Close Menu
    What's Hot

    ஒரே பைக்கில் சென்று வாக்கு கேட்ட அண்ணாமலை, வானதி!. கோவையில் அனல் பறக்கும் பிரச்சாரம்!

    ”நான் என்றுமே டேஞ்சர் தான்”!. முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு!

    ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிட முடியாது!. விஜய் அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»‘ஆட்டோகிராஃப்’ படத்தை மீண்டும் வெளியிடுவது ஏன்? – சேரன் விளக்கம்
    சினிமா

    ‘ஆட்டோகிராஃப்’ படத்தை மீண்டும் வெளியிடுவது ஏன்? – சேரன் விளக்கம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    cheran
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சேரன், நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம் நவீனத் தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்டு நவ.14-ம் தேதி வெளியாகிறது. படத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து பகிர்ந்து கொள்ளும் வகையில் படக்குழுவினர் ‘ஆட்டோகிராஃப் ரீயூனியன்’ எனும் பெயரில் பிரத்யேக நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

    இதில் சினேகா, இயக்குநர்கள் ராமகிருஷ்ணன், பாண்டிராஜ், ஜெகன், பாடலாசிரியர் சினேகன், இசையமைப்பாளர் பரத்வாஜ், இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் கலந்து கொண்டனர். ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் சேரனுடன் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

    இயக்குநர் சேரன் பேசும்போது, “21 வருடங்களுக்குப் பிறகு ‘ஆட்டோகிராஃப்’ படம் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுக்கு சென்றடைவதற்காக நாங்கள் என்ன செய்திருக்கிறோம்? இன்றும் என்னுடைய படம் ஏதேனும் ஒரு இடத்தில் இந்த சமூகத்தில் யாரோ ஒருவரை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு கரை சேர்க்கிறது என்றால் அதைத்தான் என் வெற்றியாகப் பார்க்கிறேன். அப்படித்தான் என்னுடைய ஒவ்வொரு படத்தையும் உருவாக்கி இருக்கிறேன்.

    இந்தப் படத்தைக் கூட அப்படித்தான் உருவாக்கினேன். எந்த தோல்வியாக இருந்தாலும் அதைக் கடந்து செல்லும் மனநிலை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது. இதில் காதல், ஒரு கருவி மட்டும் தான். நீ எங்கேயும் சோர்ந்து போய் விடாதே என்று சொல்வதுதான் இந்தப்படம். இந்தத் தலைமுறையினர் இந்தப் படத்தைப் பார்த்தால் அவர்களுக்கு வேறு யோசனை தோன்றலாம். நாம் விதைக்கத்தான் முடியும். அதற்கு இந்த படம் தகுதியானது என்பதால் மீண்டும் வெளியிடுகிறோம்.

    இந்தப் படத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ற வகையில் கலர் கரெக் ஷன் முழுவதுமாக செய்து இருக்கிறேன். ரசிகர்களுக்கு சோர்வை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக டால்பி அட்மாஸ் போன்ற புதிய இசை நுட்பங்களை இணைத்து இருக்கிறோம்” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒரே பைக்கில் குடும்பமாக வந்த 5 பேர்! கோர விபத்தில் உயிரிழந்த தாத்தா மற்றும் பேத்தி!
    Next Article ஆஸ்கர் அகாடமியில் மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’
    Editor TN Talks

    Related Posts

    தவறான ரயிலில் ஏறி கஷ்டப்படுவதைவிட, இறங்கி விடுவது நல்லது!. நடிகை ஹன்சிகா பேச்சு!

    April 17, 2026

    இந்திய சினிமாவின் அசுர வேட்டை!. ரூ.3000 கோடி வசூலை எட்டிய முதல் படமாக ‘துரந்தர்’ சரித்திரம்!

    April 15, 2026

    சுந்தர்.சி-ஐ தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி அவுட்?. ரஜினி படத்தில் திடீர் திருப்பம்!

    April 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஒரே பைக்கில் சென்று வாக்கு கேட்ட அண்ணாமலை, வானதி!. கோவையில் அனல் பறக்கும் பிரச்சாரம்!

    ”நான் என்றுமே டேஞ்சர் தான்”!. முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு!

    ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிட முடியாது!. விஜய் அதிரடி!

    சமரசமான சங்கீதா!. அது நடந்து முடிந்த கதை!. விஜய்யின் தந்தை அதிர்ச்சி தகவல்!.

    ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை; புகார் எண்கள் அறிவிப்பு!.

    Trending Posts

    இன்று (ஏப். 21) மாலை 6 மணி முதல் பிரச்சாரம் கூடாது!

    April 20, 2026

    தமிழகம் இருண்ட நிலைக்கு போய்விட்டது!. அண்ணாமலை கண்டனம்!

    April 21, 2026

    ஒரே பைக்கில் சென்று வாக்கு கேட்ட அண்ணாமலை, வானதி!. கோவையில் அனல் பறக்கும் பிரச்சாரம்!

    April 21, 2026

    ”நான் என்றுமே டேஞ்சர் தான்”!. முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு!

    April 21, 2026

    ஆதாயங்களைக் காட்டி உங்கள் மகனை அடக்கிவிட முடியாது!. விஜய் அதிரடி!

    April 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.