Author: Editor TN Talks
பிஹாரில் மாற்றம் நிச்சயமாக வரும் என்பதை முதல்கட்ட தேர்தலில் பதிவான அதிகளவிலான வாக்குப்பதிவு காட்டுகிறது என்றும், 65.08% வாக்காளர்கள் முதல்கட்ட தேர்தலில் பங்கேற்றுள்ளதாகவும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறினார். சுபாலில் இன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், “தேர்தல் ஆய்வாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலர் பிஹாரில் என்ன நடக்கப் போகிறது என்பது தங்களுக்குத் தெரியும் என்று கூறுகின்றனர். ஆனால் நாட்டின் அரசியல் வரலாற்றில் பிஹாரில் அதிக வாக்குப்பதிவு நடக்கும் என்று யாரும் கணிக்கவில்லை. பிஹாரில் மாற்றம் நிச்சயமாக வரும் என்பதை முதல்கட்ட தேர்தலில் பதிவான அதிகளவிலான வாக்குப்பதிவு காட்டுகிறது. ஜன் சுராஜ் கட்சி பிஹார் அரசியலில் முதன்முதலில் கால் பதிக்கிறது. தற்போதுள்ள அரசியல் அமைப்புக்கு ஓர் உண்மையான மாற்றாக எங்கள் கட்சி விளங்குகிறது. 30 ஆண்டுகளாக ஒரே அரசியலை பார்த்த வாக்காளர்கள் மாற்றத்தைத் தேடுகிறார்கள். பிரதமருக்கு சொல்வதற்கு வேறு எதுவும் இல்லாததால், ஆர்ஜேடி…
சென்னை திருவான்மையூர், ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமிழ்நாடு அரசு மற்றும் SCOO NEWS நிறுவனம் இணைந்து நடத்திய புதிய இந்திய கல்வி உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டில் SCOO NEWS நிறுவன தலைமை நிர்வாக அலுவலர் ரவி சாண்ட்லனி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 700-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சமூக நீதிக்கான இடத்துக்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். 2022-ல் எண்ணும் எழுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, அந்த திட்டம் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு உள்ளிட்ட சில பாடங்களை குறிப்பிட்டு செயல்படுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட சில இடங்களில் கவனம் செலுத்தவேண்டும் என சிலர் சொன்னார்கள். எங்களை…
நடிகர் கமல்ஹாசனின் நாயகன் திரைப்படம் மறு வெளியீட்டுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1987 ம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படம், நடிகர் கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் வெளியீட்டு உரிமை பெற்றுள்ளதாகக் கூறி, எஸ் ஆர் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் எஸ் ஆர் ராஜன், நாயகன் படத்தின் மறு வெளியீட்டுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நாயகன் திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை 2023 ம் ஆண்டு ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து படத்தினை வெளியிடும் உரிமையை கடந்த 2023 அன்று பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனை மறைத்து V.S.பிலிம் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நாயகன் திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளதால்,…
9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலும் அந்த மையம் தெரிவித்து இருப்பதாவது : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 07-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 08-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 09-11-2025: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை…
உலக டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் பிரிவு மற்றும் இரட்டையர் பிரிவில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் கலந்து கொள்ளும் ஏடிபி பைனல்ஸ் தொடர் இத்தாலியின் துரின் நகரில் வரும் 9-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடருக்கான டிரா நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஒற்றையர் பிரிவில் கலந்துகொள்ளும் 8 வீரர்களும் இரு பிரிவுளாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஜிம்மி கானர்ஸ் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பிஜோர்ன் போர்க் பிரிவில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த பிரிவில் கடைசி வீரராக இடம் பெறுவதில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம், இத்தாலியின் லோரென்சோ முசெட்டி ஆகியோர் இடையே போட்டி நிலவி வருகிறது. தற்போதைய நிலையில் 8-வது இடத்தில்…
எவ்வளவுதான் திறமையைக் காட்டி நிரூபித்தாலும் சிலருக்கு இப்போதெல்லாம் இந்திய அணியில் புதிதாக இடம் கிடைப்பதோ அல்லது தன்னை நிரூபித்த வீரர்கள் மீண்டும் அணிக்குத் திரும்புவதோ நிச்சயமற்றதாகி விடுகிறது. முகமது ஷமி இப்போது லேட்டஸ்ட் பலி ஆடாகியுள்ளார். ரஞ்சி டிரோபி 2025–26 தொடரில் ஷமி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்படியும் அவரை இந்தியா ஏ அணிக்குத் தேர்வு செய்யவில்லை, இப்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் தேர்வு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதுவரை மூன்று போட்டிகளில் அவர் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி, பெங்காலை உத்தராகண்ட் மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிராக வெற்றி பெறச் செய்தார். இத்தகைய ஆட்டத்தையும் பொருட்படுத்தாமல் தேர்வுக்குழு அவரை மீண்டும் புறக்கணித்துள்ளது. அஜித் ஆகார்கர் தலைமையிலான தேர்வுக்குழு ஷமியின் ‘மேட்ச் ஃபிட்ட்னஸ்’ குறித்த சந்தேகங்களையே காரணமாகக் கூறியுள்ளதாகத் தெரிகிறது. மேட்ச் ஃபிட்னெஸ், மேட்ச் பிராக்டீஸ் போன்ற சொற்றொடர்களெல்லாம் ‘சும்மா பம்மாத்து’ என்பதே ஷமியின் பயிற்சியாளரான முகமது பத்ருதீனின் காட்டமான…
ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2026-ம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான ஆட்டங்களை நடத்துவதற்கான நகரங்களை பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதன்படி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம், டெல்லி அருண் ஜெட்லி மைதானம், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம், மும்பை வான்கடே மைதானம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியை உலகின் மிகப்பெரிய மைதானமான ஒரு லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய அகமதாபாத் மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியும் இதே மைதானத்தில்தான் நடத்தப்பட்டது. டி20 உலகக் கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணையை ஐசிசி அடுத்த வாரம் வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக போட்டிகள் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ம் தேதி நிறைவடையக்கூடும். இந்தத் தொடரில்…
ஆன்லைன் சூதாட்டச் செயலியை விளம்பரப்படுத்தியதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவண் மீது அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. விசாரணையில், அவர்கள் இருவரும் சூதாட்டச் செயலியை விளம்பரப்படுத்தியதில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றது தெரியவந்தது. இதனையடுத்து, சுரேஷ் ரெய்னாவின் ரூ. 6.64 கோடி மதிப்பிலான சொத்துகளும் (மியூச்சுவல் ஃபண்ட்), ஷிகர் தவணின் ரூ.4.5 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளையும் அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் வீரர்களான யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா மற்றும் நடிகர்கள் சோனு சூட், ஊர்வசி ரவுதலா, மிமி சக்ரவர்த்தி (முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.) மற்றும் அங்குஷ் ஹஸ்ரா (வங்காள நடிகர்) ஆகியோரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியிருந்தது. இவர்கள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என தெரிகிறது.
முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்பான 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் இருதரப்புக்கும் வழங்க பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் மேயர் சைதை துரைசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அளவுக்கு அதிகமாக தேர்தலுக்கு செலவு செய்ததால் ஸ்டாலி்ன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார். அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த…
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சென்னை அறிவாலயத்தில் நேற்று காலை சந்தித்து பேசினார். அப்போது சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட தனியரசு விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு முதல்வர் ஸ்டாலினும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாக தெரிகிறது. சந்திப்புக்கு பின் தனியரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுகவின் நான்கரை ஆண்டுகால ஆட்சியின் சிறப்பைஉணர்ந்து முதல்வரை நேரில் சந்தித்து பாராட்டுகளை தெரிவித்தேன். குறிப்பாக பாஜகவுக்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்கும் முதன்மை அரசியல் இயக்கமாக திமுக இருக்கிறது. திமுக கூட்டணியில் இல்லாவிட்டாலும் இந்த ஆட்சியின் திட்டங்களை ஆதரித்து வருகிறோம். தொடர்ந்து2026 சட்டப்பேரவை தேர்தல் உட்பட எதிர்காலத்தில் திமுகவோடு இணைந்து செயல்படுவது குறித்தும் பேசினோம். அதிமுக கூட்டணியில் 10 ஆண்டுகள் இருந்தோம். ஆனால், இன்று பாஜகவின் கிளை அமைப்பாக அதிமுக மாறிவிட்டது என்பது வேதனையாக இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பழனிசாமி தலைமையிலான அதிமுக சரிவை சந்தித்து…