதி!
    மாவட்டம்

    ராமேசுவரத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் – பொதுமக்கள் கடும் அவதி!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rndddd
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டிட்வா புயல் தாக்கம் காரணமாக ராமேசுவரத்தில் தொடர் கனமழையால் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளதுடன், வீடுகளுக்குள் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

    டிட்வா புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நேற்று மதியம் தொடங்கிய மழை இன்று மாலை வரையும் தொடர்ந்து பெய்து வருகிறது. ராமேசுவரம் சுற்றுவட்டார கடலோரப் பகுதிகளில் கனமழையும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. பாம்பன் துறைமுகத்தில் 4-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிடம் பகுதிகளில் 7 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளது. தொடர் கனமழையால் ராமேசுவரம் அண்ணாநகர், காந்திநகர், திருவள்ளுவர் நகர், நடராஜபுரம், பாம்பன் சின்னப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து தேங்கியுள்ளது.

    வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் வைத்திருந்த வீட்டு உபயோக பொருட்கள், கட்டில் பாத்திரம் தண்ணீரில் மிதக்கின்றது. தண்ணீரில் இருந்து பாதுகாக்க குழந்தைகளுடன் கட்டிலில் அமர்ந்து வாழ்க்கை நடத்துகின்றனர்.

    hindutamil prod%2F2025 11 29%2F2e1n6gre%2FWhatsApp Image 2025 11 29 at 6.19.46 PM

    பெரும்பாலான குடும்பங்கள் அங்குள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சில பகுதிகளில் மழைநீருடன், கழிவுநீர் சேர்ந்து வீடுகளை சுற்றி இருப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

    இரவு நேரங்களில் தேங்கியுள்ள மழை நீரில் இருந்து பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துகள் வீடுகளுக்குள் நுழைவதால் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். ராமேசுவரம் நகராட்சி, பாம்பன், மண்டபம் ஊராட்சி நிர்வாகங்கள் தேங்கியுள்ள மழை நீரைவெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் அண்ணாநகர், திருவள்ளுவர் நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருக்கள், வீடுகளில் மழை நீர் முழங்கால் அளவுக்கு தேங்கி இருப்பதால் அப்பகுதி மக்கள் தங்கள் வளர்க்கும் நாய், பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகள், ஆடுகளை தூக்கிக்கொண்டு மேடான வேறு பகுதிக்கு செல்கின்றனர்.

    வானம் இருட்டி மேகமூட்டத்துடன் காணப்படுவதால் பாம்பன் சாலை பாலத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. கடந்த 5 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. தொடர்மழையால் ராமேசுவரம் உள்ளிட்ட கடலோர பகுதிகள் மற்றும் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீண்டும் வெள்ளம்? பீதியில் வேப்பம்பட்டு கிராமம்
    Next Article அதி கனமழை: 2 நாள்களுக்கு ரெட் அலர்ட்
    Editor TN Talks

    Related Posts

    தனியார் மயமாகும் டாஸ்மாக் கடைகள்..?? அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு பேட்டி..!!

    July 22, 2026

    நாளை நடிகர் சூர்யாவுக்கு ஹேப்பி பர்த்டே..!! முருகன் கோயிலில் வெள்ளித்தேர் இழுத்த ரசிகர்கள்..!!

    July 22, 2026

    மறைமுக ஏலத்தில் பருத்தி விற்பனை அமோகம்..!! திருவாரூர் விவசாயிகள் மகிழ்ச்சி..!!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளம் பயன்படுத்த தடை!. ஐரோப்பிய யூனியனில் முதல் நாடாக சட்டம் இயற்றியது பிரான்ஸ்!

    அமெரிக்காவில் ஜெனரிக் மருந்துகளுக்கு வரிவிலக்கு.. 2 ஆண்டுகள் சலுகை அறிவித்த டிரம்ப்!

    91 டாலராக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை.. அமெரிக்க தாக்குதலால் உலக சந்தையில் பரபரப்பு!

    தீவிரமடையும் போர்!. “ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை”!. டிரம்ப் திட்டவட்டம்!

    நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து கோர விபத்து!. 41 பேர் பலி; கடல் சீற்றத்தால் மீட்புப் பணியில் பெரும் சவால்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.