Author: Editor TN Talks
சேலத்தில் அடுத்த மாதம் 4-ஆம் தேதி விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல் துறை அனுமதி மறுத்துள்ள நிலையில் அதற்கு என்ன காரணம் என்பதை காவல்துறையினர் கடிதம் மூலமாக விளக்கம் அளித்துள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தவெக தலைவர் விஜய் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அந்த வகையில், கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி விஜய் கலந்து கொண்ட பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிய நிலையில், சுற்றுப்பயணத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக தவெக தலைவர் விஜய் அறிவித்தார். இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், சேலத்தில் அடுத்த மாதம் 4ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்கு அனுமதி கோரி அக்கட்சி சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், சேலத்தில் டிசம்பர் 4ஆம் தேதி…
நம் அனைவருக்கும் சிறுவயதில் இருந்து ஏன் இப்பொழுது வரை உப்புக் கடலை பாக்கெட்டை வாங்கி உண்பது வழக்கமான விஷயம். ஆனால் இனி உப்புக்கடலை வாங்கி உண்ணும் விஷயத்தில் சற்று கவனமாக நாம் இருக்க வேண்டும். சமீபத்தில் உப்புக்கடலை தயாரிக்கும் ஒரு சில இடங்களில் உப்புக்கடலை மீது ஆரமைன் என்கிற கெமிக்கல் ரசாயனத்தை தெளிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உப்புக்கடலை மஞ்சள் நிறத்தில் இருக்கும். நாம் அனைவரும் அதில் மஞ்சள் தூள் கலந்த தண்ணீரை தான் தெளித்து கொண்டு இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் விஷயம் அப்படி இல்லை. ஒரு சில தொழிற்சாலைகளில் உப்பு கடலை தயாரிக்கும் பொழுது இந்த ஆரமைன் என்கிற கெமிக்கல் ரசாயனத்தை உப்புக்கடலை மீது தெளிக்கின்றனர். இதன் மூலம் உப்புக் கடலை பார்ப்பதற்கு நல்ல பளபளப்பாக இருக்கும். ஆனால் அந்த கெமிக்கல் ரசாயம் உடல் நலத்திற்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கும். ஆரமைன் என்பது ஒரு செயற்கை சாயம்.…
வியட்நாமில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் குவாங் நாம் மற்றும் மத்திய நகரமான ஹியூவில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இது, அந்நாட்டில் இதுவரை பதிவான மழைப் பொழிவுகளிலேயே அதிகபட்சமானது என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் 6 மாகாணங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை பேரைத் தேடும் பணிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பல சாலைகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்துள்ள மீட்புக் குழுவினர், பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் சிக்கியுள்ள…
ஓய்வு பெற உள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் இன்று (நவ. 21) பணி நிறைவு நாளையொட்டி கடைசி நாள் வழக்கு விசாரணைகளை மேற்கொள்கிறார். நாட்டின் 52வது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் 14.05.2025-ல் பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடந்த 2000ம் ஆண்டில் ஜனவரி 17ல் நாக்பூர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பி.ஆர்.கவாய் நியமிக்கப்பட்டார். 2003 நவம்பர் 14ல் மும்பை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2005 நவம்பர் 12ல் மும்பை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக பொறுப்பேற்றார். கடந்த 2019 மே 24ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவி உயர்வு பெற்றார். இந்தநிலையில், கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக அவர் பதவியேற்றுக் கொண்டார். இந்த காலகட்டங்களில் அரசியலமைப்பு மற்றும் நிர்வாகச் சட்டம், சிவில்…
அனைத்து மருந்து கடைகளிலும் ஏன் ஒரு சில டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் கூட நாம் ORSL என்ற பெயரில் ஒரு எலக்ட்ரோலைட் குடிநீரை பார்த்திருப்போம். ஆனால் அது உண்மையில் எலக்ட்ரோலைட் குடிநீர் அல்ல. உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு, சரியான கலவையுடன் தயாரிக்கப்படும் எலக்ட்ரானிக் குடிநீர் மட்டுமே ORS ( Oral Rehydration Solution ) ஆக தகுதி பெறுகிறது. இந்த குடிநீரில் சரியான அளவில் எலக்ட்ரோலைட்ஸ், தண்ணீர் மற்றும் இதர விஷயங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இந்தக் குடிநீரை ஒருவர் உடல் பாதையின் வேளையில், அதாவது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு வந்த பின்னர் குடிக்கலாம். உடல் உஷ்ணம் அளவுக்கு அதிகமாகி, வெப்பம் சம்பந்தமாக உடலில் ஏற்படும் அதிக வியர்வை, தலைச்சுற்றல், குமட்டல், தலைவலி மற்றும் சோர்வின் வேலையில் அருந்தலாம். ஆனால் இந்த குடிநீரை மருத்துவரின் ஆலோசனையில் மட்டுமே அருந்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 15, 2025 அன்று, FSSAI (இந்திய உணவு பாதுகாப்பு…
கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை, குறையத் தொடங்கி உள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து, ரூ.92.000-க்கு விற்பனையானது. இந்தநிலையில், இன்று (நவ. 21) தங்கம் விலை மேலும் குறைந்து ஒரு சவரன் மீண்டும் ரூ.92,000-க்கு கீழ் சென்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து, ரூ.11,460-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.320 குறைந்து, ரூ.91,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போன்று வெள்ளி விலையும் சரிவை சந்தித்து வருகிறது. வெள்ளி விலையைப் பொருத்தவரை இன்று கிராமுக்கு ரூ.4 குறைந்து, ஒரு கிராம் ரூ.169-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,69,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காலம் மாறும்போது நம் பழக்கவழக்கங்களும் மாறுகின்றன. ஒரு காலத்தில், குடும்பத்தினர் அனைவரும் ஒரே குளியல் சோப்பை பயன்படுத்தினர். அதை ஒரு பெரிய விஷயமாக யாரும் நினைக்கவில்லை. ஆனால், இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. உள் மற்றும் வெளிப்புற ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் தீவிரமாக அதிகரித்திருப்பதால், குளியல் பொருட்கள் விஷயத்தில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. குடும்பத்திற்குள்ளேயே ஒவ்வொருவரும் தங்களது சரும வகைக்கேற்பவும், விருப்பத்திற்கேற்பவும் தனித்தனி சோப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்தத் தனிப்பட்ட தேர்வுகளின் அடுத்த கட்டமாக, சிலர் பாடி வாஷ் (Body Wash) அல்லது ஷவர் ஜெல் (Shower Gel) பயன்பாட்டிற்கு மாறிவிட்டனர். சோப்புப் பயன்பாடு சுகாதாரமற்றது அல்லது சருமத்திற்கு பாதுகாப்பானது அல்ல என்று கருதுவதே இந்த மாற்றத்திற்குக் காரணம். உண்மையில், இந்த இரண்டு பொருட்களும் எவ்வாறு வேறுபடுகின்றன, மேலும் சரும ஆரோக்கியத்தில் இவை ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பதை பார்க்கலாம். சோப் vs. பாடி வாஷ்: சோப்பு மற்றும்…
காய்ச்சல் வந்துவிட்டால் போதும், நமது வீடுகளில் உள்ள பெரியவர்கள் சொல்லும் முதல் அறிவுரை குளிக்கக்கூடாது என்பது தான். காய்ச்சல் எத்தனை நாள் இருக்கிறதோ அத்தனை நாட்களும் குளிக்காமல் இருந்த அனுபவம் பலருக்கும் இருக்கும். ஆனால், இப்படி பல நாள் குளிக்காமல் இருப்பதே புத்துணர்ச்சியற்று, தெளிவு இல்லாமல் சோர்வாக இருக்க முக்கிய காரணமாகும். இப்படியிருக்க, காய்ச்சலின் போது குளிக்க கூடாது என எதற்காக சொல்கிறார்கள் என நீங்கள் எப்போதாவது யோசித்தது உண்டா? இது உண்மையில் ஆபத்தானதா? இப்படி நாம் சிறுவயதில் இருந்து பழகிய பழக்கத்திற்கு பின்னால் உள்ள காரணம் என்ன? என்பதை இந்த தொகுப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். காய்ச்சலின்போது குளிக்கக் கூடாது என்ற நம்பிக்கை தவறான புரிதலில் இருந்து வந்தது. அந்தக் காலக்கட்டத்தில், மக்கள் பொதுவாகவே குளிர்ந்த நீரைத்தான் பயன்படுத்தினர். அதிக காய்ச்சலுடன் இருக்கும் ஒரு நபர் குளிர்ச்சியான நீரில் குளிக்கும்போது, உடலின் வெப்பநிலை திடீரென வேகமாகக் குறையும். இந்த விரைவான…
முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி 67 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாவே அணி அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாவே ஆகிய அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. ராவல்பிண்டியில் நடந்து வரும் போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். நேற்று (நவ. 20) நடந்த லீக் போட்டியில் இலங்கை மற்றும் ஜிம்பாவே அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாவே அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் பிரையன் பென்னட் 49 ரன்களும், கேப்டன் சிகந்தர் ராசா 47 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கிறது. ஆரம்பமே அந்த அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. இலங்கை அணி 29 ரன்களுக்குள்…
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, திருப்பரங்குன்றம் மலையில் ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட இளைஞர் கைது செய்யப்ப்டார். மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபத்தை ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேற்று முன்தினம் மலை உச்சியில் ஆய்வு செய்தார். நீதிபதி ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, திடீரென அப்பகுதியில் ட்ரோன் கேமரா பறந்தது. அனுமதியின்றி ட்ரோன் பறக்க விட்டது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பழங்கா நத்தம் பகுதியைச் சேர்ந்த யூடியூபர் மணி (25) என்பவர் ட்ரோன் கேமராவைப் பறக்கவிட்டு, காட்சிகளை பதிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸார், ட்ரோன் கேமராவைப் பறிமுதல் செய்தனர்.