Author: Editor TN Talks

ரஷ்யா உடனான போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்கா அங்கீகரிக்கும் சமாதான ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த பல்வேறு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இந்தநிலையில், அதிபர் டிரம்பின் சிறப்பு குழுவும், ரஷ்ய அதிகாரிகள் தரப்பும் 28 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். ரஷ்யா, உக்ரைன் இடையே சமாதானத்தைப் பெறுவதற்கான ஒரு வழி தங்களிடம் இருப்பதாக தாங்கள் நினைப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைக்கான திட்டத்தை உக்ரைன் அங்கீகரிக்க வேண்டும் என்றும் சமாதான ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும்…

Read More

பணியாளர்கள், பணிபுரியும் நிறுவனத்திடம் இருந்து பணிக்கொடை (Gratuity) பெறுவதற்கு குறைந்தது 5 ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற விதி திருத்தப்பட்டு ஓராண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. நாட்​டில் புதி​தாக 4 தொழிலா​ளர் சட்​டங்​களை மத்​திய அரசு நேற்று முதல் அமலுக்​குக் கொண்டு வந்​துள்​ளது. நாட்​டில் தற்போது நடை​முறை​யில் உள்ள 29 மத்​திய தொழிலா​ளர் சட்டங்களை தொகுத்​து, புதி​தாக 4 புதிய தொழிலா​ளர் சட்டங்களை (Labour Codes) அதி​கார​பூர்​வ​மாக மத்​திய அரசு நடை​முறைப்​படுத்​தி​யுள்​ளது. நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு மேற்​கொள்​ளப்​பட்ட மிகப்​பெரிய தொழிலா​ளர் சீர்​திருத்​த​மாக இது பார்க்​கப்​படு​கிறது. இந்​தப் புதிய சட்ட கட்​டமைப்​பு, விதி​களை சுலப​மாக்​குதல், தொழிலா​ளர்களின் நலனை மேம்​படுத்​துதல், பாது​காப்பு அம்​சங்​களை பலப்​படுத்​துதல், தொழிலா​ளர் நடை​முறை​களை உலகளா​விய சிறந்த முறை​களுக்கு இணை​யாகக் கொண்டு வருதல் ஆகியவற்றை முதன்மை இலக்​காக வைத்துக் கொண்டு வரப்பட்டுள்​ளது. தொழிலா​ளர் ஊதிய சட்​டம்​-2019, தொழில்​துறை உறவுச் சட்​டம்​-2020, சமூகப் பாது​காப்​புக்​கான சட்​டம்​-2020, சுகா​தா​ரம், பாதுகாப்பு, பணி…

Read More

 மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பாபர் மசூதி கட்டுவதற்கான அடிக்கல் டிச. 6ம் தேதி நாட்டப்படும் என்றும் மூன்று ஆண்டுகளில் மசூதி கட்டி முடிக்கப்படும் என்றும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹுமாயூன் கபிர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹுமாயூன் கபிர், “முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பெல்தங்கா-வில் பாபர் மசூதி கட்டப்படும். இதற்கு, டிசம்பர் 6-ம் தேதி இதற்கான அடிக்கல் நாட்டப்படும். அயோத்தியில் இடிக்கப்பட்டது போன்ற ஒரு மசூதியாக இது இருக்கும். அடிக்கல் நாட்டு விழாவுக்கு பல்வேறு இஸ்லாமிய தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த மசூதி மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்.” என தெரிவித்துள்ளார். ஹுமாயூன் கபிர் கடந்த ஆண்டும் இது குறித்து பேசி இருக்கிறார். பாபர் மசூதி போன்ற ஒரு மசூதி முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கட்டப்படும் என அப்போது அவர் கூறி இருந்தார். திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவின் இந்த அறிவிப்புக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக…

Read More

போச்சம்பள்ளி அருகே தனியார் காலணி தயாரிக்கும் நிறுவனத்தில் 52 காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க, ஒரே நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போச்சம்பள்ளி சிப்காட் தொழிற் பூங்கா 1379.76 ஏக்கர் பரப்பளவில் 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இத்தொழிற் பூங்காவில் 150 நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் தற்போது 45 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தனியார் காலணி தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில், ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனத்தில் 52 காலிப் பணியிடத்துக்கு ஆட் சேர்ப்பு முகாம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையறிந்த ஆண்கள், பெண்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களின் சுய விவரத்துடன் நேற்று நிறுவனம் முன்பு திரண்டனர். மேலும், நிறுவனத்தைச் சுற்றி உள்ள 8 கிலோ மீட்டரில் உள்ளவர்களுக்கு தற்போது வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், நேற்று வேலைக்காக வெளியூர்…

Read More

நவம்பர் 25 கோவையிலும், நவம்பர் 26 ஈரோட்டிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வுப் பணிகளுக்காக கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு நவ.25, 26 ஆகிய இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நவ, 25 அன்று காலை கோவையில் செம்மொழிப் பூங்காவை திறந்துவைக்கிறார். மாலையில் தொழில்துறை சார்பில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் நடைபெறும் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். நவ.26 அன்று காலை ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் மாவீரன் பொல்லான் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தினை திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து தீரன் சின்னமலை மணிமண்டபம் சென்று, அவரது திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்கிறார். சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.605 கோடியில் முடிவுற்றப் பணிகளைத் தொடங்கிவைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,84,491 பேருக்கு நலத்திட்ட…

Read More

ஹரிஷ் கல்யாண் நடித்து வந்த படத்துக்கு ‘தாஷமக்கான்’ என தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. ‘டீசல்’ படத்துக்கு இடையே, ‘லிஃப்ட்’ படத்தின் இயக்குநரான வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வந்தார் ஹரிஷ் கல்யாண். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முழுக்க ஆக்‌ஷன் கதையாக இப்படம் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்துக்கு ‘தாஷமக்கான்’ எனப் பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இப்படத்தினை திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்க இடா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். விரைவில் இப்படம் குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் டீஸர் உள்ளிட்ட விளம்பரப்படுத்தும் பணிகளை படக்குழு துவங்கியிருக்கிறது. ஹரிஷ் கல்யாண் படங்களில் அதிக பொருட்செலவில் தயாராகியுள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

பாம்​பன் மன்​னார் வளை​குடா பகு​தி​யில் நேற்று விசைப்​படகு மீனவர் வலை​யில் 6 அடி நீளராட்சத கத்தி மீன் சிக்கியது. ராமேசுவரம் அருகே பாம்​பன் மன்​னார் வளை​குடா பகு​தி​யில் மீன்​பிடித்த பாம்​பன் அருளானந்​தம் என்ற மீனவரின் வலை​யில் 6 அடி நீள​மும், 25 கிலோ எடை​யும் கொண்ட ராட்சத கத்தி மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் கிலோ ரூ.250 வீதம் ரூ.6,250-க்கு விலை​போனது. இதுகுறித்து பாம்​பன் மீனவர்​கள் கூறிய​தாவது: கடல்​வாழ் உயி​ரினங்​களில் மிக வேக​மாக நீந்​தக் கூடியவை இந்த கத்தி மீன்​கள். மணிக்கு சராசரி​யாக 100 கி.மீ. வரை​யிலும் நீந்​தும் திறன் கொண்​ட​வை. மயி​லின் தோகை போன்று இந்த மீனின் துடுப்​பு​கள் இருப்​ப​தால், பாம்​பன் மீனவர்​கள் இதை மயில் மீன் என்​றும் அழைக்​கின்​றனர். இந்​தி​யப் பெருங்​கடலில் கூட்​டம் கூட்​ட​மாகக் காணப்​படும் கத்தி மீன்​கள், மன்​னார் வளை​கு​டாப் பகு​திக்கு இனப்​பெருக்​கத்​துக்​காக வந்​திருக்​கலாம். இந்த மீனின் தாடை வாள் போன்று இருப்​ப​தால், அதைப் பயன்​படுத்தி…

Read More

ராமேசுவரம் அருகே பாம்பன் வடக்கு மீன்பிடித் துறை முகத்தில் மீனவர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் உலக மீனவர் தினவிழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் மீனவ மக்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்காமல் புறக்கணித்து வருகின்றன. மீனவர்களுக்கு வழங்கிய சுனாமி வீடுகளை புதுப்பிக்கவில்ைல. கடற் கரையோரங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒதுக்கி, மீனவர்கள் அப்புறப் படுத்தப்படுகின்றனர். வரும் காலங்களில் மீனவ அமைப்புகளை ஒன்றிணைத்து, மீனவர்கள் நலனுக்காக தொடங்கப்படும் அமைப்பு அல்லது கட்சியில் என்னை இணைத்துகொண்டு மீனவர்களுக்கு பாதுகாப்பாக செயல்படுவேன் என்றார்.

Read More

இந்திய எல்லைக்குள் பாதுகாப்பான தகவல் தொடர்பை ஊக்குவிக்கும் விதமாக, இந்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இந்தியப் பயனாளர்களுக்கு ஒரு புதிய காலர் ஐடியை CNAP ( Calling Name Presentation) கொண்டுவர ஒப்புதல் அளித்திருந்தது. தற்பொழுது இந்தியாவில் உள்ள ஒரு சில பகுதிகளில், சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. CNAP விளக்கம் : இந்தக் காலர் ஐடி ட்ரு காலர் ( True caller) ஆப் போல இயங்கும். அதாவது உங்கள் தொலைபேசியில் ஒரு அழைப்பு வரும் பட்சத்தில், உங்களுக்கு அழைப்பு விடுக்கும் அந்த எதிர் நபரின் பெயர் உங்கள் மொபைலில் காண்பிக்கப்படும். நீங்கள் அந்த நபரின் பெயரை ஏற்கனவே பதிவு செய்திருந்தாலும், அந்த நபரின் பெயர் முதலில் வந்து பின்னர் தான் நீங்கள் பதிவு செய்திருந்த பெயர் வரும். ஒரு நபர் சிம் கார்டை வாங்கும் பொழுது அந்த அந்த நபரின் கேஒய்சி மற்றும் ஆதார்…

Read More

ரஜினி நடிக்கவுள்ள 173-வது படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினி நடிக்கவுள்ள 173-வது படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. கமல் தயாரிக்க அறிவிக்கப்பட்ட இப்படத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து திடீரென விலகினார் சுந்தர்.சி. இதனால் இப்படத்தின் இயக்குநர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இப்படத்துக்காக தொடர்ச்சியாக கதைகள் கேட்கும் படலத்தில் ராஜ்கமல் நிறுவனமும், ரஜினியும் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது 173-வது படத்துக்காக ‘மகாராஜா’ படத்தை இயக்கிய இயக்குநர் நித்திலன் மற்றும் ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் ஆகியோர் கதைகள் கூறியிருக்கிறார்கள். இந்த இருவரில் ஒருவர் தான் இயக்குநராக இருப்பார் என்பது உறுதியாகி இருக்கிறது. இதன் இயக்குநர் யார் என்பது குறித்த அறிவிப்பினை ரஜினியின் பிறந்த நாளன்று அறிவிக்கலாம் என்று தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. ’ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. அதனை முடித்துவிட்டு கமல் தயாரிக்கும் தனது 173-வது…

Read More