Author: Editor TN Talks
சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் நமது போராட்டம் தொடரும். சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம். குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள விளக்கங்கள் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் பெற்ற 8 ஏப்ரல் 2025 தீர்ப்பின் மீது எந்தத் தாக்கத்தையும் செலுத்தாது. சொல்லப் போனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் ஆட்சியைச் செலுத்த வேண்டும், மாநிலத்தில் இரண்டு அதிகார மையங்கள் இருக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டகத்துக்குட்பட்டே அரசியலமைப்புப் பதவியில் இருப்போர் செயல்பட வேண்டுமே ஒழிய, அரசியலமைப்பை மீறிச் செயல்படலாகாது. சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் மறுப்பது / (தமிழ்நாடு ஆளுநர் செய்தது…
ஆலந்தூரில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஆதரவற்ற முதியோர் இல்லத்தை இடிக்க முயல்வதாக, அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை ஆலந்தூர் அய்யப்பந்தாங்கல் பரணிபுதூர் கல்லூரி சாலையில் இயங்கிவரும் ‘லிட்டில் டிராப்ஸ்’ ஆதரவற்ற முதியோர் இல்லத்தை இடித்துவிடுவேன் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் மிரட்டல் விடுக்கும் காணொளி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அன்னை தெரசாவால் தொடங்கி வைக்கப்பட்டு கடந்த 35 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் 400-க்கும் மேற்பட்ட முதியோர் பயன்பெற்று வரும் நிலையில், அதை இடித்துவிடுவேன் என ஓர் அமைச்சரே மிரட்டல் விடுத்திருப்பது கண்டனத்துக்குரியது. முதியோர் இல்லத்தைச் சுற்றி அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்துள்ள தனியார் கட்டுமான பெரு நிறுவனம், முதியோர் இல்லத்தை இடித்து அதன் வழியாகக் கழிவுநீர் கால்வாய் அமைக்க முயல்வதாகவும், அதற்கு அமைச்சர் துணை நிற்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனியார் பெரு…
“கட்சி பெயரை கூட இன்னொரு கட்சியின் பெயரை களவாடி வைத்துள்ளார்கள். அந்த பேரைக் கூட எனக்கு சொல்லப் பிடிக்காது” என மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ எம்பி காட்டமாக தெரிவித்தார். அரியலூரில் செய்தியாளர்களுக்கு இன்று அவர் அளித்த பேட்டி: ஓர் அரசியல் இயக்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவது மக்கள் சக்தி. மக்கள் வாக்களித்து தான் ஓர் இயக்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருகிறார்கள். ஆனால் பஞ்சாங்கத்தை பார்த்து இந்த கட்சி ஆட்சிக்கு வரும், அந்தக் கட்சி ஆட்சியை இழக்கும் என நயினார் நாகேந்திரன் சொல்லி இருப்பது நகைப்புக்குரியது. நயினார் நாகேந்திரன் நல்ல ஒரு அரசியல்வாதி. சேரக்கூடாத இடத்தில் சேர்ந்துள்ளார். நெல்லுக்கான ஈரப்பதம் 18 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. 22 சதவீதமாக ஈரப்பதத்தை கூட்டினால் தான் விவசாயிகள் நெல்லை விற்க முடியும். ஆனால் இந்த கோரிக்கை ஒவ்வொரு ஆண்டும் எழுந்து வருகிறது. மத்திய குழுவினர்…
“2011-ம் ஆண்டு மக்கள் தொகையை குறிப்பிட்டு திட்ட அறிக்கையை தவறாக தயார் செய்ததே மெட்ரோ ரயில் திட்டம் திருப்பி அனுப்பப்பட்டதற்கு முக்கியக் காரணம்” என்று திமுக அரசு மீது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மதுரை மாநகராட்சியில் வசிக்கும் மக்கள் இன்னும் 25 முதல் 30 ஆண்டுகளுக்கு தூய்மையான குடிநீர் குடிக்கவும், தாராளமாக வீட்டு உபயோகத்துக்கு தண்ணீரை பயன்படுத்தவும் அதிமுக ஆட்சியில் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதுபோல், மாரியம்மன் தெப்பக்குளத்தை தூர்வாரி வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து 40 ஆண்டுக்குப் பிறகு நிரப்பினோம். வைகை ஆற்றில் இரண்டு தடுப்பணைகளை கட்டி நகரின் நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கினோம். திருமலை நாயக்கர் மகாலை, புது மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பித்தது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் சாலை கொண்டு வந்தோம். பொதுவாக ஒரு திட்டத்துக்கு…
துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானப் படையின் தேஜாஸ் போர் விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். துபாயில் உள்ள அல் மக்டோம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 17-ம் தேதி விமான கண்காட்சி 2025 தொடங்கியது. விமான கண்காட்சியின் கடைசி நாளான இன்று (நவ.21) இந்திய விமானப் படையின் தேஜாஸ் விமானத்தின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியைக் காண ஏராளமானோர் கூடி இருந்தனர். இந்நிலையில், தேஜாஸ் விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மைதானத்தில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியதாக கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2.15 மணி அளவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தை அடுத்து, விமான கண்காட்சி நிறுத்தப்பட்டது. இந்த விபத்தை உறுதிப்படுத்தியுள்ள இந்திய விமானப் படை, இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என…
‘இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் எழுத்துக்கள் வெறும் வரலாறு மட்டுமல்ல, அவை இந்தியாவின் வளர்ந்து வரும் மனசாட்சியின் பதிவு’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார். ‘ஜவஹர்லால் நேருவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்’ டிஜிட்டல் மயமாக்கல் நிறைவடைந்துள்ளது. ஜவஹர்லால் நேருவின் படைப்புகள் இப்போது 100 தொகுதிகளின் முழு தொகுப்பாக ஆன்லைனில் உள்ளது. இதில் சுமார் 35,000 ஆவணங்கள் மற்றும் நேருவுடன் தொடர்புடைய சுமார் 3,000 விளக்கப்படங்கள் உள்ளன. அவை டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பதிவிறக்கம் செய்ய இலவசமாகக் கிடைக்கின்றன. இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நேருவின் எழுத்துக்கள் வெறும் வரலாறு மட்டுமல்ல, அவை இந்தியாவின் வளர்ந்து வரும் மனசாட்சியின் பதிவு. நமது நாட்டின் ஜனநாயகப் பயணத்தைப் புரிந்துகொள்ள விரும்பும் எவருக்கும், அவரது வார்த்தைகள் ஒரு சக்திவாய்ந்த திசைகாட்டியாக இருக்கின்றன. இந்த படைப்புகள் இப்போது டிஜிட்டலில் வெளியாகியுள்ளது. இது தேடக்கூடியது மற்றும் அனைவருக்கும் இலவசம் என்பதை சொல்வதில் நான்…
பெர்த்தில் இன்று தொடங்கிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நாடகீயமான முறையில் 19 விக்கெட்டுகள் விழுந்த தினமானது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதவிக்க, ஆஸ்திரேலியா இறங்கி தன் 9 விக்கெட்டுகளை வெறும் 123 ரன்களுக்கு இழந்து அல்லாடி வருகிறது. ஆட்ட முடிவில் நேதன் லயன் 3 ரன்களுடனும் பிரெண்டன் டாக்கெட் பந்துகளை இன்னும் எதிர்கொள்ளாமலும் களத்தில் இருக்கின்றனர். ஆஸ்திரேலிய அணியில் கமின்ஸ், ஹாசில்வுட் போன்ற முன்னணி பவுலர்கள் இல்லாவிடினும் மிட்செல் ஸ்டார்க் தனி நபராக இங்கிலாந்தின் பேட்டிங் முதுகெலும்பை உடைத்தார். அவர் 12.5 ஓவர்களில் 4 மெய்டன்களுடன் 58 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு ஆஷஸ் தொடர்கள்ல் 100 விக்கெட்டுகள் சாதனையையும் நிகழ்த்தினார். இங்கிலாந்து தரப்பில் ஆலி போப் 46 ரன்களையும் ஹாரி புரூக் 61 பந்துகளில் 5 பவுண்டரிகள்…
இந்திய அணி உடனான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை அறிவித்துள்ளது கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா நிர்வாகம். இதில் ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை தெம்பா பவுமா வழிநடத்துகிறார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நவ.22-ம் தேதி கவுஹாத்தியில் தொடங்குகிறது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் விளையாட உள்ளன. இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக இந்த இரண்டு தொடரிலும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா விளையாடவில்லை. வரும் நவ.30-ம் தேதி ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. டிச.9-ம்…
அவெஞ்சர்ஸ் திரைப்பட கதா படத்தில் பிளாக் பேந்தர் என்று சொன்னாலே ஒருவரது முகம் தான் நம் அனைவருக்கும் நினைவில் வரும். அது மறைந்த நடிகர் சாட்விக் போஸ்மேன் தான். பிளாக் பேந்தர் திரைப்படத்தில் பிளாக் பேந்தர் கதாபாத்திரத்தில் மிக கனகச்சிதமாக நடித்து உலக ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார். அவரது நடிப்பு வெகுளவு பாராட்டப்பட்டது. உலக அளவில் சுமார் 1.382 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டி வசூலில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 29ஆம் தேதி 1976 ஆம் ஆண்டு பிறந்த அவர் 1993 ஆம் ஆண்டு தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக அடி எடுத்து வைத்து பின்னர் 2003 ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். முழு நீள திரைப்படத்தில் 2008 ஆம் ஆண்டு நடிக்க தொடங்கியவர் 2020 ஆம் ஆண்டு வரை நடித்து, ஆகஸ்ட் மாதம் 2020 28ஆம் தேதி உடல் நலவு குறைவு காரணமாக இயற்கை எய்தினார். நல்ல…
அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்பொழுது 88.81 ஆக உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று இந்திய ரூபாயின் மதிப்பு இவ்வளவு தூரம் கீழே வந்தது அனைவரையும் ஆச்சரியபடுத்தி உள்ளது. அமெரிக்க நாணயத்திற்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் கீழே இறங்கி கொண்டிருக்கும் மிக முக்கிய காரணம் நமது ஏற்றுமதி மிக குறைவாகவும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி மிக அதிகமாகவும் இருப்பதுதான். அது மட்டும் இன்றி இந்தியா அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் சற்று பதட்ட நிலையில் இருப்பதால்தான் இந்த நிலைமை என்றும் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்க அரசாங்கம் நிர்ணயித்து உள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதில் சிக்கல் நீடித்துக் கொண்டு வருகிறது. ஜவுளி,…