Close Menu
    What's Hot

    நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

    கிணற்றில் மிதந்த 3 குழந்தைகள் மற்றும் தாயின் சடலம்!. வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்ததால் தீவிர விசாரணை!

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»உன் அரசியல் வாழ்வு முடிந்து விட்டது – அன்புமணிக்கு சாபம் விட்ட ராமதாஸ்
    அரசியல்

    உன் அரசியல் வாழ்வு முடிந்து விட்டது – அன்புமணிக்கு சாபம் விட்ட ராமதாஸ்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 29, 2025Updated:November 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anbumani ramadoss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வயிறு எரிந்து சொல்கிறேன் உன் அரசியல் வாழ்வு முடிந்து விட்டது என்று அன்புமணிக்கு சாபம் விடும் வகையில் ராமதாஸ் பேசினார்.

    கடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் அக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமதாஸ் நிறைவுரையாற்றினார். அப்போது அவர், “வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வேண்டும் என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை போராடி வருகிறார்கள். நமது போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெறும்.

    எனக்கு ஒரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான் என்பது பாடல் வரி. ஆனால் எனக்கு நடந்த கொடுமை உங்களுக்கெல்லாம் தெரியும். என்னுடைய உயிரைத் தான் அவன் பறிக்கவில்லை. மீதி எல்லாவற்றையும் பறித்து விட்டான். உரிமையை பறித்து விட்டார்.

    நான் சிந்திய வியர்வை வீணாகப் போய் விட்டது. பாட்டாளி மக்கள் கட்சியில் எனது உரிமையை யாராலும் பறிக்க முடியாது. எந்த சுப்ரீம் கோர்ட்டுக்கு போனாலும் பறிக்க முடியாது. டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். சூழ்ச்சியினால் அன்புமணி தன்னை தலைவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இது அனைவருக்கும் நன்றாக தெரியும்.

    எந்த நீதிமன்றத்திற்கு சென்றாலும் இந்த ராமதாஸுக்கு தான் வெற்றி. ராமதாஸை யாராலும் தோற்கடிக்க முடியாது. 46 ஆண்டுகளில் 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து, பேசி, அவர்களிடம் நம் சமூகத்தின் நிலைமையை சொல்லி வளர்த்த இந்த கட்சியை நீ முழுவதும் அபகரிக்க எண்ணுகிறாய்” என்று அன்புமணியை கடுமையாக விமர்சித்தார்.

    தொடர்ந்து பேசிய ராமதாஸ், “28.5.2022 ஆம் ஆண்டு திருவேற்காடு பொதுக் குழுவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணியின் பதவி காலம் முடிந்து விட்டது. இப்பொழுது ஏமாற்றி – பொய் சொல்லி தேர்தல் ஆணையத்தையே விலைக்கு வாங்கி விட்டார். என்னுடன் இருந்தவர்களையும் விலைக்கு வாங்குகிறார். இப்ப தேர்தல் கமிஷனையே விலைக்கு வாங்கிவிட்டார். உண்மையை சொன்னாலும் தேர்தல் ஆணையத்திற்கு புரியவில்லை. ஏன் என்றால் பணம் பத்தும் செய்யும் என்று சொல்வார்கள். பணம் தேர்தல் கமிஷன் வரைக்கும் சென்று விட்டது.

    ஆலமரத்தில் அமர்ந்து கோடாலி கொண்டு மரத்தை வெட்ட பார்க்கிறார். அது உன்னால் முடியாது. உன் அரசியல் பயணம் முடிந்து விட்டது. நான் வயிறு எரிந்து சொல்கிறேன். உன் அரசியல் பயணம் முடிவடைந்து விட்டது” என்று கண்ணீர் மல்க ராமதாஸ் பேசினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇலங்கையை புரட்டிப் போட்ட டிட்வா புயல்: 123 பேர் பலி
    Next Article மீண்டும் வெள்ளம்? பீதியில் வேப்பம்பட்டு கிராமம்
    Editor TN Talks

    Related Posts

    மும்பை: ’நீட்’ போராட்டக்காரர்களுக்கு அதிகாலை வாட்ஸ்அப்பில் போலீஸ் நோட்டீஸ்

    July 21, 2026

    பிரதமர் இல்லம் நோக்கி பேரணி: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அதிரடி கைது! 

    July 21, 2026

    “நீட் பிரச்சனையில் இடைக்கால தீர்வே தவெக நிலைப்பாடு”

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட்டை ஒழிப்பதே..!! அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு..!! மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

    கிணற்றில் மிதந்த 3 குழந்தைகள் மற்றும் தாயின் சடலம்!. வயிற்றில் கல் கட்டப்பட்டிருந்ததால் தீவிர விசாரணை!

    சர்வதேச ஓய்வுக்குப் பிறகு.. உள்நாட்டு மைதானத்தில் புயலைக் கிளப்பிய பென் ஸ்டோக்ஸ்..!!

    முதல்வரை சந்திக்கவில்லை.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை தான் சந்தித்தேன்..!! ‘தெருக்குரல்’ அறிவு பரபரப்பு பதிவு!

    நீட் விவகாரம்.. ராகுல் காந்தி கைது சம்பவம்..!! மத்திய அரசை சாடிய தவெக!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.