Author: Editor TN Talks
கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் பிரபாகரன் (35). கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலியல் குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவருக்கு பணியிடை நீக்க காலத்தில் வழங்கப்படும் பிழைப்பூதியம் எனப்படும் அரை சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பு பிரபாகரன் தனது மகனுடன் அமர்ந்து, யாசகம் பெற்றார். பிரபாகரன் கூறும்போது, “பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தேன். என் மீது போடப்பட்ட வழக்கால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டேன். எனக்கு பிழைப்பூதியமாக அரை மாத சம்பளமும் இரு மாதங்களாக வழங்கப்படவில்லை. இதனால் வேலையும், வருமானமும் இன்றி குடும்பத்தைக் காப்பாற்ற வழியின்றி உள்ளேன். அதற்காக மகனுடன் கோயில் முன் யாசகம் பெற வந்தேன்” என்றார். இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவருக்கு அறிவுரை கூறி, அவரை அங்கிருந்து புறப்பட அறிவுறுத்தினர். அப்போது, பிரபாகரன் போலீஸார்…
டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதல்நிலைத்தேர்வு கடந்த செப்.28-ம் தேதி நடைபெற்றது. 645 காலிப்பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட இத்தேர்வை 4 லட்சத்து 55 ஆயிரத்துக்கு்ம் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். தேர்வு முடிவு டிசம்பரில் வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூடுதலாக 625 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு காலியிடங்களின் எண்ணிக்கை 1,270 ஆக உயர்ந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி பிற்சேர்க்கை அறிவிப்பின்படி தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை உதவிப் பிரிவு அலுவலர், கால்நடை பராமரிப்புத் துறை கால்நடை ஆய்வாளர் (கிரேடு-2) உள்ளிட்ட புதிய பதவிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் கால்நடை ஆய்வாளர் பதவியில் மட்டும் 439 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பதவிக்கு பட்டப்படிப்புடன் பிளஸ் 2-வில் உயிரியல் அல்லது தாவரவியல் அல்லது விலங்கியல் பாடம் படித்திருக்க வேண்டும் என்று கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.சண்முகசுந்தரம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஜூலை 15-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி…
உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது இரவு தூக்கம். நாள் முழுவதும் உடலும், மனமும் சோர்வாகும் வரை வேலை செய்தாலும், பலருக்கும் இரவு படுத்ததும் தூக்கம் வருவதில் சிக்கல் உள்ளது. இதற்காக, செல்போன் பயன்படுத்துவதை குறைப்பது, படுக்கை நேர வழக்கத்தை மாற்றியமைப்பது, உணவு முறையை சரி செய்வது என பல முயற்சிகளை செய்தாலும் ஆழ்ந்த தூக்கம் இல்லாமல், சோர்வுடன் எழுவதையே பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். இப்படியிருக்க, அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் குறைபாடு இந்த பிரச்சனைக்கு மூலக் காரணமாக இருப்பதாக 5 Ways Vitamin Deficiencies Can Affect Sleep என்ற தலைப்பில் வெளியான ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. நமது உடல் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தவும், மன அழுத்தத்தைக் கையாளவும், திசுக்களைச் சரிசெய்யவும், ஆரோக்கியமான தூக்கம் – விழிப்புச் சுழற்சியைப் பராமரிக்கவும் வைட்டமின்கள் அவசியம். இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று அதன் உகந்த அளவை விடக் குறையும்போது, அது மெலடோனின் (தூக்க ஹார்மோன்) உற்பத்தியைத் தடுக்கலாம், வீக்கத்தை…
குளிர்காலம் என்பது சூடான பானங்களை குடிப்பதற்கு ஏற்ற காலமாகும். இந்த காலக்கட்டத்தில் நாம் அடிக்கடி டீ மற்றும் காபியை நிறைய குடிக்கிறோம். இருப்பினும், ஆரோக்கியமான விருப்பங்களைப் பொறுத்தவரை, சூடான சூப்கள் மற்றும் வடிச்சாறு (Broth) மிகவும் பிரபலமான தேர்வுகளாகும். ஆனால் குளிர்காலத்தில் எது சிறந்தது?, எது எளிதில் ஜீரணிக்கும்? என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் இந்த செய்தி உங்களுக்கானது. குளிர்காலத்தில் சூடான சூப்களின் நன்மைகள்: குளிர்கால மாதங்களில் சூடான சூப்கள் மிகவும் சத்தான பானங்களில் ஒன்றாகும். இந்த குளிர் மாதங்களில் சூப்களின் நன்மைகளை குறித்து டாக்டர் சோப்ரா விளக்கமளித்துள்ளார். சூப்களானது காய்கறிகள், ப்ரோடீன்கள், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களின் கலவையைக் கொண்டுள்ளது. எனவே, இது மிகவும் ஆரோக்கியமான மற்றும் முழுமையான உணவை வழங்குகிறது. இதன் சூடு மூக்குப் பாதைகளைத் திறக்கவும், தொண்டையை ஆற்றவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. சூப்களில் காய்கறிகளை சேர்ப்பதால் அதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே, இது…
புகைப்பிடிப்பவர்களும், மது அருந்துபவர்களும் தனது நடைபயணத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மோதல் தடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜனவரி 2 ஆம் தேதி முதல் சமத்துவ நடை பயணம் மேற்கொள்ள உள்ளார். இதை முன்னிட்டு வைகோ தலைமையில் சென்னையில் உள்ள அக்கட்சித் தலைமையகத்தில் சமத்துவ நடைபயணத்திற்கு வீரர்கள் நேர்காணல் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “கஞ்சா போன்ற போதை பொருட்கள் வைத்திருப்போருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டு சிறை தண்டனையும், அதை பயன்படுத்துவோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும்” என்று வலியுறுத்தினார். மேலும் அவர் கூறுகையில், “கல்லூரிகளில் சாதி அடிப்படையில் சங்கம் வைக்கக் கூடாது என்றும் சாதி, மத ரீதியிலான மோதல்கள் நடக்கக் கூடாது. எனது சமத்துவ நடை பயணத்தில் புகைப்பிடிப்பவர்களும், மது அருந்துபவர்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.” என…
டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மேட்டை பொறுத்தவரை ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் ஆஷஸ் தொடரில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அத்தொடர் நேற்று ஆஸ்திரேலியாவில் ஆரம்பமானது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் நேற்று முதல் போட்டி பெர்த் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 172 ரன்கள் அந்த அணி சேர்த்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஹாரி ப்ரூக்ஸ் அரை சதம் அடித்தார். ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெடுகளை கைப்பற்றி அசத்தினார். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 132 ரன்களுக்கு நடையை கட்டியது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென்ஸ் ஸ்டோக்ஸ் ஐந்து விக்கெடுகளை கைப்பற்றி அசத்தினார். 40 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி இன்று மதியம் 1:05 மணிக்கு 65 ரன்கள் ( 105 ரன்கள்…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே காம்ளக்ஸ் பொதுக் கழிவறையில் ரகசியமாக செல்போனை வைத்து பெண்களை வீடியோ எடுத்த பிரபல டீ கடையின் மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார். ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட் பகுதியில் தனியார் காம்ளக்ஸ் ஒன்றில் லட்சுமி காபி பார் செயல்படுகிறது. ஆரம்பத்தில் 5 ரூபாய்க்கு டீ கொடுத்து வந்ததால் கூட்டம் அலைமோதும். இதனால், 5 ரூபாய் டீ கடை என பிரபலமாக இந்த பகுதியில் இருந்தது. இங்கு ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜ் 27 என்பவர் டீ மாஸ்டராக பணியாற்றி வந்தார். இந்த கம்பளக்சில் பொதுக்கழிவறை உள்ளது. இதை அருகில் உள்ள கடைகளில் வேலை செய்யும் பெண்களும் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று கழிவறைக்கு சென்ற நாகராஜ் தனது செல்போனில் வீடியோவை ஆன் செய்து வைத்துவிட்டு வந்துவிட்டார். அதன்பிறகு கழிவறை சென்ற ஒரு பெண் மொபைல் போனில் வீடியோ பதிவு ஆவவதை தெரிந்ததும் கத்தியுள்ளார். அருகில்…
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களை விமர்சிப்பவர்கள் மனநோயாளிகள் என சௌமியா அன்புமணி தெரிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை மேற்கொள்வது தொடர்பாக, பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் பாமக மகளிரணி மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (நவ.22) சென்னையில் நடைபெற்றது. மகளிரணி நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் என்பதால், இக்கூட்டத்திற்கு வருகை தந்த பெண்களுக்கு மல்லிகை, ரோஜா உள்ளிட்ட மலர்கள் வழங்கி, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சௌமியா அன்புமணி கடந்த மக்களவை தேர்தலில், தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டதன் மூலம் முதல்முறையாக தேர்தல் அரசியலில் களம் கண்டிருந்தார். இந்நிலையில் முதல் முறையாக பாமக மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தை தன்னுடைய தலைமையில் இன்று கூட்டினார். தொடர்ந்து மேடையில் பேசிய அவர், “இது ஒரு குடும்ப விழா, அதனால் தான் பூக்கள் கொடுத்தும், வளையல் கொடுத்தும் உங்களை வரவேற்றோம். தமிழ்நாட்டில் போதைப்பழக்கம் அதிகரித்து வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள்…
துணை முதலமைச்சராக உள்ள உதயநிதிக்கு சப்ஜெக்ட் நாலெட்ஜ் இல்லாதது நம்முடைய சாபக்கேடு என அண்ணாமலை விமர்சித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையிடம் மெட்ரோ ரயில் கோவைக்கும், மதுரைக்கும் மறுக்கப்பட்டுள்ள விவகாரத்தில் பிரதமரை சந்திக்கத் தயார் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, “பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவில்லை. பிரதமர் மோடி கோவை வந்தபோதும், மு.க.ஸ்டாலின் வரவில்லை. எதிர்க்கட்சியாக உள்ள மாநிலங்களில் கூட பிரதமர் மோடி வந்தால் சந்திக்க வருகின்றனர். ஆனால், பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம், ஒவ்வொருமுறையும் ஒரு காரணத்தை சொல்கிறார்கள். தமிழக முதலமைச்சருக்கு கோவை, மதுரைக்கு மெட்ரோ வரக்கூடாது என்ற எண்ணம்தான் உள்ளது. ஆகையால்தான் மெட்ரோ விவகாரத்தில் அவர் கவனம் செலுத்தவில்லை. தமிழக அரசு மதுரை, கோவைக்கு மெட்ரோ வேண்டுமென்று கொடுத்த அறிக்கையில் என்ன தவறுகள் உள்ளது என கடிதம் வெளியிட்டுள்ளோம்.…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன், தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘ஹீரோ’ என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் நடித்த அவர், ரவி மோகனின் ‘ஜீனி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘லோகா: சாப்டர் 1 – சந்திரா’ படம், தமிழ், மலையாளம், தெலுங்கில் ஹிட்டானது. இதில் அவர் பெண் மையக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இப்போது நேரடி தமிழ்ப் படம் ஒன்றில் பெண் மையக் கதாபத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதை அறிமுக இயக்குநர் திரவியம் எஸ்.என்.இயக்குகிறார். பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, பி.கோபிநாத், தங்கபிரபாகரன் ஆர் ஆகியோர் தயாரிக்கிறார்கள். இதில் தேவதர்ஷினி, வினோத் கிஷண் உள்பட பலர் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகர் இசை அமைக்கிறார். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.