Close Menu
    What's Hot

    நீட் மறுதேர்வு வினாத்தாளும் கசிந்ததா..?? வைரலாகும் வீடியோவுக்கு என்.டி.ஏ. பதில்..!!

    புதுச்சேரி : அரசு மருத்துவர்கள் போராட்டம்..! நீண்ட நேரம் காத்திருந்த நோயாளிகள்..!

    மீண்டும்.. மீண்டுமா..!! பீகார் நீட் மறுதேர்வில் பரபரப்பு.. ஆள்மாறாட்ட மோசடியில் 30 பேர் கைது..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»நாளை நடப்பது யாருக்கும் தெரியாது – சரத்குமார் தத்துவம்
    அரசியல்

    நாளை நடப்பது யாருக்கும் தெரியாது – சரத்குமார் தத்துவம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sarath
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்த பாஜக தேசியக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எஸ்ஐஆர் என்பது வாக்காளர்களை சரிபார்க்கும் வேலை. கள்ள ஓட்டுவது போடுவது தடுக்கப்படும் என்பதால் குறை கூறுகின்றனர்.

    எந்த சீர்திருத்தமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வாக்காளரை சரிபார்க்க ஒவ்வொரு வீட்டுக்கும் மூன்று முறை வருவதாக கூறியுள்ளனர். உண்மையான வாக்காளராக இருந்தால், அந்த வீட்டுக்கு வரும்போது தகுந்த ஆவணங்களை காண்பித்து சீர்திருத்தம் செய்வதுதானே நல்லது.

    தேர்தலுக்கு முன்புதானே வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படும். 2026 தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. எஸ்ஐஆர் ஒரு மாதத்தில் முடிந்துவிடும். கருத்து வேறுபாடு இருந்தால் சொல்லுங்கள் என்றுள்ளனர். திமுகவுக்கு சாதகமாக இருக்காது என்பதால் எஸ்ஐஆர் சரிபார்ப்பது தவறு என குறை சொல்லக்கூடாது.

    2026 தேர்தலில் தவெகவுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி எனக் கூறியதை விஜய்யிடம்தான் கேட்க வேண்டும். அதிமுகவை பிடிக்காததால் டிடிவி.தினகரனும் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார். ஒரு கட்சியை ஆரம்பித்து நடத்தி வருபவர், நேற்று ஆரம்பித்த கட்சியைப் பற்றிக்கூறுவது டிடிவி.தினகரனுக்கு நல்லதல்ல.

    2026 தேர்தலில் என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது, நாளை நடப்பது உங்களுக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது என்பதால் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். பாஜக தேசியக்குழுவில் உறுப்பினராக உள்ளேன். தமிழக தேர்தல் பொறுப்பாளராகவும் நியமித்துள்ளனர். மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனோடு இணைந்து தேர்தல் கூட்டணி வெற்றிக்கு உறுதுணையாக செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    sarath#politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்ப்பற்றை பேசாத திமுக: நடிகை கஸ்தூரி குற்றச்சாட்டு
    Next Article கதை கேட்கச் சென்ற இடத்தில் மோசமான அனுபவம்: மனம் திறந்தார் மவுனி ராய்
    Editor TN Talks

    Related Posts

    ‘சிங்கத் தமிழர் vs குள்ள நரிகள்’! அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சி பூசல்?

    June 21, 2026

    நீட் தேர்வே தேவையில்லை; மாப்பிள்ளையும், மகனும்தான் அதிகார மையம் – அமைச்சர் நிர்மல்குமார் பளீச்

    June 21, 2026

    மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டவேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட் மறுதேர்வு வினாத்தாளும் கசிந்ததா..?? வைரலாகும் வீடியோவுக்கு என்.டி.ஏ. பதில்..!!

    புதுச்சேரி : அரசு மருத்துவர்கள் போராட்டம்..! நீண்ட நேரம் காத்திருந்த நோயாளிகள்..!

    மீண்டும்.. மீண்டுமா..!! பீகார் நீட் மறுதேர்வில் பரபரப்பு.. ஆள்மாறாட்ட மோசடியில் 30 பேர் கைது..!!

    CM விஜய் பிறந்தநாள்..!! அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்..!! அமைச்சர் ஸ்ரீநாத் மாஸ்..!!

    ஃபேஸ்புக், இன்ஸ்டா போல இனி வாட்ஸ்அப்பிலும் ‘க்ரீன் டாட்’.. புதிய ஸ்டோரேஜ் டூல்களுடன் அதிரடி அப்டேட்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.