Author: Editor TN Talks

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்த பாஜக தேசியக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எஸ்ஐஆர் என்பது வாக்காளர்களை சரிபார்க்கும் வேலை. கள்ள ஓட்டுவது போடுவது தடுக்கப்படும் என்பதால் குறை கூறுகின்றனர். எந்த சீர்திருத்தமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வாக்காளரை சரிபார்க்க ஒவ்வொரு வீட்டுக்கும் மூன்று முறை வருவதாக கூறியுள்ளனர். உண்மையான வாக்காளராக இருந்தால், அந்த வீட்டுக்கு வரும்போது தகுந்த ஆவணங்களை காண்பித்து சீர்திருத்தம் செய்வதுதானே நல்லது. தேர்தலுக்கு முன்புதானே வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படும். 2026 தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. எஸ்ஐஆர் ஒரு மாதத்தில் முடிந்துவிடும். கருத்து வேறுபாடு இருந்தால் சொல்லுங்கள் என்றுள்ளனர். திமுகவுக்கு சாதகமாக இருக்காது என்பதால் எஸ்ஐஆர் சரிபார்ப்பது தவறு என குறை சொல்லக்கூடாது. 2026 தேர்தலில் தவெகவுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி எனக் கூறியதை விஜய்யிடம்தான் கேட்க வேண்டும். அதிமுகவை பிடிக்காததால் டிடிவி.தினகரனும் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார். ஒரு…

Read More

பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசியதாவது: வந்தே மாதரம் என்கிற முழக்கம் முதல் முதலாக ஒலித்து 150 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இந்த எழுச்சிமிகு வார்த்தைகளை ஒவ்வொரு மக்களுக்கும் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என வந்தே மாதரம் பாடலுக்கு தெலங்கானா மாநிலத்தில் மிகப்பெரிய விழா எடுத்துவிட்டனர். ஆனால் வ.உ.சி., கொடி காத்த குமரன் வாழ்ந்த, அவர்கள் முழங்கிய வந்தே மாதரம் பாடலுக்கு தமிழகத்தில் ஒன்றுமே செய்யவில்லை. எப்போதெல்லாம் திமுகவுக்கு பிரச்சினை வருகிறதோ, அப்போதெல்லாம் இங்கே தமிழகத்தில் இனம், பிரிவினை என ஒவ்வொரு ஆயுதமாக கையில் எடுத்து வருகின்றனர். தமிழ் பற்றை பேசாமல் திராவிடத்தை முன்னிறுத்தி திமுக பேசுகிறது. ஆனால் தமிழ் பற்று, தேசப்பற்றை பேசும் பொறுப்பு நமக்கு உள்ளது. கலை கலாச்சார பிரிவுக்கு முக்கிய பங்கு உள்ளது. இங்கே திரையுலகில் பூதம் பிடித்துள்ளது. திரைத்துறை ஒரு…

Read More

புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்வுப் பயணம் மேற்கொள்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 10.11.2025 அன்று ரூ.767 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். திருச்சியில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்திட முதியோர் மனமகிழ் வளமையம் அன்புச்சோலை திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழக முதல்வர் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இரண்டு நாள் பயணமாக புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி நாளொரு திட்டம், பொழுதொரு சாதனை என வளர்த்துவரும் முதல்வர் ஸ்டாலின், மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவற்காக, வீடுகளில் உள்ள முதியவர்கள் மனம் சோர்வடையாமல் ஊக்கம் பெற உதவும் வகையில் தற்போது உருவாக்கியுள்ள புதிய திட்டம் “அன்புச்சோலை திட்டம்”. முதல்வர் ஸ்டாலின் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக, “அன்புச்சோலை -…

Read More

தமிழகம் முழுவதும் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள், தங்கள் பூத்தில் உள்ள அதிமுக மற்றும் நடுநிலை வாக்காளர்களை ஒருங்கிணைத்து வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி, அதில் பிரச்சாரம் உள்ளிட்ட கட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களை பகிர்ந்து வாக்காளர்களுடன் தொடர்பில் இருக்கும்படி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 68,019 ஆயிரம் பூத்களுக்கும் தலா 9 பேர் கொண்ட பூத் கமிட்டிகளை அதிமுக அமைத்திருக்கிறது. அதிமுக மேலிட பார்வையாளர்கள் தலைமையில் அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாகத்தான் இந்த வாட்ஸ் அப் குழுக்களையும் உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், ‘‘சென்னையில் இருந்தபடியே பொதுச்செயலாளர் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளும் விதத்தில் 69,019 பூத்களின் பூத் கமிட்டி நிர்வாகிகள் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிமுக ஐடி விங் நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகளின்…

Read More

ஜனநாயகமும் அரசியலமைப்பும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என்று குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தற்போதைய முக்கிய பிரச்சினை வாக்குத் திருட்டு என்றும் தெரிவித்தார். மத்திய பிரதேச மாநிலம் பச்மாரியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “ ஹரியானாவில் வாக்குத் திருட்டு தெளிவாக செய்யப்பட்டுள்ளது. இருபத்தைந்து லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன, எட்டு வாக்குகளில் ஒரு வாக்கு திருடப்பட்டுள்ளன. தரவுகளைப் பார்த்த பிறகு, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரத்திலும் இதுவே நடந்துள்ளது என்று நான் நம்புகிறேன். இது பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் வேலை. எங்களிடம் இன்னும் அதிகமான ஆதாரங்கள் உள்ளன, விரைவில் அதை வெளிப்படுத்துவேன். தற்போதைய முக்கிய பிரச்சினை வாக்குத் திருட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அதை மூடிமறைத்து நிறுவனமயமாக்குவதற்கான ஒரு அமைப்பு. எங்களிடம் விரிவான தகவல்கள் உள்ளன. இதுவரை நாங்கள் மிகக் குறைவாகவே வெளிக்காட்டினோம், ஆனால் முக்கிய பிரச்சினை என்னவென்றால், ஜனநாயகம் மற்றும்…

Read More

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தில் ஏராளமான பிரச்சினைகளும் குழப்பங்களும் இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நம்முடைய தொடர் எதிர்ப்புகளையும் மீறி சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கிவிட்டன. பெரும்பாலான மக்களுக்கு சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பற்றி இன்னமும் முழுதாக தெரியவில்லை. சரியான, உண்மையான வாக்காளர் பட்டியல்தான் நியாயமான தேர்தலுக்கு அடிப்படை. எனவே, வாக்காளர் பட்டியல் திருத்தத்தை திமுக எதிர்க்கவில்லை. ஆனால், போதுமான கால அவகாசம் கொடுக்காமல் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் இதை அவசர அவசரமாக செய்வது சரியாக இருக்காது என்பதுதான் நமது நிலைப்பாடு. தேர்தல் ஆணையத்தோடு கூட்டு சேர்ந்து வாக்காளர் பட்டியலில் பாஜக எப்படி எல்லாம் மோசடி செய்துள்ளது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் விளக்கி இருக்கிறார். கேரள முதல்வர் பினராயி விஜயனும்,…

Read More

தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார். அவருக்கு ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் இதனை கூறியுள்ளார். பொறுப்பற்ற நடத்தை காரணமாக தேஜ் பிரதாப் யாதவை ஆறு ஆண்டுகளுக்கு ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியில் இருந்து நீக்குவதாக அவரது தந்தையும், கட்சியின் நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார். மேலும் பிரதாப்புடனான அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்து கொள்வதாக அப்போது தெரிவித்தார். இதன் பின்னர் ஜன் சக்தி ஜனதா தளம் என்ற தனி கட்சியை தேஜ் பிரதாப் யாதவ் தொடங்கினார். தற்போது நடைபெற்று வரும் பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் அவரது கட்சி 22 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹுவா தொகுதியில் அவர் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளர்களை தேஜ் பிரதாப் யாதவ் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “எனக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. நான் எனது எதிரிகளால்…

Read More

ஹாங்காங் சிக்ஸ் கிரிக்​கெட் தொடர் ஹாங் காங்​கில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ‘சி’ பிரி​வில் நேற்று நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த இந்​திய அணி 6 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 86 ரன்​கள் குவித்​தது. ராபின் உத்​தப்பா 11 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 28 ரன்​களும், பரத் சிப்லி 13 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 24 ரன்​களும், கேப்​டன் தினேஷ் கார்த்​திக் 6 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 17 ரன்​களும் சேர்த்​தனர். ஸ்டூவர்ட் பின்னி 4, மிதுன் 6 ரன்​கள் எடுத்​தனர். 87 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த பாகிஸ்​தான் அணி 3 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 41 ரன்​கள் எடுத்​திருந்த போது மழை காரண​மாக ஆட்​டம் தடைபட்​டது. தொடர்ந்து மழை பெய்​த​தால் போட்​டியை நடத்த முடி​யாத சூழ்​நிலை உரு​வானது. இதையடுத்து…

Read More

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் சிங்கிள் பாடலின் ‘தளபதி கச்சேரி’ லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசி படம் என்று சொல்லக்கூடிய ‘ஜனநாயகன்’ திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி டில், மமீதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ், ப்ரியாமணி, நரேன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியானது. பாடலின் துவக்கத்திலேயே ”எங்கண்ணா கச்சேரி.. தளபதி கச்சேரி” என துவங்கி பாடல் ஒலிக்க இசை கச்சேரி ஒன்றில் அனிருத் பாடுவது போல வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது. அதில் விஜயின் சிக்னேச்சர் முத்திரை காட்டுவது போலவும், நண்பா நன்றி செல்லம் பாரு.. நம்பிக்கையா சேரு.. காலம் பொறக்குதுடா” என பாடல் துவங்குகிறது. மேலும், ‘தனக்கென வாழாத தரத்துல தாழாதா…

Read More

ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான ஐந்தாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்த டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி தற்சமயம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணியும் வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் இத்தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றிருந்தது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 5ஆவது மற்றும் கடைசி போட்டி இன்று பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்த நிலையில், முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக்…

Read More