Author: Editor TN Talks
ஓபிஎஸ் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, திமுகவில் இணைந்துள்ளார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ மனோஜ் பாண்டியன். அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்துவந்தார். இவர் சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.எச். பாண்டியனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக ஒருங்கிணைப்புக்கான முயற்சிகள் கைகூடாத நிலையில் சில மாதங்களாகவே அதிருப்தியில் இருந்த மனோஜ் பாண்டியன், திமுகவில் சேர முடிவு செய்தார். இதையடுத்து நேற்று சென்னை அறிவாலயம் வந்த மனோஜ் பாண்டியன், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திராவிடக் கொள்கைகள், தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். என்னுடைய எஞ்சிய வாழ்க்கையிலும் இந்த திராவிட கொள்கையைப் பாதுகாக்கும் இயக்கத்தில் பணியாற்ற வந்துள்ளேன். தொண்டர்களின் உழைப்பை அங்கீகரிக்காதவர் பழனிசாமி. பாஜக வுடன் தற்போது எந்த அடிப்படையில் கூட்டணி வைத்தார் என்று தெரியவில்லை. எந்தக் கொள்கைக்காக அதிமுக உருவாக்கப்பட்டதோ, அது…
வாக்காளர் பட்டியல் தவறுதலாக வந்துவிடாமல் தடுக்க வேண்டிய கடமை ஆளும் கட்சியான திமுகவுக்கு இருப்பதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நவம்பர் 4-ம் தேதி முதல் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிஹாரில் இப்பணியை மேற்கொள்ளும் போது, லட்சக்கணக்கான வாக்காளர்கள் விடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் எஸ்ஐஆர் பணிகள் எந்தவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் இடமின்றி நேர்மையாக நடைபெற வேண்டும். அதேசமயம், டிசம்பர் 4-ம் தேதிக்குள் பல கோடி வாக்காளர்களின் அனைத்து தரவுகளையும் சரிபார்த்து எப்படி இந்த பட்டியல் தயாரிக்கப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. கிராமங்களில் மக்கள் காலையிலேயே பணிகளுக்குச் சென்றுவிடுவார்கள். அப்படி இருக்கும் போது ஒரு மாத காலத்தில் 6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களை எப்படி தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், சந்தித்து அவர்கள் வழங்கும் படிவங்களை பூர்த்திசெய்து கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. படிவங்களை…
“தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்ட 250 பக்க கடிதத்தில் முக்கியமான விஷயங்கள் இருக்கிறது, அதை வெளியில் சொல்ல முடியாது. அதிமுகவில் இருந்து என்னிடம் உறுதியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது” என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, உண்மையான அதிமுக இல்லை என தேர்தல் ஆணையத்திடம் சொல்லி இருப்பது எந்த அடிப்படையில் என்ற கேள்விக்கு, “பின்னால் இதுகுறித்து நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். எனது அடுத்தக்கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள். நல்லதே நடக்கும்.என பதிலளித்தார். இரட்டை இலை சின்னம் குறித்து விசாரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு, “தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த கடிதத்தில் 250 பக்கம் இருக்கிறது, அதை வெளியில் சொல்ல முடியாது, அதில் முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்து இருப்பதை வெளியில் சொல்லக்கூடாது எனவும் விதிகள் இருக்கிறது.” என…
தமிழக அரசின் புதிய மினி பஸ் திட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் போக்குவரத்து வசதியில்லாத கிராமப்புறங்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில், புதிய மினி பஸ் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக 2025 ஏப்ரலில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தனியார் பஸ் ஆப்பரேட்டர்கள் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, புதிய மினி பஸ் திட்டத்தால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பஸ் ஆப்ரேட்டர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் ஹேமன்சந்தன் கெளடா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஏற்கெனவே திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டு, 1,350 பேருந்துகள் உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும், 500 விண்ணப்பங்கள் பரிசீலினையில்…
ஹரியானாவில் உள்ள 2 கோடி வாக்காளர்களில், 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டன. ஹரியானா தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாலேயே காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “ ஹரியானா சட்டப்பேரவை தேர்தலின்போது அனைத்து கருத்துக்கணிப்புகளும், கள நிலவரங்களும் காங்கிரஸ்தான் வெற்றிபெறும் என சொன்னது. ஆனால், முறைகேடுகள் நடந்ததால் காங்கிரஸால் வெற்றிபெற முடியவில்லை. ஹரியானாவில் தபால் வாக்குகளின் எண்ணிக்கை தேர்தல் முடிவுகளுடன் பொருந்தவில்லை. ஹரியானாவில் நடந்தது ஆட்சித் திருட்டு. ஜென் ஸீ தலைமுறையினர் வாக்கு திருட்டு குறித்து புரிந்துகொள்ள வேண்டும். வாக்கு திருட்டு மூலம் ஜென் ஸீ இளம் வாக்காளர்களின் எதிர்காலம் அழிக்கப்படுகிறது. ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. ஹரியானாவில் பிரேசில் பெண் மாடலின் படம் பல பெயர்களில் வாக்காளர் பட்டியலில் இருந்தது. ஹரியானாவில் உள்ள 2 கோடி வாக்காளர்களில், 25 லட்சம்…
உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சுனார் சந்திப்பில் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி 6 பயணிகள் உயிரிழந்தனர். சுனார் ரயில் நிலையத்தில் இன்று காலையில் சோபன் – பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் வந்தடைந்தனர். ரயில் 4-வது நடைமேடையில் நின்றதும், அந்த ரயிலிலிருந்து இறங்கிய சில பயணிகள் குறுக்கு வழியில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது, மூன்றாவது பிளாட்பார்ம் வழியாகச் செல்லும் கல்கா மெயில் ரயில் அவர்களின் மீது மோதியது. இதில் பெண் பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த பயணிகளின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து முதல்வர் யோகி ஆதித்யநாத், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்வதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்துக்கு ‘வாரணாசி’ எனத் தலைப்பிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நவம்பர் 15-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் படக்குழுவினர் மட்டுமே பங்குபெற உள்ளனர். இந்த நிகழ்வினை நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமையினை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இப்படத்துக்கு ‘வாரணாசி’ எனத் தலைப்பிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தலைப்பின் உரிமை இன்னொருவரிடம் இருந்திருக்கிறது. அவரை தேடிப்பிடித்து அவரிடம் இருந்து அனைத்து மொழி உரிமையினையும் ராஜமவுலி படக்குழு கைப்பற்றி இருக்கிறது. இதனால் ‘வாரணாசி’ தான் தலைப்பு என்று உறுதியாகி இருப்பதாக பலரும் குறிப்பிட்டு வருகிறார்கள். இந்தியாவில் அதிக பொருட்செலவில் உருவாகும் படமாக இப்படம் அமைந்துள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். விரைவில்…
பிரபல ஹாலிவுட் நடிகை டயான் லாட் (வயது 89).1950-களில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய டயான் லாட், ஹாலிவுட் திரைப்படங்களில் பல வலிமையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஹாலிவுட்டில் வெளியான, `சைனா டவுன்’, `கோஸ் ஆப் மிஸிஸிப்பி’, `பிரைமரி கலர்ஸ்’, `28 டேஸ்’, உள்பட பல திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். ‘ஆலிஸ் டஸ் நாட்ன்லிவ் ஹியர் எனிமோர்’, ‘வைல்ட் அட் ஹார்ட்’, ‘ராம்ப்ளிங் ரோஸ்’ ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக மூன்று முறை ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். இருந்தாலும் அவருக்கு கிடைக்கவில்லை. இவர் மகள் லாரா டெர்னும் பிரபல நடிகை ஆவார். `ஒயிட் லைட்னிங்’, ‘வைல்ட் அட் ஹார்ட்’, ‘சிட்டிசன் ரூத்’, ‘டாடி அண்ட் தெம்’ போன்ற சில படங்களில் இருவரும் தாய்- மகளாக நடித்தனர். கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த டயான் லாட் திங்கட்கிழமை காலமானார். இதை அவர் மகள் லாரா டெர்ன் உறுதிப்படுத்தி, அஞ்சலியையும் வெளியிட்டுள்ளார். அவர்…
நடிகர்கள் குறைவாக சம்பளம் வாங்க வேண்டும் என்று விஷ்ணு விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து தயாரித்து வெளியான படம் ‘ஆர்யன்’. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் முதல் 3 நாட்கள் நன்றாக இருந்தது. மேலும், இதன் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமமும் விற்கப்பட்டு விட்டதால் விஷ்ணு விஷாலுக்கு லாபகரமான படமாகவே ‘ஆர்யன்’ அமைந்தது. இதனை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள். இதில் “ஒரு படத்தின் கதையில் நாயகனாக அல்லது தயாரிபபாளராக எதில் தலையிடுவீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஷ்ணு விஷால், “நான் தலையிடாத அனைத்து சினிமாவும் வெற்றியடைவது இல்லை. சினிமாவை பொறுப்புணர்வுடன் பார்க்கிறேன். எனது தயாரிப்பு மட்டுமல்ல, நடிகனாகவும் என்னுடைய பொறுப்பு இருப்பதாக நம்புகிறேன். ஏனென்றால் இயக்குநருக்காக மட்டும் ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவதில்லை. படம் பார்க்கும் போது நடிகரைத் தான் திட்டுகிறார்கள். அப்படியிருக்கும்…
நவம்பர் 21ம் தேதி பெர்த்தில் தொடங்கும் ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் அதிரடி தொடக்க வீரர் சாம் கோன்ஸ்டாஸ் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் நீக்கப்பட்டுள்ளார். புதுமுக வீரர் ஜேக் வெதரால்ட் 15 வீரர்கள் கொண்ட அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 31 வயதாகும் ஜேக் வெதரால்ட் தொடக்க வீரர். தெற்கு ஆஸ்திரேலியா அணிக்கு ஆடுகிறார். பீபிஎல் டி20-யில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு ஆடுகிறார். பாகிஸ்தான் சூப்பர் லீகில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு ஆடினார். 76 முதல் தரப் போட்டிகளில் இவர் 5,269 ரன்களை 13 சதங்கள் 26 அரைசதங்கள் எடுத்துள்ளார். சராசரி 37.63. கடந்த ஷெஃபீல்ட் ஷீல்ட் உள்நாட்டுத் தொடரில் வெதரால்ட் 906 ரன்களை 50.33 என்ற சராசரியில் எடுத்து முன்னணி வீரராகத் திகழ்ந்தார். அணியிலிருந்து தூக்கப்படுவார் என்று எதிர்பார்த்த மார்னஸ் லபுஷேன் சமீபத்தில் குவீன்ஸ்லாந்து அணிக்காக 5 சதங்களை விளாசியதையடுத்து…