Close Menu
    What's Hot

    தேர்வுத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான தடியடி குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும – பிரியங்கா காந்தி ஆவேசம்!

    காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிண்டன் ஏன் இடம்பெறவில்லை?.

    ”நீட் போராட்டம்: பதில்களைத் தேடி வரும் குழந்தைகளுக்கு  பரிசு லத்திகளா?” – கமல்ஹாசன் காட்டம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»உலகம்»இலங்கையை புரட்டிப் போட்ட டிட்வா புயல்: 123 பேர் பலி
    உலகம்

    இலங்கையை புரட்டிப் போட்ட டிட்வா புயல்: 123 பேர் பலி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    lnkkkkkkk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டிட்வா புயல் காரணமாக கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவுகளை சமாளிக்க இலங்கையில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்துவதாக அந்நாட்டின் அதிபர் அநுர குமார திசாநாயக்க அறிவித்தார்.

    வெள்ளிக்கிழமை தேதியிட்டு இன்று அதிபர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, இலங்கையில் நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவசர நிலையை அறிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். அதிபர் திசாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில் மருத்துவர்களின் தொழிற்சங்கம் அவசரகால நிலையை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. நிவாரண உதவிகள் ஒருங்கிணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் செயல்முறையை அவசர நிலை பிரகடனம் விரைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டிட்வா புயல் இன்று (நவம்பர் 29) இலங்கையை விட்டு வெளியேறியது. இதுகுறித்து பேசிய இலங்கை வானிலை ஆய்வுத் துறையின் இயக்குநர் ஜெனரல் அதுல கருணாநாயக்க, “டிட்வா புயல் இலங்கையிலிருந்து வெளியேறி இந்திய கடற்கரையை நோக்கி நகர்வதை நாங்கள் கவனித்தோம். இருப்பினும், கனமழை மற்றும் அதிவேக காற்றுடன் கூடிய மழை நீடிக்கும்” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

    இன்று காலை 9 மணி நிலவரப்படி இலங்கையில் கனமழை பாதிப்புகளால் 123 பேர் உயிரிழந்தனர், 130 பேர் காணாமல் போயுள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

    டிட்வா புயல் காரணமாக சென்னைக்கு பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, துபாயில் இருந்து இலங்கை வழியாக சென்னைக்கு பயணித்த சுமார் 150 தமிழர்கள் உட்பட 300 பயணிகள் கடந்த மூன்று நாட்களாக கொழும்புவின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கின்றனர். போதுமான உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டினர்.

    கொழும்பு விமானநிலையத்தில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு உரிய உதவிகளை செய்ய கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இலங்கையில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்ய, தமிழக அதிகாரிகள் இந்திய தூதரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவையில் அரசு ஊழியர்கள் குடியிருப்பில் துணிகர கொள்ளை: 3 பேரை சுட்டுப் பிடித்த போலீஸ்!
    Next Article உன் அரசியல் வாழ்வு முடிந்து விட்டது – அன்புமணிக்கு சாபம் விட்ட ராமதாஸ்
    Editor TN Talks

    Related Posts

    தாய்லாந்தில் பயங்கரவாதத் தாக்குதல்..!! துப்பாக்கிச் சூட்டில் 5 வீரர்கள் பரிதாப பலி..!!

    July 23, 2026

    ஜப்பானில் மனிதர்களுக்கான ஃபிரிட்ஜ் கண்டுபிடிப்பு..! விலை என்ன தெரியுமா?

    July 22, 2026

    40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமெரிக்கா–லெபனான் நேரடி விமான சேவை – டிரம்ப் திடீர் அறிவிப்பு

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்வுத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான தடியடி குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும – பிரியங்கா காந்தி ஆவேசம்!

    காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிண்டன் ஏன் இடம்பெறவில்லை?.

    ”நீட் போராட்டம்: பதில்களைத் தேடி வரும் குழந்தைகளுக்கு  பரிசு லத்திகளா?” – கமல்ஹாசன் காட்டம்

    வெளியான ஜனநாயகன்….. காலியான தலைமைச் செயலகம்!

    ஜாமீன் கோரி திமுக எம்.எல்.ஏ மனு… 27ஆம் தேதி விசாரணை – பதில் அளிக்க காவல் துறைக்கு உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.