Author: Editor TN Talks

ஓபிஎஸ்ஸை நம்பி இபிஎஸ்ஸை பகைத்​துக் கொண்ட மனோஜ் பாண்​டியன், ஓபிஎஸ்​ஸின் நிலைமை மதில் மேல் பூனை கணக்​காக இருப்​ப​தால் தனக்​கான வழியைத் தேடிப் புறப்​பட்டு திமுக​வில் கலந்​து​விட்​டார். மனோஜ் பாண்​டிய​னுக்கு தேர்​தலில் சீட் உறுதி என்று உத்​தர​வாதம் அளித்​துத்​தான் அவரை திமுக​வுக்கு அழைத்து வந்​தா​ராம் அமைச்​சர் சேகர் பாபு. இந்த நிலை​யில், ஏற்​கெனவே ஆலங்​குளத்​தில் வெற்​றி​பெற்ற மனோஜ் பாண்​டிய​னுக்கு இந்த முறை அந்​தத் தொகு​திக்​குப் பதிலாக அம்பாசமுத்திரத்தை ஒதுக்க திமுக தலைமை பேசி​வைத்​திருப்​ப​தாக வந்து விழும் செய்​தி​கள், அம்​பாச​முத் திரத்​தில் மூன்று முறை தோற்​றும் அந்தத் தொகு​திக்​காக இன்​ன​மும் காத்​திருக்​கும் முன்​னாள் சபா​நாயகர் இரா.ஆவுடையப்​பன் வகையறாக்​களை கொஞ்​சம் திகைக்க வைத்திருக்கிறது. இதுகுறித்து நம்​மிடம் பேசிய நெல்லை மேற்கு மாவட்ட திமுக​வினர், “அம்​பாச​முத்​திரத்​தில் ஆவுடையப்​பன் தொடர்ச்​சி​யாக 3 முறை போட்​டி​யிட்டு தோல்​வியடைந்​துள்​ளார். மீண்​டும் அவரை அங்கு நிறுத்​தி​னால் ஜெயிப்​பது சிரமம் என்​ப​தால் தலைமை மனோஜ் பாண்​டியனை சாய்​ஸாக எடுத்திருக்​கலாம். அம்​பாச​முத்​திரத்​தில் நாடார் மற்​றும்…

Read More

பிஹாரில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அந்த மாநிலத்தில் நாளை 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பதற்றமான தொகுதிகளில் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பிஹாரில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் நிலவுகிறது. பிஹாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலா 101 தொகுதிகள், லோக் ஜன சக்தி – ராம் விலாஸ் – 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மெகா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, இந்திய கம்யூனிஸ்ட் – எம்எல் 20, விஐபி 15, இந்திய கம்யூனிஸ்ட்…

Read More

ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டம், முள்ளைய்ய பூடி மண்டலம், பண்டபல்லி எனும் கிராமத்தில் கிரிஜன ஆசிரம அரசு மகளிர் பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை நூற்றுக்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் பணியாற்றும் சுஜாதா எனும் ஆசிரியை, பாடம் சொல்லித் தரும் நேரத்தில் 2 மாணவிகளை அழைத்து, கால்களை பிடித்து விடச் செய்துள்ளார். அப்போது அந்த ஆசிரியை செல்போனில் பேசிக்கொண்டு நாற்காலியில் ஒய்யாரமாக சாய்ந்துகொண்டிருக்கும் ஒரு வீடியோ கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதைப் பார்த்த பெற்றோர்கள் பலர் அந்த ஆசிரியையின் செயலை கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த ஆசிரியையை ஸ்ரீகாகுளம் மாவட்ட கல்வித் துறை அதிகாரி ஜெகன்னாத் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Read More

தமிழகத்​தில் பல்வேறு வழி​பாட்​டுத் தலங்​களில் வேண்​டு​தல்​களை நிறைவேற்ற பக்​தர்​கள் தங்​களது தலை​முடியை காணிக்​கை​யாக செலுத்​து​வது வழக்கம். இந்த தலை​முடியை மொத்​த​மாக பெறு​வதோடு, வேறு வழிகளி​லும் தலை​முடியை பெற்று சில தொழில் அதிபர்​கள், அவர்​களது நிறு​வனம் மூலம் வெளி​நாடு​களுக்கு ஏற்​றுமதி செய்​கின்​றனர். இதன் மூலம் அவர்​களுக்கு அதிக வரு​மானம் கிடைக்​கிறது. இந்த தலை​முடி உலகள​வில்விக், ஹேர் எக்​ஸ்​டென்​ஷன் உள்​ளிட்ட பல்​வேறு வகை​யான சிகை அலங்​காரங்​களுக்கு பயன்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. சிகை அலங்​காரங்​கள் தயாரிக்க வெளி​நாட்டு நிறு​வனங்​கள் பயன்​படுத்​தும் மனித தலை​முடி பெரும்​பாலும் இந்​தி​யா​விலிருந்து செல்​வ​தாக கூறப்​படு​கிறது. இது ஒரு​புறம் இருக்க, அதிக வரு​மானம் கிடைப்​ப​தால் தலை​முடி இந்​தி​யா​விலிருந்து சட்ட விரோத​மாக கன்​டெய்​னர் லாரி​களில் எடுத்​துச் செல்​லப்​பட்டு மியான்​மர், வங்​கதேசம் மற்​றும் நேபாளம் வழி​யாக சீனா​வுக்கு கடத்​தப்​பட்​டு, அங்​குள்ள நிறு​வனங்​கள் இந்த முடியை பயன்​படுத்தி விக் தயாரித்து தங்​களது பிராண்​டு​களின் பெயரில் அவற்றை விற்​பனை செய்து பெரும் லாபம் ஈட்​டு​வ​தாக​வும் கூறப்​படு​கிறது. அசாம் தலைநகர் குவஹாட்​டியை…

Read More

முழங்​கால் காயம் காரண​மாக பிக் பாஷ் லீக்​கில் (பிபிஎல்) இருந்து ரவிச்​சந்​திரன் அஸ்​வின் விலகி உள்​ளார். இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீர​ரான ரவிச்​சந்​திரன் அஸ்​வின் வரும் டிசம்​பர் 14-ம் தேதி ஆஸ்​திரேலி​யா​வில் நடை​பெறும் பிக் பாஷ் லீக் டி 20 தொடரில் சிட்னி தண்​டர் அணிக்​காக அறி​முக வீர​ராக களமிறங்க இருந்​தார். இதற்​காக 39 வயதான அவர், சென்​னை​யில் பயிற்​சி​யில் ஈடு​பட்​டிருந்​தார். எதிர்​பா​ராத​வித​மாக அப்​போது அவருக்கு முழங்​காலில் காயம் ஏற்​பட்​டது. இதற்​காக அறுவை சிகிச்சை செய்​து​ கொண்​டுள்ள அஸ்​வின், காயத்​தில் இருந்து முழு​மை​யாக குணமடை​யும் வகை​யில் பிக் பாஷ் லீக்​கில் இருந்து வில​கு​வ​தாக அறி​வித்​துள்​ளார்​.

Read More

‘உனக்காக, என் மனைவியை கொன்று விட்டேன்’ என, காதலிக்கு பெங்களூரு டாக்டர் மகேந்திர ரெட்டி குறுந்தகவல் அனுப்பியது தெரியவந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு, மாரத்தஹள்ளியைச் சேர்ந்தவர் டாக்டர் கிருத்திகா ரெட்டி, 28. இவருக்கு மயக்க மருந்து செலுத்தி கொன்றதாக, இவரது கணவரான டாக்ட ர் மகேந்திர ரெட்டி 36, கடந்த மாதம் மாரத்தஹள்ளி போலீசார் அவரை கைது செய்தனர். பல பெண்களுடன் உறவில் இருந்ததைக் கண்டித்த கிருத்திகாவை மகேந்திர ரெட்டி கொலை செய்ததாக, கிருத்திகா குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மனைவிக்கு உடல்நல பிரச்னைகள் இருந்ததால் ஏற்பட்ட வெறுப்பில், மயக்க ஊசி செலுத்தி கொன்றதையும், மாமனார் சொத்துகளை அபகரிக்க நாடகமாடியதையும், போலீஸ் விசாரணையில், மகேந்திர ரெட்டி ஒப்புக்கொண்டார். இதற்கிடையில், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட, இரண்டு மொபைல் போன்களை போலீசார் ஆய்வு செய்தனர். பெரும்பாலான குறுந்தகவலை அனுப்பிய பின் அழித்தது தெரிந்தது. அழித்த தகவல்களை மீட்டெடுக்க, தடயவியல் ஆய்வகத்திற்கு மொபைல் போன்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து,…

Read More

எஸ்​ஐஆர் விவ​காரத்​தில் தேவையற்ற வேலை​யைச் செய்​யும் பாஜக, பதற்​ற​மாகவே வைத்​திருக்க நினைப்​ப​தாக நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தெரி​வித்​தார். இது குறித்து நேற்று திருச்​சி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: பெண்​களுக்கு எதி​ரான பாலியல் துன்​புறுத்​தல் என்​பது கோவை​யில் நடந்த இது ஒரு நிகழ்​வல்ல. பல நிகழ்​வு​கள் வெளியே தெரி​யாமல் உள்​ளது. தமி​ழ​கத்​தில் பெண்​களுக்கு எதி​ரான பாலியல் குற்​றங்​கள் தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது. 6 வயது குழந்​தையை வன்​புணர்வு செய்து எரித்​துக் கொலை செய்​து​விட்டு சிறையி​லிருந்து வந்​தவன் பெற்ற தாயை கொலை செய்​கி​றான். அவனை நீதி​மன்​றம் தண்​டனையை நீக்கி விடுவிக்​கிறது. இதையெல்​லாம் பார்க்​கும்​போது இச்​சமூகம் வாழ வாய்ப்​பற்று கொடூர​மாகி​விட்​டதோ எனத் தோன்​றுகிறது. கோவை​யில் சம்​பவம் நடை​பெற்ற பகு​தி​யில் நீண்ட நாட்​களாக அதி​க​மாக மது விற்​பனை நடை​பெற்று உள்​ளது. காவல்​துறை சுட்​டுப் பிடித்​தோம் என்​கி​றார்​கள். இதற்கு நாம் அனை​வ​ரும் தலை​குனிய வேண்​டும். ஒரு பாது​காப்​பற்ற சூழலில் நாம் வாழ்ந்து கொண்​டிருக்​கி​றோமோ என்ற நடுக்​கம் ஏற்​படு​கிறது.…

Read More

தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்னம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோபி எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மின்னஞ்சலில் எழுத்துபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக கே.ஏ.செங்கோட்டையன் உள்ளார். இவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் சென்று தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். இதையடுத்து செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில், ‘தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்னம் குறித்த விவகாரத்தை விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமை பொறுப்பில் உள்ளதாக கூறும் அதிமுகவின் பிரிவு உண்மையில் அக்கட்சி அல்ல. கட்சியின் உண்மை நிலை என்ன என்பதை நிரூபிக்க கால அவகாசம் வேண்டும்’ என தேர்தல்…

Read More

ஆசிரியர்​கள், பணி​யாளர்​கள் மீதான போக்சோ வழக்​கு​களில் விரைந்து விசா​ரணை நடத்தி முடிக்க வேண்​டுமென அலுவலர்​களுக்​கு, அமைச்​சர் அன்​பில் மகேஸ் உத்​தர​விட்​டுள்​ளார். தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை​யின் அலு​வல் ஆய்​வுக் கூட்​டம் அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி தலை​மை​யில், சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் துறை ​சார்ந்த இயக்​குநர்​கள், முதன்​மை, மாவட்​டக் கல்வி அலு​வலர்​கள் கலந்து கொண்​டனர். கூட்​டத்​தில் அரசின் நலத்திட்டங்​கள், பொதுத்​தேர்வு மற்​றும் பரு​வ​மழை கால முன்​னேற்​பாடு​கள் உள்​ளிட்ட பல்​வேறு அம்​சங்​கள் தொடர்​பாக விவாதிக்கப்பட்டது. அதன்​பின், அமைச்​சர் அன்​பில் மகேஸ் பேசி​ய​தாவது: பொதுத்​தேர்வு தேதி​கள் அறிவிக்​கப்​பட்​டு​விட்​ட​தால், உரிய காலத்​துக்​குள் பாடப்​பகு​தி​களை திட்​ட​மிட்டு நடத்தி முடிக்க வேண்​டும். மழைக்​கால முன்​னெச்​சரிக்கை வழி​காட்​டு​தல்​களை பின்​பற்றி நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும். ஓய்​வு​பெற்ற அலு​வலர்​கள், ஆசிரியர்​கள், பணி​யாளர்​களுக்கு உரிய பணப் பலன்​களை உரிய காலத்​தில் வழங்க வேண்​டும். கற்​றல் அடைவுத் தேர்​வில் பெற்ற மாவட்ட தேர்ச்சி அறிக்​கையை ஆய்வு செய்து பின்​தங்​கிய பள்​ளி​கள் மீது கவனம் செலுத்தி கற்​பித்​தலை…

Read More

தமிழகத்தில் 7 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்​ளது இது தொடர்​பாக மைய இயக்​குநர் செந்​தாமரைக் கண்​ணன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: மத்​திய கிழக்கு வங்​கக் கடல் மற்றும் அதை யொட்​டிய மியான்மார் கடலோரப் பகு​தி​களில் நில​விய காற்​றழுத்​தத் தாழ்​வுப் பகு​தி, ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்​வுப்பகு​தி​யாக வலுப்​பெற்​றது. இது, வடகிழக்கு மற்​றும் அதையொட்​டிய மத்​திய கிழக்கு வங்​கக் கடல் – மியான்​மார் கடலோரப் பகு​தி​களில் நில​வு​கிறது. மத்​தியமேற்கு வங்​கக்​கடல்பகு​தி​களில் ஒரு வளிமண்டலகீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது.இதன் காரண​மாக இன்று வட தமிழகத்​தில் சில இடங்​கள், தென் தமிழகத்​தில் ஓரிரு இடங்​கள் மற்​றும் புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை, புதுக்​கோட்​டை, அரியலூர் மற்​றும் திருச்சி ஆகிய 7 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்​ய​வாய்ப்​புள்​ளது.

Read More