Close Menu
    What's Hot

    ஈரான் புரட்சிகர காவலர் படை அதிரடி;  ஹார்முஸ் நீரிணையை மூடியது  

    தப்பு செஞ்சா.. தவெகவினரா இருந்தாலும் கடும் நடவடிக்கை பாயும்..!! அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!!

    சீசன் உச்சக்கட்டத்தில் குற்றால அருவிகள்..!! சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»நாயகன் திரைப்படம் மறு வெளியீட்டுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
    சினிமா

    நாயகன் திரைப்படம் மறு வெளியீட்டுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nayagan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர் கமல்ஹாசனின் நாயகன் திரைப்படம் மறு வெளியீட்டுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1987 ம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படம், நடிகர் கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், படத்தின் வெளியீட்டு உரிமை பெற்றுள்ளதாகக் கூறி, எஸ் ஆர் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் எஸ் ஆர் ராஜன், நாயகன் படத்தின் மறு வெளியீட்டுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், நாயகன் திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை 2023 ம் ஆண்டு ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து படத்தினை வெளியிடும் உரிமையை கடந்த 2023 அன்று பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    இதனை மறைத்து V.S.பிலிம் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் நாயகன் திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளதால், தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமார், ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே படம் மறு வெளியீடு செய்யப்படுவதால், நாயகன் படம் மறு வெளியீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டார்.

    அதேசமயம், மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஏடிஎம் புரொடக்‌ஷன்ஸ், வி.எஸ். பிலிம்ஸ் இண்டர்னேஷனல் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டுள்ளார். விசாரணையின் போது, நாயகன் படத்தை 16 முறை பார்த்துள்ளதாகவும், காட்சி வாரியாக தன்னால் இப்போது சொல்ல முடியும் எனவும் நீதிபதி செந்தில்குமார் குறிப்பிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
    Next Article மாநிலத்துக்கு ஏற்ற வகையில் கல்வித்திட்டங்களை செயல்படுத்த அனுமதிக்க வேண்டும்… அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சு
    Editor TN Talks

    Related Posts

    அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம்

    June 14, 2026

    நடிகர் ஜீவாவின் புதிய பட அப்டேட்!

    June 13, 2026

    ‘எல்லாம் இனிதே’!- ‘சேயோன்’ புதிய புகைப்படம் வெளியீடு!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஈரான் புரட்சிகர காவலர் படை அதிரடி;  ஹார்முஸ் நீரிணையை மூடியது  

    தப்பு செஞ்சா.. தவெகவினரா இருந்தாலும் கடும் நடவடிக்கை பாயும்..!! அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!!

    சீசன் உச்சக்கட்டத்தில் குற்றால அருவிகள்..!! சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்..!!

    தூத்துக்குடி மீனவர்கள் உற்சாகம்..!! 61 நாள் தடைக்காலத்துக்குப் பின் நாளை அதிகாலை மீன்பிடி தொடக்கம்..!!

    தவெகவினர் தற்குறி அல்ல, அவர்கள் குறிவைத்து தாக்கும் அம்புக்குறி..!! ராகவா லாரன்ஸ் அதிரடி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.