Author: Editor TN Talks
செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமையகத்தில் வைத்து விஜய் முன்னிலையில் அக்கட்சியில் செங்கோட்டையன் இன்று சேர்ந்தார். இதையடுத்து தவெக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதேபோல், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களுக்கான அமைப்பு பொதுச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக துணைத் தலைவர் பதவி அல்லது அமைப்பு பொதுச் செயலாளர் பதவி ஆகியவற்றில் அவர் விரைவில் நியமிக்கப்படக் கூடும், கட்சி விதிகளில் திருத்தம் செய்தபிறகு இதற்கான அறிவிப்பு வெளியிடப்படக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெகவில் இன்று இணைந்தார். சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமையகத்தில் வைத்து விஜய் முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்தார். இந்நிகழ்வில் தவெக மூத்த தலைவர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் உடனிருந்தனர். தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு துணைத் தலைவர் பதவி அல்லது அமைப்பு பொதுச் செயலாளர் பதவிகளில் ஏதேனும் ஒரு பதவி வழங்கப்படலாம் என்றும், விரைவில் இதுதொடர்பான அறிவிப்பை விஜய் வெளியிடக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நேற்றிரவு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ரகசிய இடத்தில் தங்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் பட்டினப்பாக்கத்தில் தவெக தலைவர் விஜய்யை சுமார் 2 மணி நேரம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனால் தவெகவில் அவர் சேரக்கூடும் என வெளியாகி வந்த தகவல் உறுதியானது. இந்த சந்திப்புக்குப் பிறகு காரில் புறப்பட்ட செங்கோட்டையன், முட்டுக்காடு பகுதிக்கு சென்றார். பின்னர் அங்குள்ள ரகசிய இடத்தில் செங்கோட்டையன் தங்கியிருந்தார். இந்நிலையில், தவெகவில் இணையும் திட்டத்துடன் விஜய்யின் தவெக அலுவலகம் இருக்கும் பனையூருக்கு இன்று காலை காரில் செங்கோட்டையன் புறப்பட்டுச் சென்றார். அதிமுகவினர் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்திலேயே அவர் ரகசிய இடத்தில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.5,000 வழங்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2026ல் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் இம்முறை ரொக்க பணம் வழங்கப்படலாம் என்ற பேச்சுக்கு மத்தியில் அது எவ்வளவு ரூபாய் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. வருடம்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொங்கல் சிறப்புத் தொகுப்பையும், பொங்கல் பரிசுத் தொகையையும் வழங்குவது வழக்கமான ஒன்று. அதன்படி, தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படும். கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. அதன்பின் 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு 21 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. அதுவே கடந்த 2023 மற்றும் 2024-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைகளின்போது பச்சரிசி, கரும்பு, சர்க்கரை ஆகியவை அடங்கிய தொகுப்புடன் 1000 ரூபாயும் வழங்கப்பட்டது. ஆனால், இந்த…
ஆரோக்கியமான நோயற்ற வாழ்க்கையை பெற நினைப்பவர்கள், அன்றாடம் சில ஆரோக்கிய பழக்கங்களை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில், ஒவ்வொரு நாளையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும் 7 ஆரோக்கிய பழக்க வழக்கங்கள் குறித்து இங்கே பார்க்கலாம். 1) தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது காலை / மாலை நடைப்பயிற்சியாகவோ, அல்லது காலை நேர ஸ்ட்ரெட்சாகவோ கூட இருக்கலாம். இப்படி செய்வதன் மூலம், நாள் முழுக்க உடல் புத்துணர்வோடு இருக்கும். 2) தினமும் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக சாப்பிட்டு முடித்தபின்னர் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து வருவது, உணவின் அளவை கட்டுப்படுத்துவதுடன் செரிமானத்துக்கும் உதவும். 3) எக்காரணத்தை கொண்டும் உணவை தவிர்க்கக்கூடாது. மூன்று வேளை உணவு சாப்பிடுவது மட்டுமன்றி, அடிக்கடி ஹெல்த்தி ஸ்நாக்ஸ் உட்கொள்வது உடலுக்கு ஆற்றலை கொடுக்கும். அந்த ஹெல்த்தி ஸ்நாக்ஸில் பழங்கள்,…
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நாளை (நவ. 28) முதல் டிச. 1-ம் தேதி வரை 4 நாட்களுக்கு இடைவிடாத மழைப்பொழிவு இருக்கும். சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ளப் பாதிப்புகள் ஏற்படும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இன்று தமிழகத்தின் தென் கடலோரம், டெல்டா கடலோரம் லேசான காற்றுடன் சாரல்மழை தொடங்கி, நாளை தூத்துக்குடி வடக்கு கடலோரம் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்கள், அதையொட்டியுள்ள திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மிதமான கடலை நோக்கிய காற்றுடன் மழைப்பொழிவு ஆரம்பிக்கும். படிப்படியாக மழைப்பொழிவை தீவிரப்படுத்தி வரும் 29, 30-ம் தேதிகளில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் 48 மணி நேர தொடர் கனமழை மற்றும் மிக கனமழையைக் கொடுக்கும். வரும் 29, 30 மற்றும் டிச. 1-ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,…
முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். மாலையில் விஜய்யை அவரது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்திய செங்கோட்டையன் இன்று தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைகிறார். தமிழகத்தில் 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற, பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கட்சிக்குள் வலியுறுத்தி வந்தவர் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். இதற்கு கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி மறுத்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதலே பழனிசாமியிடம் செங்கோட்டையன் பாராமுகமாக இருந்து வந்தார். ரகசியமாக டெல்லி சென்று பாஜக மூத்த தலைவர்களையும் சந்தித்துவிட்டு வந்தார். கட்சியில் இருந்த எம்ஜிஆர் காலத்து மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன், 2026 தேர்தல் வெற்றிக்கு கட்சி ஒன்றிணைப்பை வலியுறுத்தி, பழனிசாமிக்கு 10 நாட்கள் காலக்கெடுவை விதித்தார். இதனால், அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில், அதிமுகவிலிருந்து பிரிந்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுடன் பசும்பொன்னில் அண்மையில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். இதன் தொடர்ச்சியாக,…
026 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக இடம் பெறும் கூட்டணியே வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற தேமுதிக பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பிரேமலதா விஜயகாந்த், தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்று தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்தார். நேற்று ஊட்டிக்கு வந்த அவர் அங்குள்ள சாக்லேட் தொழிற்சாலைக்குச் சென்று, சாக்லேட் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து, முத்தநாடுமந்து தோடர் கிராமத்துக்குச் சென்று, தோடர் பழங்குடியின மக்களின் கோயிலைப் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பசுந் தேயிலைக்கு சரியான விலை கிடைக்காததால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய தீர்வுகாண வேண்டும். நீலகிரியில் பலருக்கும் பட்டா இல்லை. பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வருவதால் ரூ.3 ஆயிரம்…
21 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலையாளி, எஸ்ஐஆர் பணி மூலமாக அடையாளம் காணப்பட்டு கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, எண்ணூர் பகுதியில் கடந்த 2004 ஆம் ஆண்டு தாஜூதீன் என்பவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக எண்ணூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கொலையாளியின் பெயர் தவிர எந்தவித அடையாளமும் தெரியாததால் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆவடி மாநகர காவல்துறை ஆணையாளர் சங்கர், ஆவடி சரகத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் கைது செய்யப்படாமல் இருக்கும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும்படி காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். காவல்துறை ஆணையாளர் உத்தரவை தொடர்ந்து, காவல் ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தாஜூதீன் கொலை வழக்கை விசாரணைக்கு எடுத்தனர். முதற்கட்டமாக, கொலையாளியின் பெயர் ராஜேந்திரன், அவருடைய தந்தை பெயர் பரமசிவம் மற்றும் கடலூரை சேர்ந்தவர் என்ற தகவலுடன்…
கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட ரோலக்ஸ் காட்டு யானை வன பகுதியில் விடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர், கெம்பனூர் பகுதிகளில் விவசாய பயிர்களை ரோலக்ஸ் காட்டு யானை சேதப்படுத்தி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி ரோலக்ஸ் காட்டு யானையினை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். ரோலக்ஸ் யானை பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் வரகளியார் முகாமில் மரக்கூண்டில் ஒரு மாதம் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு மந்திரி மட்டம் வனப் பகுதியில் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி விடப்பட்டது. ஆனாலும் ரேடியோ சிக்னல் பொருத்தி ரோலக்ஸ் காட்டு யானை கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் மந்திரி மட்டம் பகுதியில் இறந்து…