Author: Editor TN Talks

சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் பகுதியில் போலீசாரை தாக்கிய கஞ்சா வியாபாரி துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்டார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசார் நேற்று வல்லம்படுகையை சேர்ந்த மோகன் மகன் நவீன் (25), கோவிந்தசாமி நகரைச் சேர்ந்த ராஜா மகன் கவுதம் (25), வல்லத்துரை பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் அருள் என்கிற ஜெயக்குமார் (30) ஆகிய மூன்று பேரையும் உசுப்பூர் ரயில்வே கேட் பகுதியில் ஒரு பையில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் பிடித்தனர். அப்பொழுது நவீன் கத்தியை காட்டி தப்பி ஓடிவிட்டார். மற்ற இருவரும் கைது செய்யப்பட்டனர். ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று இரவு நவீன் கைது செய்யப்பட்டார். இன்று (நவ.23) காலை 6 மணி அளவில் போலீசார் நவீனை அழைத்துக் கொண்டு அவர் மறைத்து வைத்த கஞ்சா மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்ய மாரியப்பா நகர்…

Read More

‘ஜனநாயகன்’ படத்தின் தமிழக உரிமைகள் தனித்தனியாக விற்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் நடந்தது என்ன என்பது தெரியவந்துள்ளது. விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. இதன் தமிழக உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அந்நிறுவனம் அஜித் பட தயாரிப்பில் தீவிரம் காட்டி வருவதால், ‘ஜனநாயகன்’ படத்தின் உரிமை கைப்பற்றும் போட்டியில் இருந்து விலகியது. தமிழக உரிமை விற்பனை மூலம் சுமார் 100 கோடி எதிர்பார்த்தது கே.வி.என் நிறுவனம். இறுதியாக தமிழக உரிமையினை ஏரியா வாரியாக பிரித்து விற்றுவிடலாம் என்று திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்படி சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவினை ஏஜிஎஸ் நிறுவனம், வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு உரிமையினை எஸ் பிக்சர்ஸ் நிறுவனம், கோயம்புத்தூர் உரிமையினை மன்னாரு, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமையினை பிரதாப், சேலம், திருச்சி மற்றும் மதுரை ஏரியா உரிமையினை ஃபைவ் ஸ்டார் செந்தில் ஆகியோர்…

Read More

மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கும் ‘வாரணாசி’ படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இதில் பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் டைட்டில் அறிவிப்பு நிகழ்ச்சியில், டீஸரை அகண்ட திரையில் வெளியிட முயன்ற போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், நிகழ்ச்சி தடைபட்டது. அப்போது பேசிய ராஜமவுலி, “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், இங்கே பேசிய என் தந்தை, ஹனுமன் என்னை வழி நடத்துவதாகக் கூறினார். இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டபோது எனக்குக் கோபம் வந்தது. இப்படித்தான் ஹனுமன் எனக்கு உதவுவாரா? என்றார். ராஜமவுலி இப்படிப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், ராஷ்ட்ரிய வானரசேனா என்ற அமைப்பினர், ராஜமவுலி இந்துக் கடவுளை அவமதித்துவிட்டதாகக் கூறி போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். கடவுள் நம்பிக்கை இல்லை என்பவர், தன் படத்துக்கு ‘வாரணாசி’ என்று தலைப்பிட்டு புராணக் கதாபாத்திரங் களைப் பயன்படுத்தியது ஏன்? என ராஜமவுலிக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இயக்குநர் ராம்…

Read More

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நேற்றைய முன்தினம் ( நவம்பர் 21 2025 ) தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தில் ஆரம்பமானது.  ஒரு டெஸ்ட் போட்டி ஐந்து நாட்கள் வரை நடைபெறும். ஆனால் ஒரு சில சமயங்களில் வேடிக்கையாக இரண்டு முதல் மூன்று நாட்களிலேயே ஒரு டெஸ்ட் போட்டி முடிந்துவிடும். அதேபோலதான் முதல் டெஸ்ட் போட்டி இரண்டு நாட்களுக்குள் முடிந்துவிட்டது. டிராவிஸ் ஹெட் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி நான்காவது இன்னிங்ஸில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை மிகவும் குறைந்த கால இடைவெளியில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இரண்டு நாட்களுக்குள் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற முடிந்து விட்டதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 17.35 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் முதல் டெஸ்ட்…

Read More

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் டிச. 10ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், கட்சியின் சட்ட விதிகளின்படி வரும் டிச. 10ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது. கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும். கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்கழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Read More

உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் நாளை பொறுப்பேற்கிறார். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம், பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கிய உச்ச நீதிமன்ற அமர்வுகளில் இடம் பெற்றவரான சூர்ய காந்த், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நாளை பொறுப்பேற்கிறார். தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் இன்று மாலை பதவி விலகும் நிலையில், சூர்ய காந்த் நாளை பதவியேற்க உள்ளார். 1962, பிப். 10ல் ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த சூர்ய காந்த், சிறிய நகரத்தின் வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார். பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 2018ல் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்த சூர்ய காந்த், அதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக…

Read More

கொரோனா காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என திமுக அரசை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் பணியில் இருந்தபோது கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், நகராட்சி மற்றும் அரசு அலுவலர்கள், காவலர்கள் போன்ற முன்களப் பணியாளர்களின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 54 மாதங்கள் கடந்து, ஆட்சியின் ஆயுட் காலமே முடிவுக்கு வரவுள்ள நிலையிலும், உரிய இழப்பீடு வழங்கப்படாத அவல நிலை நீடிக்கிறது. ஒருவேளை வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதுதான் திராவிட மாடல் அரசு போலும். வாக்குறுதியைதான் நிறைவேற்றவில்லை என்றால், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள விதியையாவது பின்பற்றுகிறதா என்றால் அதுவும் இல்லை. அதாவது, தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி…

Read More

“மக்களிடமிருந்து ஓட்டு வாங்கப்போகும் நாங்கள் தற்குறிகள் என்றால், மக்களிடமிருந்து ஏற்கெனவே ஓட்டு வாங்கிய நீங்கள் யார்? மக்கள் எல்லோரும் உங்களுக்கு தற்குறிகளா? இந்த தற்குறிகள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்துதான், விடையே தெரியாத அளவுக்கு உங்கள் அரசியலை கேள்விக்குறியாக்க போகிறார்கள்” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் நடந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், “தனது வழிகாட்டி என்பதால், தான் ஆரம்பித்த கட்சியின் கொடியில் அன்ணாவை வைத்தவர் எம்ஜிஆர். அவர் ஆரம்பித்த கட்சியை கைப்பற்றியவர்கள் இப்போது என்னெவெல்லாம் பண்ணுறாங்கன்னு உங்களுக்கே தெரியுமே. தனிப்பட்ட முறையில் எங்களுக்கும் அவர்களுக்கும், வாய்க்கால் வரப்பு தகராறு கிடையாது. அவர்களுக்கு வேண்டுமானால் நம் மீது வன்மம் இருக்கலாம். ஆனால், நாம் அப்படி கிடையாது. உங்களை, நம்மை பொய் சொல்லி ஏமாற்றி ஆட்சிக்கு வந்து நாடகமாடுபவர்களை கேள்வி கேட்காமல் விடப்போவது இல்லை. காஞ்சிபுரத்துக்கும் எனக்கும் தொடர்பு உண்டு. எனது முதல் களப்பயணம்…

Read More

காஞ்சிபுரத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் நடந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மக்களால் அமைக்கப்படும் நம் ஆட்சியில் என்ன செய்வோம் என்பதை தேர்தல் அறிக்கையில் சொல்வோம். நம் ஆட்சியில் எல்லோருக்கும் நிரந்தர வீடு, வீட்டுக்கு ஒரு பைக் இருக்க வேண்டும், வீட்டுக்கு ஒரு கார் இருப்பதும் நம் லட்சியம், வீட்டில் ஒருவர் டிகிரி படித்திருக்க வேண்டும். வீட்டில் ஒருவருக்குக்கு வருமானம் கிடைக்கும் வகையில் வேலைவாய்ப்பை உருவாக்குவோம். தரமான அரசு மருத்துவமனைகள் இருக்கும். பருவமழையால் ஊர், மக்கள், விவசாயம் பாதிக்காத அளவு திட்டங்களை உருவாக்குவோம். நெசவாளர்கள், அரசு ஊழியர்களின் நலனை மேம்படுத்துவோம். சட்டம் ஒழுங்கை சிறப்பாக வைத்திருந்து, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம். இதனை எப்படி செயல்படுத்துவோம் என்பதை தேர்தல் அறிக்கையில் விளக்கமாக சொல்வோம். ஏற்கெனவே கொள்கை எதிரி யார், அரசியல் எதிரி யார் என தெளிவாக சொல்லியுள்ளோம். அதில் ஊசலாட்டமே இல்லை. நான்…

Read More

நாம் அன்றாடம் குடித்து வரும் குடிநீரில் இந்த இரண்டு பொருட்களை சேர்ப்பதன் மூலம் உடலில் பல நன்மைகள் வந்து சேரும். அந்த இரண்டு பொருட்கள் வேறு எதுவும் இல்லை கிராம்பு மற்றும் ஏலக்காய் தான். தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி (ஒரு லிட்டர் தண்ணீருக்கு ) அதில் 5 முதல் 6 கிராம்பு, 2 முதல் 3ஏலக்காய்களை சேர்த்து ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க விடவும். உதித்த பின்னர் அந்த தண்ணீரை உடனே அருந்தாமல் சிறிது நேரம் பாத்திரத்தை தட்டு வைத்து மூட வேண்டும். ஒரு ஒரு மணி நேரம் கழித்து நன்கு ஆறிய அந்த தண்ணீரை வடிகட்டி நீங்கள் உங்கள் விருப்பம் போல காலையில் மதிய வேளையில் மற்றும் இரவு நேரத்தில் குடித்துக்கொள்ளலாம். இந்த தண்ணீரை குடிப்பதனால் உங்கள் உடலில் பல நன்மைகள் ஏற்படும். உங்கள் ஜீரண சக்தி அதிகரிக்கும், வாய் துர்நாற்றம் முற்றிலுமாக அடங்கும்,…

Read More