Author: Editor TN Talks

சென்னைக்கு தெற்கே 400 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தெற்கு-தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள டித்வா புயல், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்பகுதியை நாளை அதிகாலை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இலங்கையின் கடலோர பகுதியிலும், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலிலும் உருவான டித்வா புயல், கடந்த 6 மணி நேரத்தில் 8 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. காலை 5.30 மணி நிலவரப்படி இந்த புயல், இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு கிழக்கு-தென்கிழக்கே 80 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும், காரைக்காலுக்கு தெற்கு-தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு-தென்கிழக்கே 300 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கே 400 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.…

Read More

மழையால் இதுவரை மிகப்பெரிய பாதிப்பு இல்லை. புயல் கரையை கடக்கும்வரை வெளியே வரவேண்டாம் என்ற முதல்வரின் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மழையால் இதுவரை மிகப்பெரிய பாதிப்பு இல்லை. குறிப்பாக உயிரிழப்பு ஏதுமில்லை. போக்குவரத்து எங்கும் தடைபடவில்லை. 16 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 24 குடிசைகள் இடிந்து விழுந்துள்ளன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் தோப்புத்துறையில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. டித்வா புயல் சென்னைக்குள் வராமல் சென்னையை ஒட்டியே செல்லும் என வானிலை மையம் கூறியுள்ளது. இன்றும், நாளையும் கடற்கரை பகுதிக்குச் செல்ல வேண்டாம். காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக செல்பி எடுப்பதாக கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம். படகு, பயிர் சேதங்களை கணக்கிடும் பணிகள் நவம்பர் 30-க்கு…

Read More

ஈரோட்​டில் டிச.20-ல் நடை​பெறும் நிகழ்ச்​சி​யில், தமிழருவி மணி​யனின் காம​ராஜர் மக்​கள் இயக்​கம் தமிழ் மாநில காங்​கிரஸில் இணைய உள்​ள​தாக ஜி.கே.​வாசன் தெரி​வித்​தார். தமா​கா​வின் 12-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள கட்சி அலு​வல​கத்​தில்  நடை​பெற்​றது. இவ்​விழா​வில் ஜி.கே.​வாசன் கூறிய​தாவது: பெருந்​தலை​வர் காம​ராஜர், மூப்​ப​னார் ஆசி​யோடு, தமிழ் மாநில காங்​கிரஸ் 12-ம் ஆண்​டில் அடி​யெடுத்து வைக்​கிறது. காந்​திய வழி​யில் கட்​சியை நடத்​தும் காம​ராஜர் மக்​கள் இயக்​கத்​தின் தலை​வர் தமிழருவி மணி​யன், தனது இயக்​கத்தை தமிழ் மாநில காங்​கிரஸில் இணைக்க உள்​ளார். ஈரோட்​டில் டிச.20-ம் தேதி நடை​பெறும் விழா​வில், காம​ராஜர் மக்​கள் இயக்​கத்தை தமிழ் மாநில காங்​கிரஸில் இணைக்​கிறார். நல்​ல​வர்​கள், ஊழல் அற்​றவர்​கள், வெளிப்​படை தன்​மையோடு செயல்​படு​பவர்​களின் துணை அனை​வருக்​கும் தேவை. நல்​லாட்​சி, தூய்​மை​யான ஆட்​சிக்கு இது​போன்ற இணைவு அவசி​யம். முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையனின் அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து சொல்​ல ஒன்றுமில்லை. தேசிய ஜனநாயக கூட்​டணி மக்​கள் விரும்​பும் கூட்​ட​ணி​யாக…

Read More

அ​தி​முக சார்​பில் முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா​வின் 9-ம் ஆண்டு நினைவு தினம் டிச.5-ம் தேதி அனுசரிக்​கப்​படு​கிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்​கரை​யில் உள்ள அவரது நினை​விடத்​தில் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி மரி​யாதை செலுத்​துகிறார். இது தொடர்​பாக அதி​முக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: புரட்​சிகர​மான பல்​வேறு திட்​டங்​களால் தமிழக மக்​களின் வாழ்க்​கை​யில் பெரும் மாற்​றங்​களை​யும், எழுச்​சி​யை​யும் ஏற்​படுத்​திய முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தா​வின் புகழ் காலமெல்​லாம் நிலைத்​திருக்​கும். தன்​னலம் கரு​தாது, தமிழக மக்​களுக்​காகப் பாடு​பட்ட ஜெயலலி​தாவுக்கு புகழ் அஞ்​சலி செலுத்​து​வது ஒவ்​வொரு அதி​முக​வினரின் இன்​றியமை​யாத கடமை​யாகும். அந்த வகை​யில் 9-வது ஆண்டு நினைவு நாளான டிச.5-ம் தேதி, காலை 10 மணிக்கு சென்னை மெரினா கடற்​கரை​யில் உள்ள ஜெயலலிதா நினை​விடத்​தில் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி மலர்​வளை​யம் வைத்​து, மலர்​தூவி மரி​யாதை செலுத்​துகிறார். அதையடுத்து எம்​ஜிஆர், ஜெயலலிதா நினை​விட நுழை​வாயி​லின் உள் பகு​தி​யில் உறு​தி​ மொழி ஏற்பு நிகழ்ச்சி நடை​பெறுகிறது…

Read More

டித்வா புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் இன்று (நவ.29) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டித்வா புயலால் புதுச்சேரிக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாலை கல்வியமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்ட உத்தரவில், ‘டித்வா புயல் காரணமாக அதிக கனமழை பொழியும் என்பதால் இன்று (நவ.29) புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படுகிறது’ என தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் இருந்து இயக்கப்படும் விமான சேவைகள் அனைத்தும் இன்று (சனிக்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஹதராபாத்தில் இருந்து புதுவைக்கு வரும் விமானமும், புதுவையில் இருந்து பெங்களூரு சென்று வரும் விமானமும், புதுவையில் இருந்து ஹைதராபாத் செல்லும் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை விமான நிலைய இயக்குனர் ராஜசேகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Read More

சிறுத்​தைக்கு வைத்த கூண்​டில் குடி​போதை​யில் மனிதர் ஒரு​வர் சிக்​கிய சம்​பவம் உத்​தரபிரதேச மாநிலத்​தில் நடந்​துள்​ளது. உத்​தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்​டத்​தில் கடார்​னி​யா​காட்டில் சரணால​யம் உள்​ளது. சரணால​யத்தை ஒட்டியுள்ள கிராமங்​களில் அடிக்​கடி சிறுத்​தை, புலிகள் புகுந்து ஆடு, மாடு​களை கொன்று தின்​னும் சம்​பவம் நடந்து வந்​தது. கடந்த 26-ம் தேதி இரவு கடார்​னி​யாட் பகு​தி​யிலுள்ள ஒரு கிராமத்​தில் புகுந்த சிறுத்தை 55 வயதான சாந்​திதேவி என்ற பெண்ணை அடித்​துக் கொன்​றது. இதையடுத்து வனத்​துறை அதி​காரி​கள் ஆய்வு நடத்​தினர். வனப்​பகு​தியை ஒட்​டி​யுள்ள இடத்​தில் இரும்​புக்​கூண்டை வைத்து சிறுத்​தையைப் பிடிக்க ஏற்​பாடு செய்​தனர். கூண்​டுக்​குள் ஆடு கட்டி வைக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் காலை, அந்த இரும்​புக் கூண்​டுக்​குள் பிரதீப் என்​பவர் அடைபட்​டுக் கிடந்​தார். வனத்​துறை அதி​காரி​கள் கூண்​டுக்​குள் இருந்து அவரை மீட்​டனர். பின்​னர் விசா​ரித்​த​போது அவர் குடி​போதை​யில் இரும்​புக்​கூண்​டில் சிக்​கியது தெரிய​வந்​தது. இரும்​புக்​கூண்​டுக்​குள் யார் நுழைந்​தா​லும் உடனடி​யாக கூண்​டுக்​கதவு​கள் தானி​யங்​கி​யாக மூடிவிடும். ஆனால், கூண்​டில்…

Read More

நா​டாளு​மன்ற குளிர்​கால கூட்​டத் தொடரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம், (எஸ்​ஐஆர்) வந்தே மாதரம் பாடல் ஆகியவை குறித்து விவா​திக்​கப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. நாடாளு​மன்ற குளிர்​கால கூட்​டம் டிசம்​பர் 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளது. வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்​டாடப்​படு​வ​தால் அதன் வரலாறு குறித்த விவாதம் நாடாளு​மன்​றத்​தில் நடை​பெறும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்​தப் பாடலில் இருந்து முக்​கிய வரி​கள் கடந்த 1937-ம் ஆண்டு நீக்​கப்​பட்​டதே இந்​தி​யா​வின் பிரி​வினைக்கு காரணம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். வந்தே மாதரம் பாடலின் வரலாறு, சுதந்​திர இயக்​கத்​தில் அதன் பங்கு குறித்து இளைஞர்​களுக்கு நினை​வூட்​டு​வதற்​காக விவாதம் நடை​பெறும் என அதி​காரி​கள் கூறினர். மேலும் அணு சக்​தி, உயர் கல்​வி, கார்ப்​பரேட் சட்​டம் மற்​றும் பங்​குச் சந்தை ஆகிய​வற்​றில் மாற்​றங்​கள் கொண்​டு​வரு​வது தொடர்​பாக 10 முக்​கிய மசோ​தாக்​களை குளிர்​கால கூட்​டத்​தில் கொண்டு வரவும் மத்​திய அரசு திட்​ட​மிட்​டள்​ளது.…

Read More

திமுக பாணியை பின்பற்றி கட்சியை வலுப்படுத்தும் பணியில் பாஜக இளைஞரணி தீவிரமாகி இருக்கிறது. குறிப்பாக, இந்தத் தேர்தலில் பாஜக இளைஞரணியினர் முன்களப்பணியாளர்களாக செயல்பட வேண்டும் என்றும் திட்டமிட்டு செயலாற்ற ஆரம்பித்திருக்கிறது தமிழக பாஜக. அதன்படி அக்கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் சூர்யா பெருங்கோட்டம் வாரியாக சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு இளைஞரணியினரை தேர்தல் களத்துக்கு தயார்படுத்தி வருகிறார். தற்போது திருச்சி பெருங்கோட்டத்துக்கு உட்பட்ட 11 மாவட்டங் களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சூர்யாவுக்கு, 8 பெருங்கோட்ட கூட்டங்களை டிச.10-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டம் தரப்பட்டுள்ளது. அதன் பின்னர், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம் உள்ளிட்ட ஏழு பெருங்கோட்டங்களிலும் இரண்டாம் நிலை கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. தேர்தலுக்கான இளைஞரணியின் செயல்பாடுகள் குறித்து பாஜக தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “பாஜகவை வலுப்படுத்தும் விதமாக இளைஞரணியை வளர்த்தெடுக்கும் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு இளைஞரணி தலைவர், துணைத்தலைவர் உட்பட 33 பேருக்கு…

Read More

குழந்தைகளின் பழக்க வழக்கங்களில் அவர்கள் பார்க்கும் விஷயங்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, தொலைக்காட்சியில் வரும் காட்சிகள் நிஜத்திலும் நிகழும் என்பது குழந்தைகளின் நம்பிக்கை. அதனால், விளம்பரத்தில் வரும் பல பொருட்களை வாங்கி கொடுக்க சொல்லியும், அதில் வருவதை போலவும் நடந்து கொள்வார்கள். அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்று தான், டூத் பேஸ்ட் (பற்பசை) பற்றிய விளம்பரங்கள். இந்த விளம்பரங்களில், டூத் பேஸ்ட் முழுவதும் பேஸ்ட்டை நிரப்பி பல் துலக்குவார்கள். இதனை பார்த்து குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் அதையே பின்பற்றுகிறோம். நிறைய பேஸ்ட் வைத்து தேய்த்தால் பல் பளபளப்பாகும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. ஆனால், உண்மையில் பல் ஆரோக்கியத்தை பாதுகாக்க எவ்வளவு பேஸ்ட் அவசியம் என நீங்கள் யோசித்தது உண்டா? உண்மையில், நாம் எவ்வளவு டூத் பேஸ்ட் பயன்படுத்த வேண்டும் என்பது நமது வயது மற்றும் பற்களின் நிலையைப் பொறுத்து மாறுபடும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதிகமாக பயன்படுத்துவதும் ஆபத்து என்கிறார்…

Read More

அன்புமணியால் பாமக-வுக்கு ஏற்பட்ட சரிவை 2026-ல் ராமதாஸ் சரிசெய்வார் என பாமக (ராமதாஸ்) இணைப் பொதுச்செயலாளர் சேலம் அருள் எம்எல்ஏ தெரிவித்தார். வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கோரி, சேலம் மாவட்டத்தில் பாமக (ராமதாஸ்) சார்பில் டிசம்பர் 12-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, மேட்டூரை அடுத்த மேச்சேரியில் சேலம் மேற்கு மாவட்ட பாமக சார்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் அருள் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாமக தலைவர், நிறுவனர் ராமதாஸ் தான். அப்படி இருக்கையில் அவர் புதியதாக கட்சி ஆரம்பிக்க அவசியமில்லை. பிஹாரில் போட்டியிடத் தான் மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது. தமிழகத்தில் எங்களுக்கே மாம்பழம் சின்னம் கிடைக்கும். சேலம் மாவட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி தேர்தல் கூட்டணியை ராமதாஸ் அறிவிப்பார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. போகாத ஊருக்கு வழி சொல்வது போல, அன்புமணி தரப்பு இடஒதுக்கீட்டுக்கான ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றனர். பாஜக,…

Read More