Close Menu
    What's Hot

    புறப்பட்ட சில நிமிடங்களில்.. கீழே விழுந்து நொறுங்கிய B-52 ரக போர் விமானம்..!! 8 பேர் உயிரிழப்பு..!!

    மூடப்பட்ட பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு ரகளை..!! ஒருவருக்கு கத்திக்குத்து..!! சிக்கிய தவெகவினர்..!!

    61 நாட்களுக்குப் பிறகு.. கொத்து கொத்தாக கிடைத்த மீன்கள்..!! மகிழ்ச்சியில் மீனவர்கள்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»தமிழ்நாடு»டித்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் விளக்கம்
    தமிழ்நாடு

    டித்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் விளக்கம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    minn
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மழையால் இதுவரை மிகப்பெரிய பாதிப்பு இல்லை. புயல் கரையை கடக்கும்வரை வெளியே வரவேண்டாம் என்ற முதல்வரின் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மழையால் இதுவரை மிகப்பெரிய பாதிப்பு இல்லை. குறிப்பாக உயிரிழப்பு ஏதுமில்லை. போக்குவரத்து எங்கும் தடைபடவில்லை. 16 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 24 குடிசைகள் இடிந்து விழுந்துள்ளன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் தோப்புத்துறையில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. டித்வா புயல் சென்னைக்குள் வராமல் சென்னையை ஒட்டியே செல்லும் என வானிலை மையம் கூறியுள்ளது.

    இன்றும், நாளையும் கடற்கரை பகுதிக்குச் செல்ல வேண்டாம். காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக செல்பி எடுப்பதாக கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம்.

    படகு, பயிர் சேதங்களை கணக்கிடும் பணிகள் நவம்பர் 30-க்கு மேல் நடைபெறும். அதற்கு வேண்டிய நஷ்ட ஈடுகளை முதல்வர் உடனடியாக வழங்க வலியுறுத்தியுள்ளார். முதல்வர் ஒவ்வொரு நகர்வையும் நேரடியாக கவனித்து வருகிறார். புயல் கரையை கடக்கும்வரை வெளியே வரவேண்டாம் என்ற முதல்வரின் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும். 28 பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

    மேலும் 10 குழுக்கள் பிற மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வரவழைக்க உள்ளோம். விமானப்படை மற்றும் கடலோர காவல் படைக்கும் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. நாளை பாதிப்பை பொறுத்து தேவையான மாவட்டங்களுக்கு கூடுதல் கண்காணிப்பு அலுவலர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எல்லா மாவட்டத்திலும் 6000-க்கும் மேற்பட்ட நிவாரண முகங்கள் தயார் நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமாகாவுடன் காமராஜர் மக்கள் இயக்கம் இணைகிறது… ஈரோட்டில் டிச.20-ல் இணைப்பு விழா
    Next Article சென்னைக்கு தெற்கே 400 கி.மீ. தொலைவில் டித்வா புயல்
    Editor TN Talks

    Related Posts

    மூடப்பட்ட பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு ரகளை..!! ஒருவருக்கு கத்திக்குத்து..!! சிக்கிய தவெகவினர்..!!

    June 16, 2026

    61 நாட்களுக்குப் பிறகு.. கொத்து கொத்தாக கிடைத்த மீன்கள்..!! மகிழ்ச்சியில் மீனவர்கள்..!!

    June 16, 2026

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புறப்பட்ட சில நிமிடங்களில்.. கீழே விழுந்து நொறுங்கிய B-52 ரக போர் விமானம்..!! 8 பேர் உயிரிழப்பு..!!

    மூடப்பட்ட பாரில் தண்ணீர் பாட்டில் கேட்டு ரகளை..!! ஒருவருக்கு கத்திக்குத்து..!! சிக்கிய தவெகவினர்..!!

    61 நாட்களுக்குப் பிறகு.. கொத்து கொத்தாக கிடைத்த மீன்கள்..!! மகிழ்ச்சியில் மீனவர்கள்..!!

    பவிஷ் நாராயணின் புதிய அவதாரம்..! ’லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீடு..!

    வெளியானது UPSC முதல்நிலைத் தேர்வு முடிவுகள்..!! 13,343 பேர் முதன்மைத் தேர்வுக்கு தகுதி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.