Author: Editor TN Talks
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் இனி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இத்திருக்கோவில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வரும் நிலையில் இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள், அன்று சாமியை தரிசனம் செய்ய முடியாத பட்சத்தில் மறுநாள் முருகனை தரிசிப்பதற்காக கோயில் கடற்கரை பகுதியில் இரவு நேரத்தில் தங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் சமீப காலமாக கடற்கரை பகுதியில் தங்குபவர்களிடம் திருட்டு போன்ற குற்றச் சம்பவம் நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்துள்ளன. அந்த புகார்களை கருத்தில் கொண்டு பக்தர்களின் பாதுகாப்பை…
தமிழகத்தில் 4 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அந்த மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. • தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 08-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 09-11-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, பிரபல ரவுடி நாகேந்திரன் மரணம் அடையவில்லை என்றும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவரை தமிழக அரசு தப்ப வைத்து விட்டதாக, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் தரப்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு காரணமாக நாகேந்திரன் மரணம் அடைந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேர் தாக்கல் செய்த மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் கூட, வழக்கு கோப்புகளை மாநில…
பிரபு சாலமன் இயக்கத்தில் புதுமுகம் மதி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கும்கி 2’. ஷ்ரிதா ராவ், ஆன்ட்ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பெரேடி, நாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இதை பென் ஸ்டூடியோஸ், பென் மருதர் சினி என்டர்டெய்ன்மென்ட்ஸ் சார்பில் ஜெயந்திலால் காடா, தவல் காடா தயாரித்துள்ளனர். இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரபு சாலமன் கூறும்போது, “இப்படத்துக்காக நாங்கள் கடந்து வந்த பாதைகள் அதிகம். நெல்லையம்பதி என்ற இடத்தில் படப்பிடிப்புக்காகக் காட்டுக்குள் ஜீப்பில் செல்ல 4 முதல் 5 மணி நேரமாகும். மின்சாரம் இல்லாமல், மொபைல் நெட்வொர்க் இல்லாமல்தான் படப்பிடிப்பு நடத்தினோம். பழைய பிரிட்டிஷ் விருந்தினர் வீடு. கடுமையான குளிரில் மொத்தப் படக்குழுவினரும் சிரமப்பட்டார்கள். 2018-ல் தொடங்கி, 2019-ல் படத்தை முடித்துவிட்டு டிசம்பரில் போட்டுக் காட்டினோம். பிறகு கரோனா அனைத்தையும் புரட்டிப் போட்டுவிட்டது. தயாரிப்பாளருக்கு…
செங்கோட்டையன் விவகாரத்திலும் திமுக பின்னணியில் இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே தொட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ‘வந்தே மாதரம்’ 150-வது ஆண்டு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக கூறிய பிறகே, அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பாக பல்வேறு விஷயங்களை தான் முன்னெடுத்ததாக செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும், 6 பேர் அதிமுகவை ஒன்றிணைக்கச் சென்றோம் என்றும் தெரிவித்துள்ளார். அந்த 6 போ் யார் என்று தெரியவில்லை. பாஜகவில் யாரிடம் சென்று கூறினார்கள் என்பதையும் செங்கோட்டையன் கூறவில்லை. எனவே, இதுகுறித்து நான் கருத்து கூறினால் தவறாகப் போய்விடும். ஏற்கெனவே மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்துள்ளார். எனவே, செங்கோட்டையன் விவகாரத்தின் பின்னணியிலும் திமுக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. கோவை இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது…
சென்னையில் உள்ள 20 வெளிநாட்டு துணை தூதரகங்களுக்கும் நடிகர் அருண் விஜய் வீட்டுக்கும் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பள்ளிகள், விமான நிலையங்கள், தூதரகங்கள் உட்பட பலவற்றுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஜிபி அலுவலக இ-மெயில் முகவரிக்கு நேற்று காலை மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நடிகர் அருண் விஜய் வீடு, நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை, கிண்டியில் உள்ள பிலிப்பைன்ஸ்,ராயப்பேட்டையில் உள்ள ஆஸ்திரேலியா, நந்தனத்தில் உள்ள தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின் 20 துணைத் தூதரகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் உயர் போலீஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தலை அடுத்து, போலீஸார் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் விரைந்து வெடிகுண்டு மிரட்டலுக்கு உள்ளான இடங்களில் சோதனை நடத்தினர். பல மணி நேர சோதனைக்குப் பிறகு…
‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார், இயக்குநர் ராஜமவுலி. இதில் வில்லனாக நடிக்கும் பிருத்விராஜின் முதல் தோற்ற போஸ்டரை ராஜமவுலி வெளியிட்டுள்ளார். அவர் ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுபற்றி ராஜமவுலி வெளியிட்டுள்ள பதிவில், ” பிருத்விராஜுடன் முதல் ‘ஷாட்’டை எடுத்த பிறகு, நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த நடிகர் நீங்கள்தான் எனச் சொன்னேன். இந்தக் கொடுமையான, இரக்கமற்ற, சக்திவாய்ந்த எதிரியான ‘கும்பா’வுக்கு உயிர் கொடுத்தது திருப்திகரமாக இருந்தது. இப்படத்தில் இணைந்ததற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். இந்தப் படத்துக்காக ‘குளோப் டிரோட்டர்’ என்ற சாகச உலகத்தைப் படக்குழு உருவாக்கியுள்ளது. இதற்கான விழா ஐதராபாத்தில் நவ.15-ம் தேதி நடைபெற இருக்கிறது.
ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த மலையாள படம் ‘பிரம்மயுகம்’. கேரள நாட்டுப்புறக் கதைகளின் பின்னணியில், கருப்பு – வெள்ளையில் இப்படம் எடுக்கப்பட்டது. இதில் கொடுமோன் போட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மம்மூட்டி. கடந்த 2024-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் மம்மூட்டியின் நடிப்புக்கு விருது கிடைக்கும் என்று கூறப்பட்டது. அதேபோல சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதை அவர் சமீபத்தில் பெற்றார். இந்நிலையில் இப்படம் ஆஸ்கர் அகாடமியில் திரையிடப்பட இருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஆஸ்கர் அகாடமியின் அருங்காட்சியகத்தில், அடுத்த ஆண்டு பிப்.12-ம்தேதி திரையிடப்படும். இதில் பங்கேற்கும் ஒரே இந்தியப் படம் இது. இதை நடிகர் மம்மூட்டி, தன துசமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சேரன், நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம் நவீனத் தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்டு நவ.14-ம் தேதி வெளியாகிறது. படத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து பகிர்ந்து கொள்ளும் வகையில் படக்குழுவினர் ‘ஆட்டோகிராஃப் ரீயூனியன்’ எனும் பெயரில் பிரத்யேக நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இதில் சினேகா, இயக்குநர்கள் ராமகிருஷ்ணன், பாண்டிராஜ், ஜெகன், பாடலாசிரியர் சினேகன், இசையமைப்பாளர் பரத்வாஜ், இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் கலந்து கொண்டனர். ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் சேரனுடன் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இயக்குநர் சேரன் பேசும்போது, “21 வருடங்களுக்குப் பிறகு ‘ஆட்டோகிராஃப்’ படம் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுக்கு சென்றடைவதற்காக நாங்கள் என்ன செய்திருக்கிறோம்? இன்றும் என்னுடைய படம் ஏதேனும் ஒரு இடத்தில் இந்த சமூகத்தில் யாரோ ஒருவரை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு கரை சேர்க்கிறது என்றால் அதைத்தான் என் வெற்றியாகப் பார்க்கிறேன். அப்படித்தான் என்னுடைய ஒவ்வொரு படத்தையும் உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படத்தைக்…
நான்கு வழிச் சாலையில் பைக் மற்றும் எலெக்டிரிக் கார் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். கிணத்துக்கடவை அடுத்த கோவில்பாளையம், காளியண்ணன் புதூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி முருகேசன் (56) – ஜோதி (46). முருகேசன் கூலித் தொழிலாளியாக இருந்து வந்தார். இந்த தம்பதியருக்கு சந்தியா (25) என்ற மகள் உள்ளனர். சந்தியாவுக்கு சந்தோஷ் என்பவருடன் திருமணமாகி 3 வயதில் ஒரு மகள், ஒரு வயதில் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் 5 பேரும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக முருகேசன் – ஜோதி தம்பதி, மகள் சந்தியா அவரது இரண்டு குழந்தைகளுடன் கோவில்பாளையம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் நான்கு வழிச் சாலையில் சென்று கொண்டிருந்தனர். 5 பேரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அதே பாதையில் எதிரே காமராஜர்புரம், கிருஷ்ணசாமி சாலையில் வசிக்கும் துரைராஜ் (60) எலெக்ட்ரிக் காரில் வந்து…