Close Menu
    What's Hot

    அமெரிக்காவில் சோக சம்பவம்: விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம்..!! 12 பேர் பரிதாப பலி..!!

    முடிவுக்கு வந்த பஞ்சாயத்து..!! அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்..!! டிரம்ப் சொன்ன ஹேப்பி நியூஸ்..!!

    உலகக்கோப்பை கால்பந்து: பலப்பரீட்சை நடத்திய நெதர்லாந்து – ஜப்பான்..!! டிராவில் முடிந்த மேட்ச்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»நடிகர்கள் குறைவாக சம்பளம் வாங்க வேண்டும்: விஷ்ணு விஷால்
    சினிமா

    நடிகர்கள் குறைவாக சம்பளம் வாங்க வேண்டும்: விஷ்ணு விஷால்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vishal vishnu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடிகர்கள் குறைவாக சம்பளம் வாங்க வேண்டும் என்று விஷ்ணு விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து தயாரித்து வெளியான படம் ‘ஆர்யன்’. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் முதல் 3 நாட்கள் நன்றாக இருந்தது. மேலும், இதன் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமமும் விற்கப்பட்டு விட்டதால் விஷ்ணு விஷாலுக்கு லாபகரமான படமாகவே ‘ஆர்யன்’ அமைந்தது.

    இதனை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள். இதில் “ஒரு படத்தின் கதையில் நாயகனாக அல்லது தயாரிபபாளராக எதில் தலையிடுவீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஷ்ணு விஷால், “நான் தலையிடாத அனைத்து சினிமாவும் வெற்றியடைவது இல்லை. சினிமாவை பொறுப்புணர்வுடன் பார்க்கிறேன். எனது தயாரிப்பு மட்டுமல்ல, நடிகனாகவும் என்னுடைய பொறுப்பு இருப்பதாக நம்புகிறேன்.

    ஏனென்றால் இயக்குநருக்காக மட்டும் ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவதில்லை. படம் பார்க்கும் போது நடிகரைத் தான் திட்டுகிறார்கள். அப்படியிருக்கும் போது அதை பொறுப்புடன் செய்ய வேண்டும். எந்த தயாரிப்பாளர், இயக்குநராக இருந்தாலும் போய் கதையில் உள்ள மாற்றங்களைச் சொல்வேன். அப்படியிருப்பதால் மட்டுமே இப்போது வரை எனது பெரும்பாலான படங்கள் வெற்றியடைந்து இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், ”தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுப்பதால், புதிய தயாரிப்பாளர்களுக்கு உங்களது அட்வைஸ் என்ன” என்ற கேள்விக்கு விஷ்ணு விஷால், “யாருக்கும் அட்வைஸ் சொல்ல வேண்டாம். எனது பரிந்துரை வேண்டுமானால் நடிகர்களுக்கு சொல்கிறேன். கொஞ்சம் சம்பளம் குறைவாக வாங்கச் சொல்வேன். அப்படியிருந்தால் மட்டுமே படத்தின் உருவாக்கத்திற்கு செலவு செய்ய முடியும்” என்று பதிலளித்துள்ளார்.

    vishnu vishal#cinema
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆஷஸ் முதல் டெஸ்ட்: கோன்ஸ்டாஸ் டிராப்- வெதரால்ட் என்ற புதுமுகம் அறிமுகம்!
    Next Article ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார்
    Editor TN Talks

    Related Posts

    விஜய் ஆண்டனியின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

    June 14, 2026

    யார் தெரு நாய்கள்..? ராகவா லாரன்ஸ் பேச்சால் கிளம்பிய புதிய சர்ச்சை..!!

    June 14, 2026

    அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம்

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அமெரிக்காவில் சோக சம்பவம்: விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம்..!! 12 பேர் பரிதாப பலி..!!

    முடிவுக்கு வந்த பஞ்சாயத்து..!! அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்..!! டிரம்ப் சொன்ன ஹேப்பி நியூஸ்..!!

    உலகக்கோப்பை கால்பந்து: பலப்பரீட்சை நடத்திய நெதர்லாந்து – ஜப்பான்..!! டிராவில் முடிந்த மேட்ச்..!!

    மகளிர் டி20 உலகக்கோப்பை: சுருண்டது பாகிஸ்தான்..!! இந்தியா அணி அபார வெற்றி..!!

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..! நாளை விசாரணை..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.